Sri Periyava Mahimai Newsletter – 5

Jaya Jaya Sankara Hara Hara Sankara – Sri Periyava’s experience in crossing the Pamban bridge has been described in this newsletter along with the respect the Englishmen had for HH.

Many Jaya Jaya Sankara to out sathsang volunteers Shri. B. Narayanan Mama for the Tamizh typing and Shri. Harish Krishnan for the translation. Rama Rama

(வாயினால் உன்னைப் பரவிடும் அடியேன் படுதுயர் களைவாய் பாசுபதா பரஞ்சுடரே)

ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மஹாபெரியவாளின் மகிமை

ஜகம் புகழும் பரமேஸ்வரர்

சுகப்ரஹ்மரிஷியின் மேலான நிலையில்  நம்மிடையே திகழும் ஞான மூர்த்தியாம்  ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ  மஹாபெரியவா சாட்சாத் பரமேஸ்வரரின் அவதாரமே என்பதால் அம்மகானை எந்த சமயத்தினரும் எந்த நாட்டைச் சார்ந்தவரும் அவ்வாறே உணர்ந்து கொண்டாடியிருப்பது பல நிகழ்ச்சிகளில் வெளிப்படும் உண்மை.

காசி யாத்திரையை முடித்து விஸ்வேஸ்வரராய் ஸ்ரீ மஹாபெரியவா பீஹார், வங்காளம், ஒரிஸா, ஆந்திரா பிராந்தியங்கள் வழியே பல புண்ய க்ஷேத்திரங்களைத் தரிசனம் செய்து, கங்கா யாத்திரையின் பூர்த்தியாக ராமேஸ்வரத்திலுள்ள ஸ்ரீ ராமநாதசுவாமிக்கு கங்காபிஷேகம் செய்யும் பொருட்டு 1939 ஆம் ஆண்டு ஜூன் முதல் வாரத்தில் ஸ்ரீ பெரியவாள் ராமேஸ்வரத்தை நோக்கி யாத்திரையாக வந்து கொண்டிருந்தார்.

அப்போது மண்டபத்திற்கும் ராமேஸ்வரத்திற்குமிடையே பாலம் கிடையாது. ரயில்வே பாலம் மட்டும்தான் இருந்தது. திருவாரூரில் முகாமிட்டிருந்த மகான் அப்பய்ய குப்புஸ்வாமி என்ற அன்பரைக் கூப்பிட்டு “நீ திருச்சிராப்பள்ளிக்குச் சென்று, இம்பீரியல் பாங்க் நாரயணசுவாமி என்பவரைப் பார்த்து ஜூன் 8 அல்லது 9 ஆம் தேதி வாக்கில் நம் மடத்து பூஜாமூர்த்திகளைப் பாம்பன் ரயில்வே பாலத்தின் வழியே டிராலி மூலம் கடத்திட வேண்டும் என்பதற்கும், சுவாமியும் அவருடன் சிலரும் ரயில்வே பாலத்தின் மீது நடந்து அக்கரை சேர்வதற்கும் தென் இந்தியத் தலைமை அதிகாரிகளிடம் விண்ணப்பித்து, உத்தரவு வாங்கி வரவேண்டும் என்று அவரிடம் சொல்லிக் காரியத்தை முடித்துக் கொண்டுவா. தேவையான விண்ணப்பத்தை எழுதுவதற்கான வாசகம் நாரயணசுவாமியிடமே கேட்டுக்கோ” என்று உத்தரவிட்டார்கள்.

அதன்படியே இவர் திருச்சி சென்று நாரயணசுவாமியை சந்தித்து அவரிடம் விவரத்தைக் கூற அவரும் அன்று மாலை உயரதிகாரியை சந்திப்பதாகக் கூறி அடுத்த நாள் வரச் சொன்னார்.

குப்புஸ்வாமி அன்று உறையூரில் தங்கியிருந்து மறுநாள் காலை நாராயணசுவாமியை சந்தித்தார். அவர் மடத்து சார்பாக ஒரு விண்ணப்பம் எழுதித் தருமாறு கேட்டார். அன்றைய முன்தினம் நாராயணசுவாமி ரயில்வே சம்பந்தபட்டவர்களைச் சந்தித்து ஸ்ரீ மகான் பாலத்தைக் கடக்க வசதிகளைப் பற்றிக் கேட்டிருப்பார் போலும். இவர் கேட்டதோ ஸ்ரீ பெரியவாள் பாலத்தை நடந்து கடப்பதற்கு உண்டான அவகாசத்தில் ரயில் ஏதும் வராமல் இருக்கும் சௌகர்யத்திற்காக. .அப்படி அமையும் நேரத்தில் பாலத்தில் நடக்க பர்மிஷன் மட்டும்தான். ஆனால் பாலம் இருக்கும் அதேநிலையில் அதில் நடப்பது சற்றே சிரமம் என்று ரயில் அதிகாரிகள் தாங்களே முன்வந்து பாலம் முழுவதும் தண்டவாளங்களுக்கு இடையே பலகைகள் அமைத்துக் கொடுக்கும்படி கேட்டுக் கொள்ளும் வகையில் விண்ணப்பத்தை எழுதித் தருமாறு யோசனை சொல்லியிருந்தனர். இதைக் கேட்டுவந்த நாராயணசுவாமி, குப்புஸ்வாமி அவர்களிடம் மடத்து லெட்டர் பேப்பரில் ஒரு விண்ணப்பத்தை எழுதி வாங்கிக் கொண்டார்.

மாலை மூன்று மணிக்கு அவரை மீண்டும் குப்புஸ்வாமி சந்திக்க இருவரும் தென் இந்தியா ரயில்வே கம்பெனியின் ஏஜண்டாக இருந்த அதிகாரியை அவருடைய காரியாலயத்தில் சந்தித்தனர். அவரிடம் ஸ்ரீ பெரியவாளின் விருப்பத்தை விவரமாக எடுத்துச் சொல்ல அவர் மிகவும் வினயத்துடன் ஆவன செய்வதாகவும் சீஃப் டிரான்ஸ்போர்டேஷன் சூபரிண்டென்டிடமும் விண்ணப்பம் கொடுக்கும்படிக் கூற அவர்களிடம் சூபரிண்டென்டிற்கு ஒரு கடிதமும் கொடுத்தார்.

அவரிடம் சென்றபோதும் சாட்சாத் சர்வேஸ்வரரான ஸ்ரீபெரியவாளின் உத்தரவிற்கு பெருமதிப்பு இருப்பதை இருவரும் உணர நேர்ந்தது. மிகவும் பவ்யமாக அந்த அதிகாரியும் “நான் மண்டபம் கேம்ப் ஸ்டேஷன் மாஸ்டரைக் கேட்டு பாம்பன் பாலம் மீது புகைவண்டிகள் செல்ல வேண்டியிராத காலத்தைத் தெரிந்து கொண்டு நாராயணசுவாமி வீட்டிற்கே உத்தரவை ஆள்மூலம் அனுப்புகிறேன். அதில் குறிப்பிடும் நேரத்தில் நீங்கள் கடந்து செல்வதை நடத்த வேண்டும்” என்று சொல்லியனுப்பினார்.

மறுநாள் சுமார் 5 மணியளவில் ரயில்வே உத்யோகஸ்தர் ஒருவர் வந்து கடிதத்தைக் கொடுத்துப் போனார். அந்தக் கடிதத்தில், “சுத்தம் செய்யப்பட்ட டிராலியில் நான்கு பேர்கள் பூஜைப் பெட்டிகளுடன் உட்கார வசதியுடன், சூரிய வெப்பத்தைத் தடுக்க, டிராலியின்மேல் ஒரு குடை பொருத்தி வைக்கவும், டிராலியைத் தள்ளிக் கொண்டு போக வலிமையான 6 ரயில்வே ஆட்களும் ஏற்பாடு செய்யப்படும். ஸ்ரீ ஸ்வாமிகளும் ஊழியர்களும் 10 நபர்களும் ரயில்வே பாலம் வழியே செல்ல மண்டபம் ஸ்டேஷன் தெற்கு சிக்னல் பாயிண்டிலிருந்து, பாலம் முழுவதும் இரண்டு தண்டவாளங்களுக்கிடையே அகலமான பலகைகள் பரப்பப்படும். இப்படி டிராலியும் அதன் பின்னர் சுவாமிகளும் பாலத்தின் மீது குறிப்பட்ட நாளில் செல்ல சமயமான “காலை 9 மணிக்கு மண்டபம் காம்ப் ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்து 10.30 மணிக்குள் பாம்பனைக் கடக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்” என்று கண்டிருந்தது. இதை குப்புஸ்வாமி அவர்கள் எடுத்துச் சென்று ஸ்ரீ பெரியவாளிடம் தெரிவித்தார்.

அதன்படியே ஜூன் மாதம் காலை 9 மணிக்கு பூஜைப் பெட்டிகளை இருவர் தாங்கி உட்கார, பாராக்காரர்கள் ஒருவர் முன்புறமும் ஒருவர் பின்புறமுமாக டிராலி மண்டபத்திலிருந்து கிளம்பிச் சென்றது. நடமாடும் ஈஸ்வரராக ஸ்ரீ மகாபெரியவா சில நிமிடங்கள் கழித்து 4 பேர்கள் முன்னும், ஸ்ரீ மகானின் இருபக்கங்களில் ஒவ்வொருவரும், பின்னால் இருவருமாக பாம்பன் பாலத்தின் நீளத்திற்கு போடப்பட்டிருந்த பலகைமேல் நடக்கலானார்கள்.

பலத்த காற்றடிக்கும் போது சற்றும் சலனமில்லாது, பரமேஸ்வரர் வேகமாக அந்த வெகு நீண்ட பாலத்தை நடந்து கடந்து சென்றார். இந்த நிகழ்ச்சியின் சிகரமாக இவர்கள் பாம்பனைக் கடந்து அக்கரை சென்றபோது, அதற்கு அரைமணி முன்னதாகவே வேறு ஒரு டிராலியில் தென் இந்திய ரயில்வே சீஃப் டிரான்ஸ்போர்டேஷன் மேலதிகாரி அக்கரையில் ஸ்ரீ மகாபெரியவா திருவடி பதிக்குமிடத்தில் சகல மரியாதையோடு கையில் பழத்தட்டுகளோடு கைலாஸ பதியாம் ஸ்ரீ பெரியவாளை வரவேற்க நின்று கொண்டிருந்தார்.

“எல்லாம் சரியாகவும் சௌகர்யமாகவும் நடந்தனவா?” என்று மிக அக்கறையோடு அவர் கேட்க ஸ்ரீ பெரியவா அவருக்கு நன்றி கூறும்படி குப்புஸ்வாமியைப் பணித்தார். மறுநாள் ராமேஸ்வரத்தில் கங்காபிஷேகம் முடிந்தவுடன், ஸ்ரீ பெரியவா இவரைக் கூப்பிட்டு பழங்களையும் இரண்டு பட்டு வஸ்திரங்களையும் ஆசீர்வதித்துக் கொடுத்து, “நீ இன்று மாலை போய் மண்டபம் ஸ்டேஷன் மாஸ்டருக்கும், திருச்சி சென்று அந்த மேலதிகாரிக்கும் இவைகளைக் கொடுத்து நன்றி செலுத்திவிட்டு வா” என்று அன்புக் கட்டளையிட்டார்.

இப்படி ஸ்ரீ பெரியவாளை சதாசிவமே என்று உணர்ந்து, ஈசன் கோரிக்கையை ஆண்டவனிட்ட கட்டளையாகவே கொண்டு, சுமார் இரண்டு கிலோ மீட்டர் நீளமான பாலம் முழுவதற்கும் சௌகர்யமாக பலகைகளைப் பரப்பி ஏற்பாடுகள் செய்ய உத்தரவிட்ட இந்திய ரயில்வே கம்பெனி ஏஜண்டுமான அதிகாரியும், திருச்சியிலிருந்து பிரத்யேகமாக ஸ்ரீ பெரியவாளை ராமேஸ்வரம் கரையில் வரவேற்க முன்னமே வந்திருந்து காத்திருந்த, சகல ஏற்பாடுகளையும் செய்த சூபரிண்டென்ட் அதிகாரியும் ஆங்கிலேய அதிகாரிகள் என்று தெரியும் போது ஸ்ரீஸ்ரீஸ்ரீ மகா பெரியவாளிடம் வேற்று நாட்டினர்களும் கொண்டிருந்த பெரும் மதிப்பு வெளிப்படுகிறதன்றோ!

இது மடாதிபதிகள் என்ற நிலையைக் கடந்து நிற்கும் ஞான மூர்த்தியின் மேன்மையை எடுத்துக்காட்டுவதாக அல்லவா அமைந்துள்ளது.

ஜகத்குரு

பல வருடங்களுக்கு முன்னால் ஸ்ரீ பெரியவா காஞ்சியில் சர்வதீர்த்தக் கரையில் ஒரு பர்ணசாலையில் வாசம் கொண்டிருந்தார். சுமார் 4 மணிக்கு வெளிநாட்டவர் ஒருவர் தரிசனத்திற்காக வந்திருப்பதாகக் கூறினார்கள். ஸ்ரீ பெரியவாளும் அவரை அழைத்துவரச் சொல்லி ஒரு அத்திச் செடியின் பக்கமாக அமர்ந்தார். வெளிநாட்டவர் வந்து வணங்கி நிற்க அவரை அமரும்படி ஸ்ரீ பெரியவா ஜாடை காட்டினார். அவர் இந்தியா வந்ததன் நோக்கம் என்னவென்று கேட்கச் சொன்னார்.

“நான் இந்தியாவிற்கு வந்து மதத் தலைவர்களைச் சந்தித்துப் பேச வந்தேன். பல முக்கிய மதத் தலைவர்களையும், அறிஞர்களையும் பார்த்துவிட்டுத் தங்களிடம் வந்துள்ளேன். தங்களை சில கேள்விகள் கேட்கலாமா” என்றார்.

ஸ்ரீ பெரியவா தலை அசைத்து சம்மதித்தார்கள்.

“எவ்வளவு ஆண்டுகளாக பீடத்தின் தலைவராக இருக்கிறீர்கள்” என்று கேட்க, ஸ்ரீ பெரியவா அங்கிருந்த அண்ணாதுரை அய்யங்காரிடம் “1907 ஆம் ஆண்டு முதல் “என்று பதிலளித்தார்.

“இவ்வளவு ஆண்டுகளாக இந்தப் பீடத்திலிருக்கும் தங்களுடைய அனுபவம் என்ன? மானிடர்களுக்கெல்லாம் தாங்கள் அளிக்கக்கூடிய புத்திமதி என்ன? என்று அந்த ஆங்கிலேயர் கேட்டார்.

ஸ்ரீ மகான் சில வினாடிகள் புன்னகைத்துவிட்டுப் பிறகு பதிலளித்தார்.

“மனித வாழ்நாளில் சுமார் அரைப்பகுதி தூக்கத்தில் கழிந்து விடுகிறது. எஞ்சிய காலத்தில் பெரும் பகுதி ஸ்னானம், பூஜை, சாப்பிடுகிறது, தரிசனத்திற்கு வந்தவர்களுடன் பேசுவது என்று சென்று விடுகிறது. என்னிடம் யானை, குதிரை, மாடு, வண்டி ஓட்டுபவர்கள், வாத்யக்கார்கள் மற்றும் சிப்பந்திகள் இப்படியாக 100 பேர்கள் இருக்கின்றனர். தவிர என்னைக் காண வருபவர்களுக்கும் சாப்பாடு போட வேண்டியிருக்கிறது. இவைகளுக்காக நான் பணம் சம்பாதிக்க வேண்டியிருக்கிறது. இங்கு யானையைப் பார்க்க பலபேர் வருகிறார்கள். மேள வாத்தியம், டங்கா, நகரா ஆகிய வாத்தியங்கள் ஒலிப்பதைக் கேட்க கூட்டமாக ஜனங்கள் வருகிறார்கள். இப்படி நான் சர்க்கஸ்காரன் மாதிரி இருக்கிறேன். ஜனக்கூட்டம் வந்தால்தான் இங்கு இருப்பவர்களுக்கு சாப்பாடு போட முடியும். எனக்கு ஒன்றுமே தெரிவதில்லை. நிறைய ஜனங்களைப் பார்க்கிறேன். சிலர் சௌக்கியமாக இருக்கிறார்காள். சிலர் கஷ்டப்படுவதாக சொல்கிறார்கள். இதை எல்லாம் கேட்டுக் கொண்டு ஒன்றும் தெரியாமல் இருக்கிறேன்”

இப்படித் தன் வல்லமைகளையெல்லாம் மறைத்து தான் ஒரு எளியோன் என்பதைப்போல் ஸ்ரீ பெரியவா பதில் அளித்தபோதிலும் அந்த அயல் நாட்டினருக்கு எல்லாம் புரிந்துவிட்டது. அவர் ஆங்கிலத்தில் “நான் பல மதத்தலைவர்களைப் பார்த்துவிட்டு வந்துள்ளேன். கேள்விகளும் கேட்டுள்ளேன். அவர்களிடமெல்லாம் கிடைத்த பதில்கள் பெரும்பாலும் தன் நலம் படைத்த ஈகோயிஸ்ட் தனமாகத்தான் இருக்கும். ஆனால் தாங்கள் கூறிய பதில்கள் வித்யாஸமாக இருந்தது. பெரியவர்களின் பதில்கள் எளிமையும், உண்மையும் பிரதிபலித்தன. இவர்கள் தான் உண்மையான துறவி. தூய்மையானவர், பரிசுத்தமானவர் என்பது பேச்சிலிருந்தே தெரிகின்றது. ஒளிவீசும் கண்களுடன் பெரியவர் தேஜோமயமாக விளங்குகின்றார்கள். எல்லாம் தெரிந்தும் தனக்கு ஒன்றுமே தெரியாதென்று சொல்வதிலிருந்து இவர் ஒரு மகான் என்று எனக்கு நன்றாக விளங்கிவிட்டது. ஸ்ரீ பெரியவாளைச் சந்தித்தது என் பெரும் பாக்யம் என்று பூர்ணமாக உணர்கிறேன்.”

இப்படி ஆங்கிலத்தில் தன் உணர்ச்சிபூர்வமாக அவர் பதிலளித்தபோது ஒரு மெல்லிய புன்னகையோடு எல்லாமும் ஆகி, எல்லாமுமறிந்த சர்வ வல்லமையோடு கூடிய ஸ்ரீ பெரியவா அவருக்கு ஒரு பழத்தை அனுக்ரஹித்துக் கொடுத்தார்.

இப்படி உலகம் போற்றும் ஜகத்குருவாய் நம் அனைவருக்கும் கேட்கும் வரம் அளித்து, குறைகளை அகற்றிக் காத்தருள அருள் பெருக்கும் ஈஸ்வரரை நாம் அனைவரும் சரணடைந்து வாழ்வில் சகல ஐஸ்வர்யங்களையும், சர்வ மங்களங்களையும் பெற்று எல்லா தீமைகளும் அகலப்பெற்று நல்வாழ்வு பெறுவோமாக.

கருணை தொடர்ந்து பெருகும்………

பாடுவார் பசி தீர்ப்பாய்பரவுவார் பிணி களைவாய்.

ஸ்ரீ சுந்தரமூர்த்திசுவாமி தேவாரம்.

______________________________________________________________________________________________________________

Shri Shri Shri Mahaperiyavaal Mahimai

Parameshwaran who is revered around the globe

Shri Mahaperiyava, due to His kindness, to bless all the people, like a Sugabrahma Rishi Saint, took avatar as Shri Shri Shri Mahaperiyava, walked this earth and blessed us. There have been several instances where it has been revealed that devotees of Sri Periyava spanned across religion and countries.

After completing a yatra to Kasi, Sarveshwaran Sri Periyava toured Bihar, Bengal, Orissa, and Andhra then proceeded directly to Rameswaram to perform Ganga Abhishegam to Sri Ramanathaswamy to complete His Ganga yatra. It was during the first week of June 1939.

During those days, there was no road bridge connecting Mandapam and Rameswaram. Only the railway bridge existed in those days. Sri Periyava who was camping at Thiruvarur, called a devotee Appayya Kuppuswamy and instructed him to go to Trichy and meet Imperial Bank Narayanaswamy. He was to ask Sri Narayanaswamy to request permission from Chief of Southern Railway for Sri Periyava and few other kainkaryam devotees to walk across the Pamban bridge and transport Srimatam Pooja items with them in a trolley during June 8th or 9th.

Sri Kuppuswamy went to Trichy and met Sri Narayanaswamy and conveyed Sri Periyava’s message. Sri Narayanaswamy assured him that he will meet with the railway office that evening and asked him to come back the following day.

Kuppuswamy stayed back that night at Uraiyur and then went to meet Sri Narayanaswamy the next day morning. He was asked to submit a written request from Srimatam for this. Even though Sri Narayanaswamy’s request to the railway authorities was to give them permission for Sri Periyava to cross the bridge during which there were no trains were scheduled, the authorities said that they will be able to add wooden planks between the tracks to make it easy for Sri Periyava to walk. They asked this to be included in the request letter from Srimatam for them to proceed. Based on this discussion, Sri Narayanaswamy obtained a request letter from Kuppuswamy in the Srimatam letterhead.

Again at 3 pm Kuppuswamy went and met Narayanaswamy. They both went to the Southern Railway office and met the agent there. The office welcomed them and sincerely worked on the request. He also asked them to send a letter to the Chief Transportation Superintendent and prepared it himself and gave it to them.

When they met the Superintendent, they were even more surprised. They understood the importance the officers had given to Sri Periyava’s request. The officer said, “I will contact the Mandapam Camp railway station master and find out the time when there are no trains crossing the bridge and will send the approval with the time along with a person directly to your house. Crossing of the bridge should be complete within the time frame.”

As promised, around 5 pm the next day, a railway officer came and gave a letter. The letter read,

“A cleaned trolley with provision to keep the Pooja items and for up to four people to sit will be provided. The trolley will be fit with an umbrella to protect from the occupants from sun and 6 people will be available to push the trolley. For Sri Periyava and the 10 other person to cross the bridge, wooden slabs will be laid in the bridge between the two parallel rail tracks. We request Sri Periyava and the others to start from Mandapam Camp railway station at 9 am on that particular day and cross the bridge before 10:30 am.”

Sri Kuppuswamy took this letter and informed the same to Sri Periyava.

On that particular at 9 am, the Pooja items were loaded into the trolley and being held by 2 kainkaryam devotees and another two also joined the trolley one sitting on the front and another at the back of the trolley. After the trolley started, Sri Periyava started His journey with four persons going before Him, two on both the sides of Sri Periyava and two others following Him. They all started walking on the wooden slabs that were laid on the Pamban Bridge.

Even though there were strong winds blowing, Sri Periyava walked fast and quickly crossed the bridge. The best was yet to come. When Sri Periyava crossed the bridge, the Chief Transportation was already on the other side with plates filled with fruits waiting to receive Sri Periyava with complete honor.

The officer asked Sri Periyava in a very concerned tone, “Did everything work out well and was it comfortable?” Sri Periyava asked Kuppuswamy to thank the officer. On the following day, after the Ganga abhishegam was complete, Sri Periyava called the officer and gave fruits, two silk dresses and asked him to go to Mandapam that evening to thank the station master and then to Trichy to thank the officers.

The officers who had took Sri Periyava’s request as God’s order and also made sure they provide wooden slabs and also go there before Sri Periyava crossed the bridge to welcome Him were all foreign English officers. This incident shows the respect that even the foreigners had for Sri Periyava. This is a respect that goes above Sri Periyava as a Peetathipathi of Srimatam.

Jagad Guru

Many years ago, Sri Periyava was staying at a parnasalai at the banks of Sarvatheertham at Kanchipuram. At 4 am, they told Sri Periyava that a foreigner had come for His darshan. Sri Periyava called him inside and sat near a fig tree.  As he came and stood, Sri Periyava asked him to be seated. Sri Periyava through His kainkaryam devotees asked what the reason was for the foreigner’s visit.

“I have come to India to meet multiple religious leaders. I have already seen many of them and now I have come to see you. Can I ask few questions?” the foreigner asked Sri Periyava.

Sri Periyava shook His head and agreed.

The foreigner asked, “How long have you been the Peetathipathi of this Srimatam?”

Sri Periyava looked at Sri Annathurai Iyengar and replied, “From 1907.”

The foreigner asked, “What is the experience you have gained by being in this Peetham? What advice do you suggest to people?”

Sri Periyava smiled and then replied, “Almost half of human life goes in sleeping. The remaining part is spent in bathing, performing Pooja, eating and talk to people who have come for darshan. I have almost 100 people including elephants, horses, cows, people who drive carts, musicians and Sippanthis. I also need to provide food to those who come for my darshan. For this purpose, I have to earn money. Many people come here for elephant’s darshan. There are also lots of people who come here to hear the music. In this way, I am similar to a circus man. Only when lots of people come, I will be able to feed the people here. I do not know anything. I meet a lot of people. Some are well to do and are doing fine. Some say that they are undergoing a lot of problems. I hear all of this, but still do not know anything.”

Even though Sri Periyava concealed all His strength and capabilities and answered the foreigner like a simple human being, the foreigner understood everything. He replied in English, “I have met many religious leaders. I have asked them many questions too. Most of their answers were egoistic. But your replies were different. They reflected simplicity and truth. I realize that you are the real and clean saint. Your eyes and face sparkle. By your simple talk, I clearly understand and realize that you are a true saint. I feel blessed to meet you.”

As the foreigner replied in English with a deep feeling and respect, Sri Periyava gave him a fruit and blessed him. If we pray to the Jagad Guru who is revered around the world, we will be granted all our wishes. It is true that if we surrender at the feet of Sri Periyava, we will be blessed with health, wealth, peace and happiness.

Grace will continues to grow.

(Appease the hunger of those who sing, Cure the disease of those who spread your name – Sundaramurthy Swamigal Devaram)

 



Categories: Devotee Experiences

Tags:

1 reply

  1. Jaya JaYa Sankara Hara Hara Sankara. Janakiraman. Nagapattinam

Leave a Reply to Venkatarama JANAKIRAMANCancel reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading