Periyava Golden Quotes-943


ஆஹாரங்களில் பல வகைகள் உடம்புக்குப் புஷ்டி தந்தாலும் மனஸைக் கெடுப்பவையாயிருக்கின்றன. ஸத்வ பதார்த்தமே சாப்பிட்டு வந்தாலுங்கூட உடம்புக்குள்ளே கெட்டியான சாப்பாடு ஒன்று போய் விழுந்தால் அது மனசை லேசாக்கி மேலே கிளம்ப விடாமல் கனமாகக் கீழே இழுத்துக் கொண்டுதானிருக்கும். இதனால்தான் நடு நடுவே சுத்தப் பட்டினி விதித்திருக்கிறது. பட்டினி கிடக்கிறபோது மனசுக்குப் பரமார்த்திகமாகவும், பகவத் விஷயமாகவும் போய்த் தோய்ந்து நிற்கிற தன்மை உண்டாகிறது. இதனால்தான் பகவத் ஸ்மரணம் விசேஷமாக இருக்க வேண்டிய தினங்களில் பூர்ண உபவாஸமோ, ஒருபொழுதோ வைத்திருக்கிறது. – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்

Many types of food, although providing strength to the body, are also detrimental to the mind.  Even if only Sathva food (pure/natural/moderate) is eaten, when it enters the body as solid food, it becomes heavy and pulls down the mind, preventing it from becoming light and rising up.  That is why, observing complete fast once a while, is prescribed. While observing a fast, the mind develops the tendency to get soaked in divine issues, related to Bhagawan. That is why it has been prescribed to observe fast either completely or at least one time, on the days when the mind is required to be specially thinking about Bhagawan. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal

Loading

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading