Periyava Golden Quotes-977

ஏகாதசியை ஒரு உபவாஸமாக தர்ம சாஸ்த்ரம் சொன்னாலும் ச்ராத்தத்தைப் போல ஸ்மார்த்த கர்மாவாக விதிக்கவில்லை. அதோடு ஏகாதசி என்பது பித்ரு ஆராதனைக்கு அப்புறமே வருகிற தேவ ஆராதனைதான். ச்ராத்தம் என்பது ரொம்பவும் வைதிகமான ஸ்மார்த்த கர்மா. அதிலே பித்ரு சேஷமாக போஜனம் பண்ண வேண்டியதும் ஒரு அங்கம். ச்ராத்தம் பண்ணி விட்டுப் பித்ரு சேஷம் சாப்பிடாவிட்டால் தப்பு.

ஏகாதசியில் ச்ராத்தம் வந்தால் என்ன செய்வது? ‘ச்ராத்தம் பண்ணிப் பித்ரு சேஷம் சாப்பிடத்தான் வேண்டும். ஏனென்றால் ஏகாதசி எவ்வளவு முக்கியமான தாயிருந்தாலும், அதைவிட வைதிகமான ச்ராத்தத்துக்குத் தான் இன்னமும் அதிக முக்யத்வம் தரவேண்டும்’ என்று ஸ்மார்த்தர்களும், வைஷ்ணவர்களும் நினைக்கிறோம். அன்று ஏகாதசி உபவாஸ நியமத்தை விடுவதால் தோஷமில்லை; வேதக் கட்டளைப்படி பண்ணுவதால் நமக்குத் தப்பு வராது என்று நினைத்து ச்ராத்தம் பண்ணி போஜனம் செய்கிறோம். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்

Although Sastras have prescribed Ekadasi as an observance of fasting, it has not been laid down as a traditional ritual like Shraddham.  Moreover, Ekadasi comes as a propitiation of Bhagawan, which is only after propitiation of the ancestors. Shraddham is a very religious, Vedic ritual. Eating food as Pithru sesham, the left-over of the food offered to the forefathers is a part of it.  It is wrong if Shraddham is performed and Pithru sesham is not had.

What to do if Shraddham occurs on an Ekadasi day? Shraddham should be performed and pithru sesham should be had.  Because, Vaishnavas and Smarthas think that even though Ekadasi is very important, more importance should be given to the Vedic ritual of Shraddham.  It is not wrong if Ekadasi fasting rule is not observed on that day.  It is believed that as we are obeying the rules of the Vedas, no wrong is done and therefore, we perform the Shraddham and have food. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal



Categories: Deivathin Kural, Golden Quotes

Tags:

Leave a Reply

%d bloggers like this: