The Supreme Sage who walked behind the Cow



Jaya Jaya Sankara Hara Hara Sankara – We all need to take a cue from our Periyava on the immense respect he had for Sastras and his reverence towards Mother Cow. Also, in this hour of crisis we should lend our maximum support to mother cow by pitching in for the rescue efforts and struggling Ghosalas.

Many Jaya Jaya Sankara to Shri ST Ravikumar for the translation. Rama Rama


04 /04 /2018  குமுதம் இதழிலிருந்து

“பசுமாட்டின் பின்னே நடந்த பரமஞானி!”

மகாபெரியவா பக்தி யாத்திரைகள் மேற்கொள்ளும் சமயத்தில் வழியில் பல இடங்களில் தங்குவார்.

அந்த மாதிரியான சமயங்களில் பக்தர்கள் பலரும் தங்கள் இருப்பிடத்துக்கோ அல்லது தங்கள் பகுதியில் உள்ள கோயிலுக்கு எழுந்தருளும்படி ஆசார்யாகிட்டே வேண்டிக் கொள்வார்கள்.

பெரும்பாலும் பக்தர்கள் அழைக்கிற இடம் கோயிலாக இருந்தால், மகாபெரியவா மறுக்காம ஏற்றுக்கொண்டு அங்கே சென்று சுவாமி தரிசனம் செய்துவிட்டு, பக்கத்துலேயே ஏதாவது ஒரு இடத்துல சிறிது நேரமோ அல்லது ஒரு நாளோ தங்கி பக்தர்களுக்கு தரிசனம் தருவார். சில சமயங்கள்ல அந்த இடத்துல ஏதாவது உபதேசம், பொதுவான அறிவுரையாக பண்ணுவதும் உண்டு.

அந்தவகையில் மகாபெரியவா ஒரு சமயம் தமிழகம் முழுக்க திவ்ய யாத்திரை மேற்கொண்டு இருந்தார். அப்போ வழியில திருச்சிராப்பள்ளியில சில நாட்கள் தங்கலாம்னு தீர்மானிச்சார், மகாபெரியவா.

ஏராளமான பக்தர்கள் மகாபெரியவாளை தினம் தினம் தரிசிச்சாங்க.  கனிவர்க்கம், புஷ்பங்கள், மடத்துக்குத் தேவையான பொருட்கள் இப்படி ஒவ்வொருத்தரும் அவர்களால் இயன்றதை காணிக்கையாக செலுத்தினாங்க.

அந்த பக்தர்கூட்டத்துல திருச்சியில் இருந்த காலேஜ் ஒன்றின் தலைவரும் இருந்தார். அவரோட முறை வந்த சமயத்துல நிறைய பழங்களையும் புஷ்பங்களையும் மகாபெரியவா திருவடியில காணிக்கையாக செலுத்தினார். தங்களோட கல்லூரியில் மகாபெரியவாளின் பொற்பாதம் பட வேண்டும், குழந்தைகளுக்கு ஆசி வழங்க வேண்டும் என்று விண்ணப்பித்தார்.

மோனகுருவான மகா பெரியவா அவருக்கு பதில் ஏதும் சொல்லவில்லை. அவரும் தினமும் வந்து தொடர்ந்து அதே கோரிக்கையை விண்ணப்பித்தவாறே இருந்தார்.

கருணா மூர்த்தியான மகாபெரியவாளோட கனிவு ஒருநாள் அவருக்குக் கிடைத்தது. அன்றைய தினம் அவருக்கு கல்கண்டும் குங்குமமும் பிரசாதமாக குடுத்த ஆசார்யார்,  “நாளைக்கு கார்த்தால உன் காலேஜூக்கு வரேன். நீயும் உன் மனைவியும் ஒரு பசு மாடு, கன்றுக்குட்டியோட காத்திருங்கோ!” அப்படின்னு சொன்னார்.

அந்த பக்தருக்கு அளவிலா மகிழ்ச்சி. “அப்படியே செய்யறேன்!”னு சொல்லிட்டு, சந்தோஷமா புறப்பட்டார்.

மறுநாள் சொன்ன மாதிரியே அந்த காலேஜுக்கு எழுந்தருளினார், மகா பெரியவா. அங்கே பசுமாடு, கன்னுக்குட்டி, பூரண கும்பம் எல்லாவற்றோடும் தயாராக இருந்தார், அந்த பக்தர். மகான் பூர்ணகும்ப வரவேற்பை அங்கீகரிச்சு, காலேஜ் வாசலுக்குப் போய் நின்னார்.

அந்த பக்தரிடம், “என் பாதம் எங்கெல்லாம் படணும்னு உனக்கு ஆசையோ, அங்கெல்லாம் இந்தப் பசுமாடு கன்றுக்குட்டியை பிடிச்சிண்டு நீ முன்னால போ, நான் பின்னாலேயே வரேன்!” என்றார்.

அப்படியே அந்த பக்தரும் அவர் மனைவியும் பசுவையும் கன்றையும் முன்னால் அழைத்துச்  செல்ல, மகாபெரியவா பின்னாலயே தன் திருவடியைப்  பதிச்சு நடந்தார். எல்லா இடமும் சென்று வந்ததும், காலேஜில் இருந்து வெளியே வந்து, “என்ன உனக்குத் திருப்தியாச்சா?” என்று மகான் கேட்க, அந்த ஆனந்தத்தைத் தெரிவிக்க வார்த்தைகள் வராமல், கண்கள் கடலாக, மனம் உருகி கருணைக்கு நன்றி தெரிவிப்பதற்காக சாஷ்டாங்க நமஸ்காரம் செய்தார், அந்த பக்தர்.

ஸ்ரீமடத்தின் ஜாகைக்குத் திரும்பிய மகான், மாலை அடியார்களிடம் பேசிக்கொண்டிருக்கும் பொழுது காலையில் காலேஜுக்கு போன் பேச்சும் வர, அங்கே இருந்த தொண்டர் ஒருவர், “பெரியவா ஏன் காலேஜுல பசு மாட்டு பின்னாலேயே போனேள்?” என்று கேட்டார்.

சிரித்த மகான், “அவன் எங்ககிட்ட ரொம்ப பக்தியாயிருக்கான். நான் வந்தா அவன் காலேஜுக்கு ச்ரேயஸ் (நல்லது) ன்னு நினைச்சு கூப்பிட்டான். ஆனால், அந்த காலேஜோ ஸ்த்ரீகள் (பெண்கள்) படிக்கிற காலேஜ். அவா எல்லா நாளும் காலேஜுக்கு வருவா. மாதம் விலக வேண்டிய நாளும் வரலாம். அதனால் தான் யோஜனை செய்தேன். அவன் ஆசையும் நிறைவேறணும். என் ஆசாரமும் கெடக்கூடாது. அதுக்கு ஒரே வழி, எந்தத் தீட்டாக இருந்தாலும் அந்த இடத்தில் கோ பாததூளி பட்டுட்டா, அந்த இடம் பரிசுத்தமாயிடறதா சாஸ்த்ரத்துல இருக்கு. அதனால, பசு மாட்ட முன்னால விட்டுட்டு அது பின்னாலேயே நானும் போயிட்டு வந்தேன்!”

மகான் சொன்னதைக்கேட்ட அனைவரும் பிரமிப்பிலிருந்து மீளவே இல்லை.  இப்படியும் தர்ம சூட்சுமமா? இப்படியும் அறம் வழுவா துறவு வாழ்க்கையா? நினைத்து நினைத்து நாமெல்லாம் ஆச்சர்யப்படலாம். அன்பையும் அறத்தையும் அழகாக இணைக்கும் வழிகாட்டி, குரு, ஆசார்யர் என்ற பெருமை, காஞ்சி மகாபெரியவாளைத் தவிர வேறு யாருக்கு இருக்கும்?

ஜெய ஜெய சங்கர! ஹர ஹர சங்கர! காஞ்சி சங்கர! காமகோடி சங்கர!

_____________________________________________________________________________________________________________

“Kadavulin Kural” – Tiruvarur Diwakaran

From the edition of Kumudam dated 04/04/2018

“The Supreme Sage who walked behind the cow”

While undertaking spiritual pilgrimages, Maha Periavaa would stay at various places.  During such times, many devotees would request him to either come to their residences or make a holy visit to the temple located in their area.

If the place the devotees are requesting to come is a temple, Maha Periavaa, would mostly accept it without declining and go over there, have Dharshan and would stay put in some place nearby, for some time or for a day and give Dharshan to the devotees.  Sometimes, he would also give some teachings or some general advice.

Once, Maha Periavaa was undertaking a holy pilgrimage like this throughout Tamilnadu.  He decided to stay at Tiruchirapally for a few days.

Lots of devotees had Dharshan of Maha Periavaa, every day.  They offered whatever they could afford, like fruits, flowers, materials required for Sri Matam etc.

Among that crowd of devotees, there was one, who was the Principal of one of the colleges in Trichy.  When his turn came, he offered lots of fruits and flowers at the lotus feet of Maha Periavaa.  He requested that the holy feet of Maha Periavaa should touch his college and that he should bless the children.

The silent Guru did not give him any response.  That man also came daily and continuously repeated his plea.

One fine day, he received the benevolence of the most compassionate Maha Periavaa.  While giving him the sugar candy and Kumkum as prasadam, Acharya told him, “I will come to your college tomorrow morning.  You and your wife, wait for me with a cow and a calf”.

The devotee became boundlessly happy.  After responding, “I shall certainly do it that way”, he left very happily.

Maha Periavaa, made his appearance at the college, as promised.  That devotee was waiting ready with the cow, calf, Purnakhumbha (vessel filled with holy water), etc. The Mahaan acknowledged the Purnakhumbha, reached the entrance of the college and stood there.

He told the devotee, “Wherever you wish that my feet should touch, you go in the front holding on to the cow and calf, I will follow”.

Accordingly, while the devotee and his wife lead the cow and calf in the front, Maha Periavaa, walked behind, placing his holy feet.  When the Mahaan asked, after covering all the places and coming out of the college, “Are you satisfied?”, the devotee, unable to get words to convey the happiness, with tears swelling in his eyes, heart completely melt, prostrated with all the eight limbs touching the ground, to convey his gratitude for the benevolence bestowed.

Having returned to Sri Matam, the great sage was speaking to his disciples in the evening, when the matter of the visit to the college in the morning came up and one of the volunteers asked, “Periavaa, Why did you go behind the cow in the college?”

Chuckling, the Mahaan said, “He is very devoted to me.  He called me, believing that it would be very beneficial to the college, if I came.  But the college is one where females (Girls) study.  They will come to college on all days.  Might come on those days also when they have monthly periods.  That is why, I thought of an idea.  His wish should also be fulfilled.  My observances should also not be affected.  There was only one solution for that.  It is there in the Sastras that whatever be the pollution, if the dust of hoof of a cow touches it, that place would become absolutely sanctified.  That is why, the cow was allowed to go in the front and I followed it and came back!”.

All the people who listened to what the Mahaan said, could not come out of the daze. We may keep thinking, could there be such an astute Dharma?  Could be there be a life like this, unfailing from Dharm and asceticism?  Who else than Kanchi Maha Periavaa could have the greatness of beautifully linking compassion with Dharma, a Guru and Acharya?

Jaya Jaya Shankara! Hara Hara Shankara! Kanchi Shankara! Kamakoti Shankara!



Categories: Devotee Experiences

Tags:

1 reply

  1. JAYA JAYA SHANKARA HARA HARA SHANKARA

What do you think?

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: