Mahaperiyava narrates His TVK kumbabishekam experience

Thanks to Sri Halasya Sundaram Iyer for the share.

None can match Periyava’s narration! Interesting to visualize a young boy’s behavior from Periyava!

I think this would be a great scene to be drawn by our asthana artists in the blog where both the Periyavas see each other from their menas! Food for thought!

பெரியவா கலந்து கொண்ட திருவானைக்கா அகிலாண்டேஸ்வரி கோவில் கும்பாபிஷேகம் பற்றி, பெரியவாளே சொல்வதை, பரணிதரன் எழுதுகிறார்:

பெரியவா பட்டத்துக்கு வந்த அடுத்த வருஷம் [1908]. திருவானைக்கா அகிலாண்டேஸ்வரி ஆலயத்தில் தாடங்கப் பிரதிஷ்டை கும்பாபிஷேகம் நடந்தேறிய அசாதாரணச் சூழ்நிலையை, நேரில் காண்பது போல் விவரித்தார்.

‘நான் ஒரு சின்னப் பல்லக்கில் போயிண்டிருந்தேன். ரொம்பப் பக்கத்திலே சிருங்கேரி மடம் ஸ்ரீநரசிம்ம பாரதி சுவாமிகள் ஒரு பெரிய பல்லக்கில் வந்திண்டிருந்தார். நான் இத்துனூண்டு பையன். சுவாமிகளோ பெரியவர். அவர் எப்படியிருக்கார்னு பார்க்கணும்னு எனக்கு ஆசையாயிருந்தது. மெள்ளத் திரும்பிப் பார்த்தேன். அதே நேரம், அவரும் என் பக்கம் திரும்பினார். பார்க்க ஜோரா, கம்பீரமாயிருந்தார். அவரை அவ்வளவு கிட்டே பார்த்த காட்சி எனக்கு இப்ப கூட நன்னா ஞாபகம் இருக்கு.’

ஐம்பது ஆண்டுகளுக்கு முன் நடந்த அந்நிகழ்ச்சியைத் தத்ரூபமாக நடித்துக் காட்டினார். மேலும் தொடர்ந்தார்:

‘அப்புறம் மடத்திலே இருந்த பெரியவர்கள் என்னை உள்ளே அழைச்சுண்டு போய் அகிலாண்டேஸ்வரிக்குப் பக்கத்திலே ஒரு மூலைல ஒக்கார வெச்சுட்டா. ஒரே இருட்டு. அந்த இடத்தை விட்டு நகரவே கூடாதுன்னுட்டா. ரொம்ப நாழி ஒக்காந்திண்டிருந்தேன். காத்தே இல்லே. வேர்த்து வேர்த்துக் கொட்டித்து. ஒரே பசி வேறே. எப்பக் கும்பாபிஷேகம் முடிஞ்சி, எப்ப வெளியே வரப் போறோம்னு ஆயிடுத்து எனக்கு…’ சொல்லிவிட்டு கடகடவென்று சிரிக்கிறார்.

– பரணிதரன்



Categories: Devotee Experiences

5 replies

  1. stunning humility shown by both Mahaans !

  2. Pardon. I hit the post button before completion. The quote is from here:
    https://www.sringeri.net/jagadgurus/sri-sacchidananda-shivabhinava-nrisimha-bharati-mahaswamiji/biography

    Eeshvara avathaaramaana Sri Shankara in the form of the senior Sri Narasimha Bharathi Swamigal, watching Himself in the form of the junior Sri Chandrashekara Sarasvathi Swamigal!

    Hara Hara Shankara Shiva Shiva Shankara!

  3. Kuzhandhaiyum Dheivamum Ondre endraal, Dheivamum Kuzhandhaiyum Ondru thaane? Namma Periavaal!

    Sri Narasimha Bharathi!
    “A prince among Atmajnanis, an exemplar of bhakthi, a veritable Bharati in knowledge, an adept in yoga, Sri Sacchidananda Shivabhinava Nrisimha Bharati Swami was universally hailed as an avatar of Sri Shankara.”

  4. Reblogged this on chennaivasi and commented:
    திருஆனைக்கா கும்பாபிசேகம் குறித்து ஒரு flashback (interesting)

  5. Jaya Jaya Sankara Hara Hara Sankara. Janakiraman. Nagapattinam

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading