Jaya Jaya Sankara Hara Hara Sankara – Is Ambal and Sriman Narayana one and the same? What does the forms Ardhanareeshwara and Sankaranarayana signify? Sri Periyava explains beautifully. This is the first of many parts to follow.
Many Jaya Jaya Sankara to Smt. Sunitha Madhavan for the translation. Rama Rama
சிவத்தின் சக்தி; நாராயண ஸஹோதரி
பரப்பிரம்மத்தின் சக்திதான் அம்பாள். ஒரு வஸ்துவின் சக்தி அந்த வஸ்துவோடு இரண்டறக் கலந்த விஷயம். வஸ்து இல்லாமல் அந்த சக்தி இல்லை. சக்தி இல்லா விட்டால் அந்த வஸ்துவும் இல்லை. ஆனபடியால் பிரம்மமேதான் சக்தி. பிரம்மத்தை ஈசுவரன் என்றால் அந்த ஈசுவரனோடு இரண்டறக் கலந்திருக்கிறவள் அம்பாள். பூவும் வாசனையும் தனித்தனியாய் இருக்க முடியுமா? பால் வேறு, அதன் வெளுப்பு வேறு என்று இருக்க முடியுமா? தேன் வேறு, அதன் தித்திப்பு வேறு என்று பிரிக்க முடியுமா? இப்படியே ஈசுவரனில் பிரிவறத் தோய்ந்திருக்கிறாள் அம்பாள். பரமேசுவரனும் பராசக்தியும் பிரிக்க முடியாமல் ஒன்றாயிருக்கிற ஆதி தம்பதி; சகல சிருஷ்டிக்கும் தந்தையும் தாயும் அவர்கள் தாம்.
தாய் வேறு, தந்தை வேறு என்று ஒரேடியாகப் பிரித்துச் சொல்ல முடியாமல், அம்மையப்பனாக, தாயுமானவராக இருக்கிற ஸ்வரூபம் அது. இரண்டும் இரு ரூபமாக இல்லாமல் ஒன்றாகக் கலந்த சிவ – சக்திகளே அர்த்தநாரீசுவரத் திருக்கோலம். நமக்கு அம்மா, அப்பா என்று இரண்டு ரூபங்கள் அநுக்கிரஹத்துக்கு வேண்டியிருக்கின்றன. நம்மைக் கண்டித்து உபதேசித்து ஞானத்தைக் கொடுக்கிற தகப்பனார் வேண்டும். நம்மிடம் எப்போதும் அன்பு கொண்டு ரக்ஷிக்கிற தாயாரும் வேண்டும். ஆனால் அவர்கள் வேறுவேறாகப் பிரிந்திருந்தாலோ தத்வ ரீதியில் சரியாக இல்லை. இதனால்தான் ஈசுவரனும் அம்பாளும் ஒரே ரூபத்தில் ஒரே சரீரத்தில் ஒரு பாதி அவர் மறுபாதி இவள் என்று அர்த்தநாரீசுவரராக ஆவிர்பவித்திருக்கிறார்கள்.
‘சம்பு என்கிற சத்தியம் அருவமானது; அதன் உருவமே நீதான்’ (சரீரம் த்வம் சம்போ:) என்று நம் ஆசார்யாள் அம்பாளைப் பார்த்துச் சொல்கிறார். அரூபம் ரூபமானதே அவளது சக்தியால்தான். ஆனாலும் சுத்த ஞான மயமாக இருக்கப்பட்ட அம்பாளின் பிரம்மம், அதன் அநுக்கிரஹ ரூபமான அம்பாள் இரண்டையும், தந்தையாகவும், தாயாகவும் பார்க்க வேண்டும்போல் நமக்கு ஆசையாக இருக்கிறது. இதற்காகத்தான் பரமேசுவரனுக்கும் ஒரு சகல ரூபம் இருக்கிறது. அப்புறம் தாயார், தகப்பனார் என்று முழுவதும் பிரிந்து விடாமல் ஒரு பொது ரூபமும் நமக்கு வேண்டியிருக்கிறது. இதற்காகவே இவரும் சேர்ந்து வலப்பாதி பரமேசுவரனாகவும் இடப்பாதி அம்பாளாகவும் அர்த்தநாரீசுவர ரூபம் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். பாஸிடிவ், நெகடிவ் என்கிற இரண்டாக ஒரே எலெக்ட்ரிஸிடி இருப்பதுபோல் ஒரே பரம சத்தியம் அர்த்தநாரீசுவர ரூபம் கொண்டிருக்கிறது.
அர்த்தநாரீசுவரக் கோலத்தைப் பார்க்கிறபோது, பிறப்புக்குக் காரணமான காமனைத் தகனம் செய்த நெற்றிக் கண்ணில் பாதி சம்பந்தம் அம்பாளுக்கு இருக்கிறது. இறப்புக்குக் காரணமான காலனை உதைத்து ஸம்ஹாரம் பண்ணின இடது காலோ முழுக்கவும் அவளுடையதாக இருக்கிறது. இதிலிருந்து, ஜனன மரணச் சூழலிலிருந்து ஜீவனை விடுவிக்கிறவள் அவள்தான் என்று தெரிகிறது.
சிவனும் சக்தியும் பிரிக்க முடியாதவை என்பதையறிந்து, ஸ்வாமி அம்பாள் இருவரிடத்திலும் ஒரே போன்ற பக்தி வைக்க வேண்டும். ஒருத்தரை ஒதுக்கி மற்றவரிடம் மட்டும் பக்தி வைத்தால் போதாது என்பார்கள். இரண்டு பேரிடமும் சேர்ந்து அன்பு வைக்கிற போதுதான், அவர் அவளுக்கு ஆதாரமாக இருக்கப்பட்ட அவளுடைய பதி, அவள் அவரை விட்டு நீங்க முடியாத அவளுடைய சக்தி என்கிற ஞானம் நீங்காமல் இருக்கும். இருவரில் ஒருவரை ஒதுக்கிவிட்டால் இந்த ஸதி – பதி உறவு மறந்துபோய், பக்தி விபரீதமாகிறது. சூர்ப்பனகை சீதையைத் துவேஷித்து ராமரிடம் மட்டும் வைத்த அன்பும், ராவணன் ராமரைத் துவேஷித்து ஸீதா தேவியிடம் மட்டும் வைத்த அன்பும் விபரீதமாகி காமமாக ஆயின என்று உங்களுக்குத் தெரியும். பலனும் விபரீதமாகவே ஆயிற்று. இப்படி விபரீத பலன்கள் இல்லாமல், பூரண அநுக்கிரஹம் வேண்டுமானால், அம்பாளும் ஈஸ்வரனும் அர்த்தநாரீசுவரராக இருப்பதை எந்நாளும் மறக்காமல் பக்தி செலுத்த வேண்டும். அவர் ‘மாதொரு பாகன்’, அவள் ‘பாகம் பிரியாள்’ என்பதை நினைவு கொண்டு இருவரிடமும் அன்பு வைக்க வேண்டும்.
அர்த்த நாரீசுவர ரூபத்தில் எந்த இடது பக்கம் அம்பாளுடையதாக இருக்கிறதோ, அதுவே சங்கர நாராயண மூர்த்தத்தில் மஹாவிஷ்ணுவுடையதாக இருக்கிறது. இதிலிருந்து அம்பாளேதான் மஹாவிஷ்ணு என்றாகிறது. திருவையாற்றில் உள்ள ஈஸ்வரனைப் பற்றித் துதிக்கிறபோது, அவருக்கு ஹரியைத்தவிர வேறு பத்தினி இல்லையென்று அப்பர் ஸ்வாமிகள் சொல்கிறார்.
‘அரியலால் தேவியில்லை
ஐயன் ஐயாறனார்க்கே’
அம்பாளும் மஹாவிஷ்ணுவும் ஒன்றேதான் என்கிற தத்துவத்தையே புராண ரீதியில் சொல்கிறபோது அவளை நாராயண ஸஹோதரி என்கிறோம்.
அர்த்தநாரீசுவரர் ஆகட்டும், சங்கர நாராயணர் ஆகட்டும், இரண்டிலும் வலது பக்கம் பரப்பிரம்ம ஸ்வரூபமான பரமேசுவரனே இருக்கிறார். வலது என்பதை எலெக்ரிஸிடியில் பாஸிடிவ் என்று வைத்துக் கொண்டால் இடப்பக்கம் நெகடிவ் ஆகிறது. பாஸிடீவ் சக்தி ஒரு மையக் கருவாக (Nucleus) இருக்க, நெகடிவ் சக்தி அதைச் சுற்றி அதிவேகமாகச் சுழன்று கொண்டிருப்பதாக அணு விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். உலகம் எல்லாவற்றுக்கும் ஆதாரமாக, ஆனால் காரியமேயில்லாமல் இருக்கிற நிர்குணமான பிரம்மத்தை மையமாக, ஆதாரமாகக் கொண்டு உலகத்தை எல்லாம் சிருஷ்டித்து நடத்திக் காரியத்தைச் செய்து வருகிற சகுணமான சக்தி இயங்குவது பாஸிடிவைச் சுற்றி நெகடிவ் சுழலுகிறதுதான். இதுவே ஆராதனைக்காக ஒரு மூர்த்தியாக வருகிறபோது, மத்திய நியூக்ளியஸ் – சுற்றி வருகிற சக்தி என்றில்லாமல் வலது பக்கம், இடது பக்கம் என்று இரண்டு கூறுகளாக திவ்ய ஆகாரம் (வடிவம்) எடுத்துக் கொள்கிறது. இதில் வலது பாஸிடிவ், செயலில்லாத ஆதார பிரம்மம்; இடது நெகடிவ், சகல காரியங்களுக்கும் மூலமான பிரம்மத்தின் சக்தி. இடது கூறு அர்த்தநாரீசுவர ஸ்வரூபத்தில், ஸ்திரீ ரூபமாகி அம்பாளாயிருக்கிறது; சங்கர நாராயண வடிவத்தில் புருஷ ஆகாரம் கொண்டு ஸ்ரீமகா விஷ்ணுவாக இருக்கிறது.
________________________________________________________________________________________________________
The Strength of Shiva; Narayana’s Sister
The potential energy of the Supreme Being is certainly Ambal. The power of a thing is inherently present in the thing itself. Without that power it will cease to exist. If we say that the Ultimate reality is Eswara, then the inseparable vital energy in Him is Ambal. Can the flower and its fragrance have separate existence? Is it possible to separate the milk and its whiteness? Can honey be separated from its sweetness? Similarly, Ambal is inseparably present in Eswara. Parameswaran and Parasakthi are the primal universal couple. They are the father and mother of the entire creation. They are one whole. They cannot be considered as two different entities, the mother being different from the father. In unison they take the form of Ammaiappan i.e. mother and father combined. He is also the Thayumaanavar, the father who is simultaneously a mother too. Shiva and Parvathi, without having two separate forms appear as one single divinity in Ardhanareeswara. However we need father and mother as two separate personalities to care of and protect us. To discipline us and to impart knowledge we require father. To lavish love on us and to nurture us we also need mother. But philosophically it is not right to think that they exist separately. That is why in the same figurine, Eswara and Ambal coexist as two halves. They appear together in one bodily form namely the Ardhanareeswara, where Easwara is one half and Ambal, the other.
“Sambu is Truth which is formless. Its form is you” (Shareeram Thvam Sambu) said our Acharyal, looking at Ambal. The formless Sambu has a form because of Her vigor. But we wish to visualize the two, pure wisdom that is the formless Brahman and compassionate Ambal who bestows form to It, as father and mother. Parameswaran has one unique form and to our liking, the father and mother principle should not be put asunder. It is precisely for this reason that they are united as one, taking the Ardhanareeswara form, wherein the right side is Parameswaran and the left side is Ambal. Just as electricity has positive and negative charges, the same Universal Truth has taken the Ardhanareeswara form.
Looking at the Ardhanareeswara form, we realize that Ambal shares half of the eye in the forehead that burnt down Manmatha, who is the cause for procreation. The left leg which was responsible for kicking out Kala [Yama] also entirely belongs to Her. From this we get to understand that Ambal alone can liberate the being i.e. Jiva from the cycle of birth and death.
We should maintain the same intense devotion towards Swami and Ambal, with a clear knowledge that Shiva and Shakthi are inseparable. It is not sufficient to do obeisance to one of them alone and excluding the other. Only when we fix our devotion on both of them, the spiritual awareness, that as Her consort He is Her strength, and that She is forever His inseparable energy, will get established in us and will never leave us.
Forgetting this man-wife relationship, if we separate one of them, then the adoration turns sinister. You all know how Surpanaka’s desire only for Rama, with embitterment towards Sita and Ravana’s condemnation of Rama due to his obsession for Sita Devi degraded their love to dangerous lust. The ensuing consequences were also disastrous. In order to avert such perilous outcomes and to receive the blessings in full, we should always pay obesience without forgetting the fact that Ambal and Easwara are present in Ardhanareeswarar. We should place our devotion on both of them, bearing in mind that, He is half of Her and She is His inseparable half.
The same left side of Shiva where Ambal resides in the Ardhanareeswarar form, belongs to Mahavishnu in the Sankaranarayanan’s figurine. From this it is established that Ambal is Mahavishnu. Appar Swamigal while singing devotional songs on Easwara at Thiruvaiyaru declares that except Hari, Shiva has no other consort.
‘’Ari alaal Devi illai Aiyan aiyaaranarke’’
[‘’Other than Hari there is no other Devi for Eswara, the Lord of the land where the five rivers flow’’]
While cognizing Ambal and Mahavishnu to be the same, adhering to the Puranas we address Her as Narayana’s sister.
Be it Ardhanareewarar or Sankaranarayanan, Parameswarar, the Parabrahma Swaroopam is seen on the right side in both the cases. If the right side is considered as the positive discharge of electricity, left becomes the negative. The nuclear scientists tell us that if the positive current is the nucleus, then the negative current spins around it in great speed. The inert, formless Brahman, the support for everything, stays in the centre as the basis for creation of all worlds and their functioning, invigorated by Shakthi. This is akin to the negative current spinning around the positive. The same is perceived in deity worship; the central nucleus without the energy flowing around it, takes the auspicious form with right and left halves. In this the right side is the positive, the fixed motionless Brahman. Left side is the negative, active causal energy which is the Shakthi for carrying out the entire activities of Brahman. The left part in Ardhanareeswara form is Ambal, the female principle. In Sankaranarayanan’s deity it is Mahavishnu, the male principle.
Categories: Deivathin Kural
Leave a Reply