Periyava Golden Quotes-970

அஷ்ட வர்ஷாதிக: மர்த்ய: அபூர்ணாசீதி வத்ஸர: |ஏகாதச்யாம் உபவஸேத் பக்ஷயோ: உபயோ: அபி ||

என்று தர்ம சாஸ்த்ரம் கூறுகிறது. அதாவது மநுஷ்யராகப் பிறந்தவர்களில் எட்டு வயஸுக்கு மேல் எண்பது வயஸுக்கு உட்பட்ட எல்லோரும் இரு பக்ஷங்களிலும் வரும் ஏகாதசிகளில் உபவாஸம் இருக்க வேண்டும் என்று அர்த்தம். எந்த ஸம்ப்ரதாயக்காரன், எந்த ஜாதிக்காரன், ஆணா பெண்ணா என்ற வித்யாஸமில்லாமல், ‘மர்த்ய’, அதாவது மநுஷ்யராகப் பிறந்த எல்லோரும் ஏகாதசி உபவாஸம் அநுஷ்டிக்க வேண்டும் என்று இது சொல்கிறது. ரொம்பவும் கருணையோடு குழந்தைகளையும், தள்ளாத கிழவர்களையும் சிரமப்படுத்த வேண்டாமென்றுதான் எட்டு வயஸுக்குக் கீழே இருப்பவர்களுக்கும், எண்பது வயஸுக்கு மேலே போனவர்களுக்கும் விதிவிலக்குக் கொடுத்திருக்கிறது. அவர்கள் உபவாஸம் இருக்கக் கூடாது என்று கண்டிப்புச் செய்ததாக அர்த்தமில்லை. முடிந்தால் அவர்களும் இருக்கலாம். முடியவில்லை என்பதால் இல்லாவிட்டாலும் பாதகமில்லை என்று அர்த்தம். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்


Dharma Sastras say,

Ashta Varshaadhiga: Marthya: Apoornaseethi Vathsara: |
Ekaadasyam Upavaseth Pakshayo: Ubhayo: Api ||

It means that all those born as humans and between eight and eighty years of age, should observe fast on the Ekadasi day occurring in both the pakshas (fortnight).  It says, ‘Marthya’, that is, all born as humans, without making any distinction as belonging to which tradition, religion, male or female, should observe the Ekadasi fasting. With the intention of not causing any difficulty to small children and very old people, it has, with all benevolence, given exception to those below eight years of age and above eighty years.  It does not mean that it strictly prohibits them from observing the fast.  If possible, they can also observe.  Since they may not be able to, it means that there is nothing wrong if they do not observe. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal



Categories: Deivathin Kural, Golden Quotes

Tags:

Leave a Reply

%d bloggers like this: