66.5 Sri Sankara Charitham by Maha Periyava – Evidences for Divine incarnate in Veda, Ithihasa, Puranas


Jaya Jaya Sankara Hara Hara Sankara – The evidences deluge continues to pour from our Periyava.  Apart Shankara Vijayam texts, the proof that our Bhagawath Padhal is none than Parameswara has been quoted in Rig Veda, Sri Rudram, Shiva Rahasya, Markandeya Samhithai, Vishnu Dharmotharam, Vayu Purana, Koorma Purana, Linga Purana, Bhavishyothara Purana, Soura Purana, etc. What else do we need?

Many Jaya Jaya Sankara to our sathsang volunteers, Shri ST Ravi kumar for the great translation and Smt. Sowmya Murali for another fine drawing & audio. Rama Rama

 

ஈச்வராவதார ப்ரமாணங்கள்: வேத-இதிஹாச-புராணங்களில்

கூர்ம புராணத்திலும் ஈஸ்வரனே ஆசார்யாளாக அவதரித்ததைச் சொல்லியிருக்கிறது.

கரிஷ்யத்-யவதாரம் ஸ்வம் சங்கரோ நீலலோஹித: | 
ச்ரௌத்- ஸ்மார்த்த- ப்ரதிஷ்டார்த்தம் பூதாநாம் ஹித-காம்யயா ||

என்பதாக பரம கருணையினால் ஈஸ்வரன் ஜனங்களுக்கு ஹிதம் செய்யவே ஆசார்யாளாக வந்ததைச் சொல்லியிருக்கிறது. ஈஸ்வரன் செய்ய ஆசைப்பட்டது லோக ஹிதம் (உலக நலன்): “பூதாநாம் ஹிதம்”. இப்படி ஹிதம் செய்ய விரும்பிய அவனோ நீலலோஹிதன்! நீலம் என்றால் நீர்வர்ணம்தான். லோஹிதம் என்றால் சிவப்பு. சிவனைச் சிவப்பு நிறம் என்றும் சுத்த ஸ்படிக நிறம் என்றும் இரண்டு விதமாகச் சொல்வதுண்டு. ஸாதாரணமாக, வடதேசத்தில், ஸம்ஸ்க்ருத நூல்களில் சுத்த வெளுப்பு, ஸ்படிக வர்ணம் என்றும், தெற்கே தமிழ் நூல்களில் ‘பவளம் போல் மேனி’, ‘செம்மேனி அம்மான்’ என்றும் சொல்லியிருக்கும். ஆனாலும் வேதத்திலேயே — ‘ஸ்ரீருத்ர’த்திலேயே — தாம்ர வர்ணமாய், அருண வர்ணமாய், ‘விலோஹிதன்’ என்றே சொல்லும்படி நல்ல லோஹித வர்ணமாய் பரமசிவன் இருப்பதையும் சொல்லியிருக்கிறது. அந்தச் சிவப்பு சிவனே இடது பாகத்தில் நீலமான அம்பாளை வைத்துக்கொண்டு அர்த்தநாரீச்வரனாகவோ, அல்லது மகாவிஷ்ணுவை வைத்துக்கொண்டு ஹரிஹர மூர்த்தியாகவோ இருக்கும்போது ‘நீலலோஹிதன்’ எனப்படுவார். ஸந்த்யாவந்தன உபஸ்தான திக்-வந்தனத்தில் மேற்குப் பார்த்துச் சொல்லும் ஹரஹர மந்த்ரத்தில் இதையே ‘க்ருஷ்ண-பிங்களம்’ என்று சொல்லியிருக்கிறது. ‘க்ருஷ்ண’ என்பது ச்யாமளமான விஷ்ணு; ‘பிங்கள’ என்பது சிவந்த பரமசிவன். கூர்ம புராணத்தில் சக்தி ஸஹிதரான பரமேச்வரன் தாமே சங்கராசார்யராக அவதரிக்கப் போவதைத்தான்.

“கரிஷ்யத் – யவதாரம் ஸ்வம் சங்கரோ நீலலோஹித:”

என்று சொல்லியிருக்கிறது. ஜனங்களுக்குப் பரம ஹிதம் செய்ய விரும்பி ஈச்வரன் ‘ச்ரௌதம்’ என்னும் வேத வழக்குகளையும், ‘ஸ்மார்த்தம்’ என்னும் தர்ம சாஸ்த்ர அநுஷ்டானங்களையும் மறுபடியும் நன்கு நிலைநாட்டுவதற்காகவே இந்த அவதாரம் எடுத்தான் என்பதை, ச்ரௌத – ஸ்மார்த்த – ப்ரதிஷ்டார்த்தம் பூதாநாம் ஹித காம்யயாஎன்று சொல்லியிருக்கிறது.

லிங்க புராணத்திலும் இப்படியே, ”வேத வித்யைகளும், வேத கர்மாக்களும் கலியுகத்தில் ரொம்பவும் நிந்தனைக்கு ஆளாகும் ஸமயத்தில் நீலலோஹிதன் என்கிற ருத்ரனாகிய மஹாதேவன் சங்கரராக வந்து தர்மங்களையெல்லாம் பிரகாசப்படுத்தி, கலிதோஷத்தை முறியடித்து வெற்றி கொண்டு அப்புறம் தம்முடைய பரம பதத்திற்குத் திரும்பப் போகிறார்” என்று சொல்லியிருக்கிறது:

நிந்தந்தி வேதவித்யாம்ச்ச த்விஜா: கர்மாணி வை கலௌ | 
கலௌ ருத்ரோ மஹாதேவ: சங்கரோ நீலலோஹித: ||
ப்ரகாசதே ப்ரதிஷ்டார்த்தம் தர்மச்ச விக்ருதாக்ருதி: | 
ஏதம் விப்ராநிஷேவந்தே ஏநகேநாபி சங்கரம் || 
கலிதோஷாந் விநிர்ஜித்ய ப்ரயாந்தி பரமம் பதம் ||

‘பவிஷ்யோத்தர புராணம்’ என்பதாக வருங்காலத்தை சொல்லும் புராணம், “கலி பிறந்து இரண்டாவது ஆயிரம் முடியும்போது லோகாநுக்ரஹம் செய்ய வேண்டும் என்ற ஆசையினால் நாலு சிஷ்யர்களோடு சங்கரர் அவதரிக்கப் போகிறார்” என்று சொல்கிறது:

கல்யாதௌ த்விஸஹஸ்றானதே லோகாநுக்ரஹ- காம்யயா | 
சதுர்பி: ஸஹ சிஷ்யைஸ்து சங்கரோ (அ)வதரிஷ்யதி||

இதிலே இரண்டாவது வரி அப்படியே வாயு புராணத்திலும் இருப்பதைத்தான் ஸ்ரீருத்ர பாஷ்யக்காரர் மேற்கோள் காட்டினாரென்று பார்த்தோம். ‘பூதாநாம் ஹித காம்யயா’ என்று கூர்ம புராணம் சொல்வதையே இங்கு ‘லோகாநுக்ரஹ காம்யயா’ என்று சொல்லியிருக்கிறது.

ப்ரஹ்மாண்ட புராணம் என்று ஒரு புராணம். லலிதா ஸஹஸ்ரநாமம், லலிதாம்பிகையின் கதை முழுவதையும் கூறுவதான லலிதோபாக்யானம் ஆகியன அதன் உத்தரபாகத்தில்தான் வருகின்றன. அந்தப் புராணத்தின் ஒரு பிரிவு மார்க்கண்டேய ஸம்ஹிதை6 என்பது. அதில் மூன்றாவது பரிஸ்பந்தத்தில் (அத்யாயத்தில்) ஆசார்யாளின் அவதார விசேஷம் சொல்லப்பட்டிருக்கிறது.

லோகானுக்ரஹத்திலேயே சிந்தையாய் இருந்ததால் ஈச்வரன் இப்படி அவதாரம் பண்ணினான். அவனுக்காகவேஅந்த எண்ணம் இருந்தபோதிலும், ப்ரம்மாதி தேவர்கள் பெடிஷன் கொடுத்தபின் அவதாரம் எடுத்தான். நாஸ்திகமான சார்வாகாதி மதங்களை அழிப்பதற்காகக் காலடியிலிருந்த சிவகுரு என்று ப்ராம்மணோத்தமரின் பத்னிக்கு சங்கரர் என்ற பெயரையுடைய பிள்ளையாகப் பிறந்தான் என்று அதில் சொல்லியிருக்கிறது.

லோகானுக்ரஹ-தத்பர: பரமசிவ:ஸம்ப்ரார்த்திதோ ப்ரஹ்மணா | 
சார்வாகாதி மத ப்ரபேத நிபுணாம் புத்திம் ஸதாதாராயந் ||
காலட்யாக்ய புரோத்தமே சிவகுரூர் வித்யாதி நாதச்ச ய: | 
தத்-பத்ந்யாம் சிவதாரகாம்ச முதித: ஸ்ரீசங்கராக்யாம் வஹந் ||

ஸௌர புராணம் என்று ஸூர்யனையே பரமாத்வாகச் சொல்லும் ஒரு புராணம் இருக்கிறது. ஸூர்யனுக்கு ஸவிதா என்று ஒரு பெயர். ‘ஸாவித்ரி’ என்பது இந்த ‘ஸவிதா’வின் தொடர்பாக ஏற்பட்ட பெயர்தான். தாயாக உயிரை உண்டாக்கிப் போஷிப்பதால் ஸவிதா என்று பெயர். ‘ப்ரஸவம்‘ என்று ஒரு உயிர் பிறப்பதைச் சொல்கிறோமல்லவா? ஸவ – ஸவிதா. காயத்ரி மஹாமந்த்ரத்தில் ஸவிதா என்ற பெயரே குறிப்பிடப்படுகிறது. அந்த ஸவிதாதான் சங்கரராகப் பிறந்து வ்யாஸாசார்யாளின் ப்ரஹ்ம ஸூத்ரத்தின் ஸரியான அர்த்தத்தை விளக்கிச் சொல்லி, வேதத்தின் பரமதாத்பர்யத்தையே தர்க்க ரீதியில் ஸ்தாபித்தவர் என்று சௌர புராணத்தில் சொல்லியிருக்கிறது.

வ்யகுர்வந் வ்யாஸ ஸூத்ரார்த்தம் ச்ருதேரர்த்தம் யதோசிவாந் | 
ச்ருதேர்-ந்யாய்ய: ஸ ஏவார்த்த: சங்கர: ஸவிதாநநா ||

(“ஸவிதாநநா” என்பது “ஸவிதா ந நா” என்று மூன்று பதங்களாகப் பிரிய வேண்டும். இது குறித்து ஸ்ரீசரணர்களின் விளக்கம்: “ஆச்சார்யாள் தெய்வமான ஸவிதாவே; அதாவது ஸூர்யனே: ஸாதாரண மனுஷ்யரில்லை என்று ச்லோகம் சொல்கிறது. ‘ந நா’ என்றால் மனுஷ்யர் இல்லை. ‘பித்ரு’ என்பது ‘பிதா’ என்று வருகிறது. ‘ஸவித்ரு’ என்பது ‘ஸவிதா’வாகிறது. ‘நர’ என்பதை ‘ந்ரு’ என்றும் சொல்வதுண்டு. ‘நரஸிம்ஹ’த்தை ‘ந்ருஸிம்ஹம்’ என்றும் சொல்கிறோமல்லவா” ‘பித்ரு-பிதா’, ‘ஸவித்ரு-ஸவிதா’ மாதிரி ‘ந்ரு – நா’. அதாவது ‘நா’ என்றாலே நாம் நரர், மநுஷ்யர் என்று சொல்வது. “ந நா” என்றால் ‘மநுஷ்யரில்லை’ என்று அர்த்தம்”).

சிவாவதாரம் என்று மற்ற புராணங்கள் சொல்லும் போதும் அந்த சிவனைப் பரமாத்மாவாகக் கருதியே அப்படிச் சொல்லியிருக்கிறது. இங்கே ஸூர்யனைப் பரமாத்வாகக் கருதும் புராணத்தில் ஸூர்ய மூர்த்தி தான் அவ்வாறு அவதரித்தது என்று சொன்னால் இதுவும் அதே அபிப்ராயத்தைத்தான் கொடுக்கிறது.

ஆசார்யாளை ஸூர்ய மூர்த்தியாகச் சொல்வதிலும் ஒரு தனிப் பொருத்தம் இருக்கிறது. அஞ்ஞானத்தைத் தமஸாகவும் (இருட்டாகவும்) ஞானம் தருபவரைத் தமஸைப் போக்கி ப்ரகாசத்தைக் கொடுக்கும் ஸூர்யனாகவும் சொல்வது வழக்கத்தில் உள்ளதுதான். “ஞான பாஸ்கரன்” என்று மஹாமதியாக இருக்கப்பட்டவர்களைச் சொல்வதுண்டு. குறிப்பாக நமக்கு இவ்விஷயத்தில்என்ன குதூஹலம் அளிக்கிறதென்றால் ஆசார்யாளின் நேர் சிஷ்யர்களாக இருந்த இரண்டு பேர் — மஹா பெரியவர்கள் — அவரை இப்படி ஸூர்யனாகச் சொல்லியிருப்பதுதான்.

ஆசார்யாளைப் பற்றிய ஸ்தோத்ரங்களில் முதல் ஸ்தானம் பெற்றிருப்பது “தோடகாஷ்டகம்”7. நேர் சிஷ்யரான தோடகர் அவரை ஸ்துதித்துப் பண்ணிய அஷ்டகம். அதில், ஆசார்யாளின் ஸந்நிதானத்தில் நேரே நின்று கொண்டு, அவரைப் பார்த்து, ஒரேயடியாய் ஆனந்த பாஷ்பம் சொரிந்து கொண்டு,

அஹிமாம்சு-ரிவாத்ர விபாஸி!”

என்கிறார். “ஸூர்யனாக இங்கே ஜ்வலித்துக் கொண்டிருக்கிறீர்களே!” என்று அர்த்தம். ஹிமம் என்றால் பனி. ஹிமாம்சு என்றால் பனியைத் தான் கிரணங்களால் பெருகவிடும் சந்திரன். முதலில் ‘அ’ சேர்த்து அஹிமாம்சு என்றால் பனியை வற்ற அடித்துவிடுகிற ஸூர்யன். அப்படிப்பட்ட ஸூர்யனாக ஆசார்யாள் இருக்கிறாராம்!

அவருடைய நான்கு பிரதானமான சிஷ்யர்களில் இன்னொருவர் ஸுரேச்வராசார்யாள். அவர் ஆசார்யாளின் ப்ருஹதாரண்யகோபநிஷத் பாஷ்யத்திற்கு வார்த்திகம் (விரிவுரை) செய்திருக்கிறார். அதில், உதயகிரியிலிருந்து அஸ்தமனமாகிற மலைவாசல் வரையில் ஆசார்யாளான ஞான ஸூர்யன் தம்முடைய கீர்த்திக் கிரணங்களாக உள்ள சிஷ்யர்களால் வியாபித்துக் கொண்டு லோகத்தின் அஞ்ஞானஅந்தகாரம் முழுவதையும் போக்கடிக்கிறார்8 என்று சொல்லியிருக்கிறது.

இப்படியாக, சங்கர விஜயங்களில் மட்டுமில்லாமல் ரிக் வேத ரிக், ஸ்ரீருத்ரம், சிவ ரஹஸ்யம், மார்க்கண்டேய ஸம்ஹிதை, விஷ்ணு தர்மோத்தரம், வாயு புராணம், கூர்ம புராணம், லிங்க புராணம், பவிஷ்யோத்தர புராணம், ஸௌர புராணம் ஆகியவற்றிலும் ஸ்ரீ சங்கர பகவத் பாதாள் மநுஷ்யரில்லை, அவதார மூர்த்தி என்று சொல்லியிருக்கிறது.

__________________________________________________________________________________________________
6 நூறு ‘கண்டங்கள்’ என்ற பிரிவுகள் கொண்டது. ஒவ்வொரு கண்டத்திலும் ‘பரிஸ்பந்தங்கள்’ என்ற உட்பிரிவுகள் உள்ளன. அதன் 72-ம் கண்டத்திலுள்ள 7-8 பரிஸ்பந்தங்கள் ஸ்ரீசங்கரரின் சரிதையைக் கூறுகின்றன.

7 தோடகாஷ்டகம் பிறந்த கதை பின்னால் விரியும்.

8ஆசைலத்- உடையாத்-ததா(அ)ஸ்தகிறித்தோ பாஸ்வத்-யசோரச்மிபி: வ்யாப்தம் விச்வம்-அநந்தகாரம்-அபவத்-யஸ்ய ஸ்ம சிஷ்யைரிதம்

_____________________________________________________________________________________________________________

Evidences for Divine incarnate in Veda, Ithihasa, Puranas

Koorma Purana also mentions that Eswara himself had incarnated as Acharya.

Karishyath-yavathaaram swam Shankaro Neelalohita:
Srowtha-Smaartha-Prathishtaartham Bhoothaanam Hitha-Kaamyaya.

It talks about Eswara having incarnated as Acharya out of absolute compassion to do good to the people.  What Eswara wished to do was bring well-being to the world (Loka hitha): “Bhoothaanam Hitham”. The one who wanted to do good in this way, was Neelalohita!  Neela refers to blue color .  Lohita means, red.  Shiva is described in two ways, reddish as well as, of the colour of pure crystal.  Generally, in the Sanskrit books of the north, he is referred to as pure white, colour of pure crystal and in the tamizh books in the south, ‘Pavalam pol meni’ (having a body like a red coral); or ‘Chemmeni Amman’ (person with reddish body).  However, in the Vedas – Sri Rudra itself, it is mentioned that He is of the colour of copper, so red a colour, as to be described as deep reddish (Vilohithan).  The same reddish Shiva, when he is as Ardhanareeswara, having the blue coloured Ambal on his left side or as Hari Hara Murthy, with Mahavishnu, is called as “Neelalohitha”.  This is what is mentioned as “Krishna Pingalam” in Sandhyavanda, where the Hara Hara mantra is recited towards west, while doing the salutations to different directions. “Krishna” is the dark coloured Vishnu; “Pingala” is the reddish Paramashiva.  While mentioning that the Parameswara, who is with Shakthi is going to incarnate as Shankaracharya, Kurma Purana says,

“Karishyath-Yavathaaram Swam Shankaro Neelalohitha:”

It says, “Srowtha – Smartha – Prathishtaartham Bhoothanam Hitha-Kaamyaya” – that Eswara, wishing to bestow utmost benevolence to the people, in order to re-establish well, the Vedic practices called as ‘Srowtha’ and Dharma Shastras, called ‘Smaartha’ had taken this incarnation.

In the same way, in the Linga Purana also, it is mentioned that “When Vedic practices and Vedic Karmas would be much abused in Kaliyuga, Rudra, the Mahadeva, who is the Neelalohitha, would come as Shankara and revive the path of righteousness (Dharma), vanquish the negativity of Kali, be victorious and return to His heavenly abode”.

Nindanthi Veda Vidhyaascha Dwijaa: Karmaani Vai Kalou
Kalou Rudro Mahadeva: Shankaro Neelalohitha:
Prakashathe Prathishtaartham Dharmacha Vikruthaakruthi:
Etham Vipraanishevanthe Enakenaapi Shankaaram
Kalidhoshaan Vinirjithya Prayaanthi Paramam Padham

The Purana, called “Bhavishyothara Purana”, which talks about future, says, “towards the end of two thousand years after the commencement of Kaliyuga, wishing to do good to the world, Shankara would incarnate with four disciples”.

Kalyaadhow Dwisahasranathe Lokaanugraha-Kaamyaya.
Chathurbhi: Saha Sishyaisthu Shankaro (A)vatharishyathi.

We saw that Sri Rudra Bhasyakara, had only quoted the above second sentence which was found in Vayu Purana also.  What Koorma Purana says as “Bhoothanam Hitha Kamyaya”, is mentioned here as “Lokanugraha Kaamyaya”.

There is a Purana called, Brahmaanda Purana.  Lalitha Sahasranama, Lalithopakyanam, the complete story of Lalithambika etc., are found in its latter part.  One of the divisions of the Purana, is “Markandeya Samhita”6.  The distinguished matter of the incarnation of our Acharya is spelt out in the third chapter.

Since He was seized of the thoughts about the well-being of the world, He took this incarnation.  Although He himself was having this thought, He took the incarnation only after the Devas like Brahma, petitioned to Him.  It is mentioned therein that He was born with the name of Shankara to the wife of a very upright Brahmin by name Shivaguru in Kalady, with a view to quelling the religions like Chaarvakam, which were atheistic.

Lokaangruha-Thathpara: Paramashiva: Sampraarthitho Brahmanaa |
Chaarvaakaadhi Matha Prabheda Nibhunaam Budhim Saadhaatharaayan ||
Kaalatyaakya Purothame Shivagurur Vidhyaadhi Naathascha ya:
Thath-Pathnyaam Shivadhaarakaamcha Mudhitha: Shri Sankaraakyaam Vahan.

There is a purana called, Soura Purana, which refers to Sun as the Supreme being (Paramatma). Surya has a name, Savitha.  “Savithri’ is a name which has evolved only from this.  As it nurtures a life created by being a mother, it has the name, ‘Savitha’.  Don’t we refer a birth of a life, as ‘Prasavam’?  Sava-Savitha.  Gayatri Mahamantra mentions only the name, ‘Savitha’.  In the Soura Purana, it is mentioned as, only that Savitha was born as Shankara, who explained the correct meaning of Brahma Sutra and established the supreme philosophy of Vedas, through arguments.

Vyakurvan Vyaasa Soothraartham Shrutherartham Yathoshivaan |
Shruther-Nyaaya: Sa Evaartha: Shankara: Savithaananaa ||

(“Savithaanana” can be dividied into three parts, as “Savithaa Na Naa”. The explanation of Sri Charanar in this regard: Slokas say that Acharya is the divine Savitha, that is, Sun God himself: not an ordinary human being.  “Na Naa” means not a human.  “Pithru” comes as “Pitha”.  “Savithru” becomes “Savitha”.  “Nara” is also mentioned as “Nru”.  Don’t we say, ‘Narasimha’, as ‘Nrushimha’?  Similar to ‘Pithru-Pitha’, ‘Savithru-Savitha’, is ‘Nru-Naa’.  That is, ‘Naa’, means, that we are Narar-humans.  “Na Naa” means, not a human”).

Even when other Puranas mention as Shivavathara, they say so, taking into account Shiva as the Supreme being.  In Surya Purana, where the Sun God is considered as the supreme spirit, if it is mentioned that only that Sun God took this incarnation, it also gives the same meaning.

There is a special similarity in citing our Acharya as the Sun god also.  There is a convention to refer ignorance (Agnana) as Tamas (darkness) and the person who gives the knowledge, dispelling the Tamas and bringing light, referred to as the Surya.  A super intelligent person is called “Gnana Bhaskara”.  What excites us in this matter is the fact that two of his direct disciples, great personages, have mentioned our Acharya as Surya.

“Thotakashtakam”7 is foremost among the slokas about our Acharya.  It is an Ashtaka (compilation of eight verses), written in praise of our Acharya, by his direct disciple, Thotaka.  In the presence of Acharya, standing before him, oozing with ecstatic joy, he says,

“Ahimaamshu-Rivaathra Vibhaasi!”

It means, “You are shining here like the Sun”. Himam means snow.  Himaamshu means the cool-rayed moon which increases the snow with its rays.  Adding ‘A’, Ahimaamshu, means the Sun which will dry out the snow.  It seems Acharya is like that Sun.

Another one of his four main disciples was Sureshvaracharya.  He has written an elaborate commentary on Acharya’s exposition on Brihadaranyakopanishad.  In that, it is mentioned that Acharya, the Sun God of Gnana, is dispelling the darkness of ignorance in the world, through his disciples, the rays, right from the eastern mountain to the mouth of the mountain where it sets8.

Thus, apart from texts on Shankara Vijaya, it is quoted in Rig Veda, Sri Rudram, Shiva Rahasya, Markandeya Samhita, Vishnu Dharmotharam, Vayu Purana, Koorma Purana, Linga Purana, Bhavishyothara Purana, Soura Purana, etc., that Shri Shankara Bhagawath Padal was not a mere mortal, but an incarnate.

_______________________________________________________________________________________
6Having 100 ‘Kandas’.  Each Kanda contains, sub-sections called, ‘Parispandha’.  Shankara Charitham is covered in the 72nd Kanda, 7-8 Parispandas

7Story behind Thodakashtaka, will be elaborated later

8Ashylath-Udayath-thatha (a)sthagiritho Bhasvath-Yashorashmibi:
Vyaptham Vishwam-Anandhakaram-Abhavath-yasya sma Sishyairitham.

____________________________________________________________________________________________________________

Audio



Categories: Deivathin Kural

Tags: ,

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading