Periyava Golden Quoes-957


கர்ம பலனில் அனாச்ரிதனாக இருந்து கொண்டு, எவன் வாய்த்த கர்மாவைப் பண்ணுகிறானோ ‘அப்படிப் பட்டவனே ஸந்நியாஸி அவனே யோகி – “ஸ ஸந்ந்யாஸீ ச யோகீ ச” என்று முத்தாய்ப்பு வைத்துவிட்டு, அப்புறந்தான் அதற்கு இன்னம் வலுக்கொடுப்பதற்காக, “ந நிரக்நிர் ந சாக்ரிய:” — நெருப்பை விட்டவனோ கர்மாவை விட்டவனோ இல்லை”என்கிறார்.

இதற்கு சரியாக அர்த்தம் பண்ணிக் கொண்டால், “ஸந்நியாஸ ஆச்ரமத்திலிருக்கிற ஒருவன் வெறுமே ‘நெருப்பை விட்டேன், கர்மாவை விட்டேன்’ என்று சொல்லிக் கொண்டே சொந்தப் பலனை உத்தேசித்து வேலைகள் பண்ணிக் கொண்டிருந்தால் அது ஸந்நியாஸமே இல்லை” என்று பகவான் சொல்வதாகவே ஆகும். இவன் அக்னியை விடத்தான் வேண்டும். தான் கர்த்தா என்ற எண்ணத்தோடு கர்மா செய்வதை விடத்தான் வேண்டும்; ஆனாலும் இதைவிட முக்யம் பலனை எதிர்பார்க்காமல் பட்டுக் கொள்ளாமல் வாய்த்த கர்மாவைப் பண்ண வேண்டும் என்பதே அர்த்தம்.- ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்

The person who does his duties without expecting any benefit out of it, is a true sanyasi and a yogi, – “Sa Sanyasi cha Yogi cha’, then to reinforce the point further, he says that “Na Niragnir Na Sakriya:” – simply because a person has relinquished fire, he does not become a sanyasi (renunciate); or a person forsaking activity, does not make him a sanyasi”.

If we understand this correctly, Bhagawan is conveying that there is no use if a person who is in the hermitage (Sanyasa life), says that he has stopped offerings to fire, stopped doing activities, etc., but going about doing the activities with an eye on the benefits for himself out of the endeavour. It only means that, he has to forsake fire.  He has to do his duties not thinking that he is himself doing it.  However, it is more important that he should be doing it without any expectations on the benefits. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal



Categories: Deivathin Kural

Tags:

Leave a Reply

%d bloggers like this: