Jaya Jaya Sankara Hara Hara Sankara – Happy Karthigai to all.
Our dharma has immeasurable depth and significance in many things we do and celebrate. One such festival is Karthigai Deepam. Is this festival only about lighting lamps? The foresight and vision of our rishis are nothing but spell-bounding when we read these chapters from Deivathin Kural. Not only this, whatever powers the rishis had, they used it only for Loka Kshemam as Sri Periyava explains the great philosophy behind Karthigai Deepam. Let’s read, contemplate, and share!
Many Jaya Jaya Sankara to our sathsang seva volunteer Smt. C.P. Vijayalakshmi for the translation. Ram Ram
கார்த்திகை தீப தத்வம்
கார்த்திகைப் பண்டிகையன்று நிறைய அகல் ஏற்றி வைக்கிறோமல்லவா? இப்படி தீபத்தை ஏற்றும்போது ஒரு ஸ்லோகம் சொல்ல வேண்டும் என்று தர்மசாஸ்த்ரத்தில் விதித்திருக்கிறது.
கீடா பதங்கா மசகாச்ச வ்ருக்ஷா
ஜலே ஸ்தலே யே நிவஸந்தி ஜீவா |
த்ருஷ்ட்வா ப்ரதீபம் ந ச ஜன்ம பாஜா
பவந்தி நித்யம் ச்வபசா ஹி விப்ரா ||
”புழுக்களோ, பக்ஷிகளோ, அல்லது ஒரு கொசுவாகத்தான் இருக்கட்டும், அந்தக் கொசுவோ, நம்மாதிரி உயிரில்லை என்று நினைக்கப்படுகிற வ்ருக்ஷமோ, இன்னும் ஜலத்திலும், பூமியிலும் எத்தனை தினுஸான ஜீவராசிகள் இருக்கின்றனவோ அவற்றில் எதுவானாலும் அதுவோ, மநுஷ்யங்களுக்குள்ளேயே பேதம் இல்லாமல் பிராம்மணனோ பஞ்சமனோ எவனானாலும் ஸரி, எதுவானாலும் ஸரி, இந்த தீபத்தைப் பார்த்துவிட்டால் அந்த ஜீவனுடைய ஸகல பாபங்களும் நிவ்ருத்தியாகி, இன்னொரு ஜன்மா எடுக்காமல் நித்யானந்தத்தில் சேரட்டும்” என்று இந்த ஸ்லோகத்துக்கு அர்த்தம்.
ஜலத்திலும் பூமியிலும் இருக்கிற ப்ராணிகள் மட்டும்தானா என்றால் அப்படி இல்லை. முதலிலேயே பக்ஷிகளையும் (பதங்கா)கொசுக்களையும் (மசகா: – மசகம் என்றால் கொசு. ‘மஸ்கிடோ’ இதிலிருந்து வந்ததுதான்!) சொல்லிவிட்டதால் ஆகாசத்தில் பறக்கிற பிராணிகளையும் சொல்லிவிட்டதாக அர்த்தம். ஆகாசத்தில் பறந்தாலும் இந்தக் கொசு ஜலத்தில்தான் முட்டை இடுகிறது. பக்ஷி கிளைகளில்தான் வாழ்ந்து கூடு கட்டிக் குஞ்சு பொரிக்கிறது. மீன் ஜலத்தில் மட்டும்தான் இருக்கும். தவளை ஜலத்திலும் இருக்கும், பூமியிலும் இருக்கும். அநேக பிராணிகளால் பூமியில் மட்டும்தான் வசிக்க முடியும். இப்படியெல்லாம் பல தினுஸில் பிரித்துப் பிரித்துச் சொல்லி, அத்தனை உயிரினங்களும் பாபம் நிவ்ருத்தியாகி ஸம்ஸாரத்தைத் தாண்ட வேண்டும் என்று இந்த ஸ்லோகம் ப்ரார்த்திக்கிறது.
இந்த கார்த்திகை தீபத்தை எந்தப் பிராணி பார்த்தாலும் அதற்கு நித்ய ச்ரேயஸ் உண்டாகட்டும் என்று சொல்லியிருக்கிறது. ‘த்ருஷ்ட்வா’ என்று ஸ்லோகத்தில் வருவதற்கு ‘பார்த்தால்’ என்று அர்த்தம். வ்ருக்ஷம் – மரம் எப்படிப் பார்க்க முடியும்? நம் மாதிரி அதற்குக் கண், பார்வையெல்லாம் உண்டா? தாவரத்துக்கும் பலவிதமான உணர்ச்சிகள் இருப்பதாக இப்போது ஸயன்ஸ்படியே சொன்னாலும் அதற்குப் பார்வை உண்டா என்று தெரியவில்லை. அதனால் எனக்கு ஒன்று தோன்றுகிறது. ‘பார்த்தால்’என்று ஸ்லோகத்தில் சொல்லியிருந்தாலும், ”பார்க்காவிட்டாலும் பரவாயில்லை;மரம் மாதிரிப் பார்க்க சக்தியில்லாவிட்டாலும் பரவாயில்லை; அல்லது பார்க்கிற சக்திவாய்ந்த பிராணிகளாக இருந்தும்கூட இந்த தீபத்தைப் பார்க்காவிட்டாலும் பாதகமில்லை; இந்த தீபத்தின் ப்ரகாசமானது அதைப் பார்க்கிறவர், பார்க்காதவர் எல்லார் மேலும் படுகிறதோ இல்லையோ? அம்மாதிரி இதன் ப்ரகாசம் படுகிற எல்லைக்குள் இருக்கிற ஸகல ஜீவராசிகளுக்கும் பாப நிவ்ருத்தி, ஜன்ம நிவ்ருத்தி, சாஸ்வதமான ச்ரேயஸ் கிடைக்க வேண்டும்”- என்றிப்படி அர்த்தம் பண்ணிக் கொள்ளலாம் என்று தோன்றுகிறது.
தீபத்தின் ஒளி எப்படி வித்யாஸம் பார்க்காமல், பிராம்மணன், பஞ்சமன், புழு, பக்ஷி, கொசு, மரம், மற்ற நீர்வாழ் ப்ராணிகள், நிலம் வாழ் விலங்கினங்கள் இவற்றின் மீது படுகிறதோ அப்படியே நம் மனஸிலிருந்து அன்பு ஒரு தீபமாக, எல்லோரையும் தழுவுவதாகப் பிராகாசிக்க வேண்டும். இப்படிப்பட்ட அகவொளியோடு, புற ஒளியாக தீபத்தை ஏற்றி மேலே சொன்னது போல் ப்ரார்த்திக்க வேண்டும்.
முன்பெல்லாம் சொக்கப்பானை என்று ஆலயத்திலிருந்து தீபத்தைக் கொண்டுவந்து பெரிதாக ஏற்றினார்களே, திருவண்ணாமலையில் இப்போதும் மலை உச்சியில் மஹா பெரிய ஜோதியாக தீபம் ஏற்றுகிறார்களே, இதன் உள்ளர்த்தம் என்ன? சின்ன அகலமாக இருந்தால், அதன் ப்ரகாசம் கொஞ்ச தூரம்தான் பரவும். சொக்கப்பானை என்றால் அதன் ப்ரகாசம் ரொம்ப தூரத்துக்குத் தெரியும். அண்ணாமலை தீபம் மாதிரி மலையில் ஏற்றி வைத்துவிட்டாலோ, அது எத்தனையோ ஊர்கள் தாண்டிக்கூடத் தெரியும். அத்தனை பெரிய எல்லைக்குள் இருக்கிற ஸகல ஜீவஜந்துக்களின் மீதும் இந்தப் பிரகாசம் பட்டு அவற்றின் பாபங்கள் போகவேண்டும் என்ற உத்தமமான சிந்தனையில்தான் சொக்கப்பானை, அண்ணாமலை தீபம் என்றெல்லாம் நம் பூர்விகர்கள் ஏற்பாடு பண்ணியிருக்கிறார்கள்.
ஸாதரணமாக இரண்டு கால் ப்ராணி, நாற்கால் ப்ராணிகள்தான் அதிகம். வண்டுக்கு ஆறு கால். சிலந்திக்கு எட்டுக் கால்கள். மரவட்டை, கம்பளிப் பூச்சி என்று எடுத்துக் கொண்டால் அதற்கு எண்ணி முடியாத கால்கள். வேதத்தில் அடிக்கடி ‘த்விபாத்” சதுஷ்பாத்’ என்று இருகால், நாற்கால் ப்ராணிகள் க்ஷேமத்தைக் கோருகிற மாதிரியே எத்தனை காலுள்ள ப்ராணிகளானாலும் அவற்றுக்கும், இன்னும் பாம்பு மாதிரி, மீன் மாதிரி காலே இல்லாத ப்ராணிகளுக்கும் க்ஷேமம் உண்டாகட்டும் என்று மந்திரங்கள் இருக்கின்றன.
பரம ஞானிக்கு பிராம்மணன் பஞ்சமன் (ப்ராம்மணே … ச்வபாகே) என்ற வித்யாஸம் தெரியாது என்று கீதையில் (5.18) சொல்லியிருக்கிறது. நமக்கும்கூட, காரியத்தில் பேதத்தைப் பார்த்தாலும் மனஸில் சுரக்கும் அன்பில் வித்யாஸமே கூடாது என்கிற மாதிரிதான் ரந்திதேவன் முதலில் பிராம்மணனுக்கும் கடைசியில் பஞ்சமனுக்கும் தானம் பண்ணியிருக்கிறான். இந்தக் கார்த்திகை தீப ஸ்லோகத்திலும் ”ஸ்வபசா ஹி விப்ரா: என்று பஞ்சமன், ப்ராம்மணன் இருவரையும் சொல்லியிருக்கிறது. க்ஷேமத்தைக் கோரும்போது ஜாதி வித்யாஸமே இல்லை. நல்லவன் கெட்டவன் என்றும் வித்யாஸம் பார்க்கக் கூடாது. மஹாபாபத்தைச் செய்துவிட்டு நரகவாஸிகளாயிருப்பவர்களிடமும் அன்பு பாராட்டி, அவர்களுக்கும் உபகாரம் செய்யச் சொல்வது நம் சாஸ்த்ரம்.
_____________________________________________________________________________________________________________
The Philosophy behind Karthigai Deepam
We light a lot of lamps during the festival of Karthigai Deepam. Our sastras have enjoined upon us to recite a sloka:
KeetaaH pathangaaH mashakaashcha vrukShaaH
jale sTHale ye nivasanthi jeevaaH
dhrushtvaa pradeepam na cha janma BHaajaaH
BHavanthi nithyam shvapachaa hi vipraaH
This sloka is a prayer to Bhagawan to grant the boon of eternal bliss on all those beings which see this light. The being may be a worm or a bird or an ordinary mosquito or any living being in this universe or even a tree which we do not generally consider to be having a life of its own or a human being of any caste or creed. The sloka not only refers to those beings which live on the land or in the water. Since in its initial lines, the sloka has made a reference to birds and mosquitoes, it must be understood that the sloka has included the creatures that fly. Though it flies in the sky, a mosquito lays eggs in the water. A bird builds it nest among the branches of a tree and brings up its little ones. Fish lives only in the water; whereas a frog is an amphibian- it can live on the land and in the water. Many animals can live only on the land. In this manner, this sloka categorizes the living beings and prays for the absolution of their sins and eventual salvation.
Though the sloka refers to those beings which see the light of Karthigai Deepam, can a tree see like we do? Though the modern scientists declare that plants have feelings, we do not know whether they have the faculty of vision. It seems to be more appropriate to interpret it in the following way: “the being may be unable to see the light as in the case of a tree or does not see the light even if it has the capability; but let all those living beings on whom the brightness of this light falls be freed from the shackles of sin, the cycle of birth and death and be bestowed with eternal blessing.”
As how the light of a lamp falls on all living beings without any distinction, similarly the love from our heart should embrace everybody by its very brightness. With this light glowing in our heart, we should light the Karthigai Deepam as an external manifestation of this inner light.
In olden days, Chokkappaanai used to be lit in front of the temples with the help of a lamp brought from the temple. In the holy town of Thiruvannamalai , a huge lamp is lit during the Karthigai Deepam on top of the holy hill. There is significance behind all these acts of devotion. A small lamp cannot throw its light far and wide. The brightness of a Chokkappaanai can be seen for a long distance. When a lamp is lit on the top of a hill, as in Thiruvannamalai, it can be seen even from far off places, When the brightness falls upon all the beings within this huge boundary, their sins are washed away.. This noble thought was the inspiration behind Chokkappaanai and Thiruvannamalai Deepam.
Generally, two legged and four legged creatures are more in number. A bee has six legs, a spider eight, and many creatures have countless legs. Vedas, our holy scriptures not only frequently refer to the two legged and four legged creatures as Dwipaadh and Chathushpaadh and pray for their well being but also pray for the welfare of creatures with numerous legs and like snakes and fish which have no legs at all. There are mantraas or holy chants to this effect.
Srimadh Bhagawad Gita states that the enlightened one never makes a distinction among living beings. We should also ensure that the love from our heart flows across to everyone without making any differences though we may follow some distinctions in the work we do. Randhi Devan taught us this lesson when he gave charity without bothering about the caste or creed. This Karthigai Deepam sloka also includes people of all castes and creeds. When we pray for the welfare of people, we should not worry about his caste or even his conduct- he may be good or bad. Our sastras instructs us to love and help even those who suffer in hell because of the unforgivable sins they have committed.
Categories: Deivathin Kural
Reblogged this on Sage of Kanchi.
Jai Ma
My very dearest Mahaswamigal,
ALL plants, trees included, SEE light, and are exquisitely sensitive to light. This fool has been studying this subject all its academic light and scientists are discovering more and more facets of how plants SEE and SENSE light, the spectral quality of light at Every wavelength from the ultraviolet to the far, far, red, sense when shadows fall on them, and so much more.
Are keenly aware of cloudy days vs. sunny one, and wake up in the morning responding to the Lord SuryaNarayana’s rays in very particular ways. I want to tell you more but You already know all this and so much more, in Your ShivaSwarupa. Still, it is fun to talk to You, knowing You will relish the foolish prattle.
So, yes, Dearest Mahaswamigal, Your very dear trees and plants, oShadhiShu vanaspatiShu, not only are exquisitely sensitive to light, they are also constantly able to communicate with each other by multiple pathways, some of which are aerial [ e.g. volatile compounds] and some of which are subterranean [ networks of fungi, of root grafts in some cases joinin entire forests as in the oak-birch forests, and via biofilms of extreme complexity].
So much more that we cannot yet imagine but You certainly know. It is always wonderful talking to You, like small children rushing up to their Father with silly discoveries as they explore the world unfolding around them. The Father pretends to find such infantile silliness awesome. So it is with You!!
And the trees also do talk to so many insects and microbes living on and inside their bodies. The entire biosphere is alive and sentient, vibrantly so. Hence, the Deepam Light certainly must resonate strongly in the whole bhuvana that is alive, expectant, and joyous.
With much love and humble pranams
Very beautiful. Sharing the light of love with all, such a beautiful meaning behind the festival as explained by our Ummachi thatha 🙂
Thanks for the explanation