Periyava Golden Quotes-952


ஆசார்யாள் சொல்வது என்னவென்றால், ஏகாதசி மாதிரி பக்ஷத்துக்கு ஒருநாள் சுத்தப் பட்டினி போடுவதையல்ல. “இனிமேலே சாப்பிடுவதேயில்லை” என்று உண்ணாவிரதம் இருந்து ஸாதனை பண்ணுவதைத் தான் சொல்கிறார். அந்த மாதிரி ஒரே தீவிரமாகப் போகிறதில் ஒன்றும் பிரயோஜனமில்லை. அவ்வப்போது ஒருவேளை, அல்லது ஒரே ஒரு நாள் பட்டினி போடுவது என்பது ‘நேச்ச’ருக்கே அநுகூலமாக இருப்பது. ஒரேயடியாக ‘சாகிற மட்டும் உண்ணாவிரதம்’ என்றால் அது ‘நேச்ச’ரை எதிர்த்துக் கொண்டு போவதாகும். அப்போது ‘நேச்ச’ரும் பழி வாங்கும். உடம்பைச் சித்ரவதை பண்ணும். அந்த வதையை நினைத்துக் கொண்டு அதைச் சமாளிக்க யத்தனிப்பதிலேயேதான் மனஸ் போகுமே தவிர, ஸாதனா லக்ஷ்யத்தில் ஈடுபட்டு நிற்காது. இம்மாதிரி தன்னைத்தானே க்ரூரமாக வ்ருத்திக் கொள்கிற வழிகளை ஆசார்யாள் ஒப்புக் கொள்ளாததால்தான் இப்படிச் சொல்கிறார்.-ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்

What Aacharyal is referring to is not observing fast once in a fortnight like Ekadasi, but about performing feats of fasting forever.  There is no use in doing such extreme things. To go without food, once in a day every fifteen days, is beneficial to the ‘nature’ itself.  Extreme things like ‘fasting unto death’ is going against ‘nature’.  In such situations, nature will also extract its revenge.  It will torment the body.  Mind will be engaged only in thinking about the pain being felt and how to overcome that and not on the objective of spiritual meditation.  Since Acharyal does not approve of such self-inflicting crude methods, he is saying like this. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal

Loading

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading