Periyava Golden Quotes-985

மற்ற வியாதிகளுக்கும் இந்த ‘க்ஷுத் வியாதி’க்கும் ஒரு வித்யாஸம், தலைவலிக்கு மருந்து போட்டால் அது போய் விடுகிறது; மறுபடி என்றைக்கோ ஒரு நாள்தான் வருகிறது. ஜ்வரமும் இப்படித்தான். ஆனால் இந்தப் பசி வியாதி மட்டும் இப்போது மருந்து போட்டு ஸ்வஸ்தப்படுத்தி விட்டாலும், வேளை தப்பாமல் மறுபடி மறுபடி ‘அட்டென்டன்ஸ்’ கொடுத்துக் கொண்டேயிருக்கிறது! இப்படி இயற்கையை ஏவிவிட்டு ஈஸ்வரன் வேடிக்கை பார்க்கிறான். நமக்குப் பரீக்ஷை வைக்கிறான். நாம் பாஸ் பண்ணினால்தான் பெருமை. அவனுடைய அருள் துணையை நம்பி, நாம் ஸங்கல்பம் பண்ணிக் கொண்டு உறுதியாயிருந்தால், அவன் கைகொடுத்துப் பாஸ் பண்ண வைத்து, நல்லாரோக்யம், நல்ல ஆத்மாபிவிருத்தி முதலான ப்ரைஸ்களையும் கொடுப்பான்.

நம்முடைய த்ருட சித்தம் முக்யம். எங்கேயோ ஒரு இடத்துக்குப் போகிறோம். அவர்கள் விலக்கப்பட்ட பதார்த்தம் எதையோ உபசாரம் பண்ணிச் சாப்பிடச் சொல்கிறார்கள். அந்த ஸமயத்தில் தாக்ஷிண்யத்தாலோ, அவர்கள் தப்பாக நினைக்கப் போகிறார்களே என்றோ அதைச் சாப்பிட்டுவிடக் கூடாது. ப்ரின்ஸிபிளை விடக் கூடாது. – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்

There is a difference between the other illnesses and this recurrent illness.  If balm is applied, headache will disappear.  Again it may recur some other day, only after a long time.  Same with fever too.  But this illness of hunger, even if satisfied with the medicine, keeps coming back and gives attendance repeatedly without skipping even one time.  Bhagawan is watching the fun instigating the nature like this. He is testing us.  It will be great only if we pass (the test).  If we resolve ourselves and be steadfast, placing faith on the support of His blessings, He will lend his helping hand, make us pass and give prizes in the form of good health, development of inner self, etc.

Our steadfastness/resolve is very important.  We visit some place.  There, we may be courteously offered an item of food which is prohibited to be taken.  We should not eat that item out of fear of being discourteous or that they may mistake us.  We should not compromise on the principle. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal



Categories: Deivathin Kural, Golden Quotes

Tags:

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading