Periyava Golden Quotes-967


கோதுமை எப்படியிருக்கிறது? ஊகமுள் மாதிரி சிறுத்து ஆரம்பிக்கிறது. நடுவிலே பெருத்து மறுபடி சிறுத்து முடிகிறது. இதேபோல் சாந்த்ராயண நியமத்தை சுக்லபக்ஷப் பிரதமையில் ஆரம்பித்து, அன்றைக்கு ஒரே ஒரு கவளம் போஜனம் செய்ய வேண்டும். அப்புறம் ஒவ்வொரு திதிக்கும் ஒவ்வொரு கவளம் கூட்டிக் கொண்டே போக வேண்டும். பௌர்ணமியன்று பதினைந்து கவளமாகும். அதற்கு மறுநாளிலிருந்து கிருஷ்ணபக்ஷம் பூராவும் ஒவ்வொரு கவளமாகக் குறைத்துக் கொண்டே வந்து அமாவாஸ்யையன்று சுத்த உபவாஸத்துடன் முடிக்க வேண்டும். சாந்த்ராயணத்தில் முழுப்பட்டினி கிடக்கும் நாள் தவிர மற்ற தினங்களில் ஒரே வேளைதான் சாப்பிட வேண்டும் – அன்றைக்கு எத்தனைக் கவளமோ அந்தக் கணக்குப்படி. – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்

How does wheat look?  It starts very sharp like a thorn.  It is expanded in the middle and ends narrow again.  Similarly when the Chandrayana practice is commenced on Sukla Paksha first day, one morsel of food should be taken.  For each passing day, it gets increased by one and on full moon day (pournami), it will be 15 morsels of food.  From the next day, when Krishna paksha starts, a measure is decreased for every passing day, concluding with complete fast on new moon day (Amavasya).In Chandrayana, other than the day on which complete fasting is observed, only one time food should be taken on all days, as per the number of measures applicable to that day. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal



Categories: Deivathin Kural, Golden Quotes

Tags:

Leave a Reply

%d bloggers like this: