Periyava Golden Quotes-986


பெங்காலில் விதவைகள் எத்தனை கடுமையாக ஏகாதசி வ்ரதாநுஷ்டானம் பண்ணுகிறார்கள் என்பதைப் பார்த்து அதை நாமும் கொஞ்சமாவது ‘எமுலேட்’ பண்ண முயல வேண்டும். பெங்கால்காரர்கள் மத்ஸ்ய ப்ராம்மணர்கள்தான்; ஆனால் விதவைகள் அந்த ஸாமானைத் தொடமாட்டார்கள். அதோடு ஏகாதசியை அவர்களே மற்ற எவரையும் விடத் தீவிரப் பற்றுடன் அநுஷ்டிக்கிறார்கள். வாயில் சொட்டுப் பச்சைத் தண்ணி கூட விடாமல் அன்று வ்ரதமிருக்கிறார்கள். அங்கே கோடையில் கோட்டையடுப்பு மாதிரி ஊர் முழுக்க நெருப்புக் காற்று அடிக்கிற போதுகூட, வாய் அப்படியே உலர்ந்து வறண்டு ஒட்டிக் கொண்டாலும் அந்த விதந்துக்கள் சொட்டுத் தீர்த்தங்கூட விட்டுக் கொள்வதில்லை என்று பிடிவாதமாயிருப்பது வழக்கம். இதில் உஷ்ணம் தாங்காமல் அநேகம் பேர் செத்தே போனார்கள். இந்த மாதிரி விடக்கூடாது என்று பண்டிதர்களையெல்லாம் கூட்டி ஒரு ஸதஸ் நடத்தி சாஸ்த்ர ப்ரகாரமே கடுமையான உபவாஸ விதியைக் கொஞ்சம் இளக்கித் தர வழி இருக்கிறதா என்று பார்க்க முடிவு செய்தார்கள். ‘மிஞ்சிப் போனால் ஏதாவது பானம், கீனம் பண்ணாலமென்று சாஸ்திரத்திலேயே இருந்தால்கூட நாங்கள் அன்று வாயில் எதையும் விட்டுக் கொண்டு முழுங்க மாட்டோம்; செத்தாலும் சாவோம்’ என்று அந்த விதவைகள் சொல்லி விட்டார்களாம். இதன்மேல் அந்தப் பண்டிதர்கள் சாஸ்திரங்களைப் பார்த்து, ‘ஸரி, ஏகாதசியன்று வாயில் தீர்த்தம் விட்டுக் கொள்ள வேண்டாம்; காதில் விட்டுக் கொள்ளட்டும். அதனால் பிழைக்கிறவர் பிழைக்கட்டும்’ என்று தீர்மானம் செய்தார்களாம். அத்தனை கடுமையான அநுஷ்டானம் அங்கே இருந்திருக்கிறது.  ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்

We should observe how severely widows of Bengal observe the Ekadasi fasting and try to emulate at least a little.  Bengalis are matsya brahmins only (fish eating).  However, the widows will not touch that item at all.  Ekadasi vow is observed more passionately only by them than anyone else.  They observe the Vrata without even a drop of water touching their tongues.  Even in summer seasons, when hot air blows through the entire place like a furnace and the mouth gets parched, those widows are adamant in their practice that not even a drop of water should be taken. Not able to bear the heat, many people have even died.  With the idea of not allowing this to continue, the people decided to convene a meeting of Vedic scholars to see whether it was possible to relax the strict rules of fasting at least a little, as per Sastras itself.  However, the widows declared that even if there was a relaxation to take some juice or something, they would not gulp anything like that in their mouths but would rather die.  The scholars, after going through the Sastras, took a decision that let them not have water through their mouths on Ekadasi day but at least have it through their ears so that at least some might survive.  Such severe penances have been practised there. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal



Categories: Deivathin Kural, Golden Quotes

Tags:

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading