Periyava Golden Quotes-982


மூன்றாவது ஏகாதசி தை க்ருஷ்ண பக்ஷத்தில் வரும் ‘ஸபலா’. நாலாவது அம்மாவாஸை சுக்ல பக்ஷத்தில் வருகிற ‘புத்ரதா’. ஐந்தாவது மாசி க்ருஷ்ண பக்ஷத்தில் வரும் ‘ஷட்திலா’. ஆறாவது அம்மாஸம் சுக்லபக்ஷத்தில் வரும் ‘ஜயா’. இப்படியே வரிசையாக பங்குனி, சித்திரை, வைகாசி, ஆனி மாஸங்களில் ‘விஜயா’, ‘ஆமலகீ’, ‘பாப மோசனிகா’, ‘காமதா’, ‘வரூதினீ’, ‘மோஹினி’, ‘அபரா’, ‘நிர்ஜலா’ என்று எட்டு ஏகாதசிகள் வருகின்றன. பீமன் வருஷத்தில் ஒரே ஒரு தரம் சுத்தோபவாஸமிருந்தது ‘நிர்ஜலா’ என்ற இந்த ஆனி மாஸ சுக்லபக்க்ஷ ஏகாதசியன்றுதான். இதோடு பதினாலு ஏகாதசிகள் ஆகிவிட்டன. பதினைந்தாவதாக ஆடி க்ருஷ்ண பக்ஷத்தில், ‘யோகினி’ என்பது. அடுத்தது ஆடி சுக்ல பக்ஷத்தில் மஹாவிஷ்ணு சயனிக்க ஆரம்பிக்கிற சாதுர்மாஸ்ய ஆரம்பத்தில் வருகிற ஏகாதசி*. அதற்கு ‘சாயினி’ என்று பெயர். அப்புறம் ஆவணி, புரட்டாசி. ஐப்பசி மாஸங்களில் வரும் ‘சாமிகா’ ‘புத்ரதா’ (முன்னையே தையில் ஒரு ‘புத்ரதா’ வந்து விட்டது. இங்கே மறுபடியும் அதே பெயர்தான் போட்டிருக்கிறது), ‘அஜா’, ‘பத்மநாபா’, ‘இந்திரா’, ‘பாபாங்குசா’ என்ற ஆறு ஏகாதசிகளின் போதும், கார்த்திகையில் க்ருஷ்ண பக்ஷத்திலே வரும் ‘ரமா’ என்ற ஏகாதசியின் போதும் பகவான் நித்திரை பண்ணிக் கொண்டேயிருக்கிறார். இருபத்து நாலாவதாக வருகிற கார்த்திகை சுக்லபக்க்ஷ ஏகாதசியன்று அவர் விழித்துக் கொள்கிறார். அதனால் அதற்கு ‘ப்ரபோதினி’ என்றே பெயர் மறுநாளோடு சாதுர்மாஸ்யம் பூர்த்தி.

அதிகப்படியாக வரும் இருபத்தைந்தாவது ஏகாதசிக்கு ‘கமலா’ என்று பெயர். –  ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்

The third is the ‘Sapala’, occurring in the Krishna Paksha of Thai (Jan-Feb) month. The fourth is ‘Puthratha’, occurring in the Sukla Paksha in that month.  The fifth is ‘Shatthila’ occurring in Krishna Paksha of Masi (Feb-Mar).  Sixth is the ‘Jaya’ occurring in Sukla Paksha in that month.

‘Vijaya’, “Amalaki’, ‘Papa Mosanika’, ‘Kamatha’, ‘Vrudhini’, ‘Mohini’, ‘Apara’ and ‘Nirjala’ are the eight Ekadasis occurring in Panguni (Mar-Apr), Chithrai (Apr-May), Vaikasi (May-June), Aani (June-July) months in that order.  The Ekadasi, Bheema had observed complete fast only once, was this ‘Nirjala’, occurring in Sukla Paksha of Aani month. With this fourteen Ekadasis have been mentioned.  The fifteenth is ‘Yogini’ occurring in Krishna paksha of Aadi month (July-Aug).  Next is the Ekadasi* coming in the Sukla Paksha of Aadi month, the beginning of Chathurmasya, when Maha Vishnu begins to rest.  It is called, ‘Saayini’.

Bhagawan continues to be in rest during the period of six Ekadasis, ‘Saamika’, ‘Puthratha’ (already one ‘Puthratha’ was there in Thai month, the same name is repeated here), ‘Aja’, ‘Padmanabha’, ‘Indira’, Papangusa’, occurring in Avani (Aug-Sep), Purattasi (Sep-Oct), Ippasi (Oct-Nov) respectively and in ‘Rama’ the Ekadasi which comes in Krishna Paksha of Karthigai (Nov-Dec).  Bhagawan wakes up on the Ekadasi which is the twenty-fourth occurring in Sukla Paksha of Karthigai. It is therefore, called by the name, ‘Prabhodhini’.  Chathurmasya ends with the following day.

The name of the extra, twenty fifth Ekadasi is ‘Kamala’.  – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal



Categories: Deivathin Kural

Tags:

What do you think?

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: