Periyava Golden Quotes-984

வைகுண்ட ஏகாதசி, மஹா சிவராத்ரி, கோகுலாஷ்டமி, ராமநவமி முதலிய விசேஷ நாட்களில் கூட நாம் வாயைக் கட்டாமல், வயிற்றைச் கட்டாமலிருந்தால் அது இந்த தேசத்தில் பிறந்த நமக்கு ரொம்பக் குறைவாகும். வயிறு குறைந்தாலும் மனஸ் நிறையும்படிப் பண்ணிக் கொள்வதே நமக்கு நிறைவு. அப்படிப் பண்ணிக் கொள்வதற்கான ஸங்கல்ப பலத்தை பகவான் எல்லாருக்கும் அநுக்ரஹிக்க வேண்டும்.

வியாதிக்கு மருந்து மாதிரி பசிக்குச் சாப்பாடு ரொம்பவும் அளவாகத்தான் போட வேண்டும். அதாவது பசியைத் தீர்த்துக் கொள்ளத்தான் ஆஹாரமே தவிர ருசியைத் தீர்த்துக் கொள்ள அல்ல என்று ஆசார்யாள் சொல்லியிருப்பதாகச் சொன்னேன். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்

If we are not able to control our tongue and stomach even on auspicious days like Vaikunta Ekadasi, Gokulashtami, Sri Rama Navami, and Maha Sivarathri it is a great shortcoming for us who are born in Bharatha Desam. Even if our stomach is empty we need to ensure our mind is full and satisfied. Bhagawan should give us all the will power to make it happen.

Just as medicines are taken for illnesses, food should be taken only in limited quantity for satisfying the appetite.  That is, I mentioned that Aacharyal has said that food is to satisfy only the appetite and not for satisfying the taste buds. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal



Categories: Deivathin Kural, Golden Quotes

Tags:

Leave a Reply

%d bloggers like this: