Many Jaya Jaya Sankara to Shri. S. Ravisankar for compiling and sharing this wonderful sthuthi on Sri Periyava. Rama Rama
நடமாடும் தெய்வம், குருவின் திருவடியே சரணம்
நடனமாடும் சபாபதி தில்லை நடராஜா, நீயே இவ்வுலகில் வந்துதித்தாய் ,
நடமாடும் தெய்வமாய், எல்லை இல்லா ரட்ஷகனாய் இந்த அவணியிலே;
தென்முக கடவுளாய் பேச்சின்றி, நமக்கு ஞானத்தைப் போதிக்கும்
ஆதி குரு தெய்வமே,
இன்முகம் காட்டி பேசியே அல்லும் பகலும் , எம்மை வழிநடத்த
இன்முகம் காட்டி பேசியே அல்லும் பகலும் , எம்மை வழிநடத்த
வந்தாயோ ஞான குருவே;
கர்ப்ப கிரஹத்தில், காரிருளில் அகல் விளக்கின் சுடரொளியில் காணும்
பரம் பொருளே, ஞான நாதா,
கர்ப்ப வாசம் செய்து, பேரொளியில் அவதாரமாய் இங்கு வந்துதித்து பேணும் எங்கள் திரு உருவே, சுவாமிநாதா;
ஊரெல்லாம் சுற்றி ஆடி வந்தார் உற்சவ மூர்த்தி, முடியாதோரும் கண்டு பக்தி செலுத்தவே,
பாரெல்லாம், நீ ஓடி ஊர் ஊராய் பாதம் சிவக்க,நடந்து கருணை மழை பொழிந்தாயே;
பாரெல்லாம், நீ ஓடி ஊர் ஊராய் பாதம் சிவக்க,நடந்து கருணை மழை பொழிந்தாயே;
என் இன்னல்களை உன் பாதங்களில் இறக்கி வைத்தேன், நீயோ கருணை கூர்ந்த தாயாய் ,
உன் தோளில் இதையும் ஏற்றி, வருண கால மின்னலாய் தீர்த்து வைத்தாய் பரந்தாமா:
ஓலையும் இல்லா, எழுதாக் கிளவி ஆதி வேதமும்,சாத்திரங்களும் நம் உலகமெலாம் ஆல மரமாய் படர்ந்திட,
காலையும் மாலையும் ஆணி வேரில் அமுதத்தை ஊற்றி பாடு பட்டு காலமெலாம் வளர்த்தாயே எங்கள் பார் புகழும் தவ சீலனே;
அடர்ந்த மரத்தில் கூடு கட்டி ஆயிரமாயிர பறவைகள் வேதம் கற்று இன்று மனித குலம் வாழ உழைக்கவே,
தொடர்ந்து வழி வகுத்தாய் நீ , பல நூறு ஆண்டுகள் வேலையை ஒருநூறு ஆண்டிலே,எங்கள் சரணரே:
கண்டவன் விண்டதில்லை, விண்டவன் கண்டதில்லை என்று வாய் வழியே பகர்ந்தாலும் ,
கண்டேன் இங்கேயே கடவுளையென, கை கூப்பி, கண்கள் மூடி மெய் சிலிர்த்து பாமரரும் பகலுவரே:
நின் பூத உடலும் மறைந்ததுவே, கால் நூற்றாண்டும் கடந்ததுவே, காலங்கள் பல கடந்தாலும்;
உன் புகழ் “தெய்வத்தின் குரலாய்“, “பாருக்குள் தெய்வமாய் பார்க்குமிடமெல்லாம் ஒலிக்குதுவே
ஞான வழிகாட்ட, இன்றும் எம் கரம் பிடித்து மேலேற்றி , வாழ வைக்கும் ஒளி விளக்கே சரணம்,
மோன நிலையில் , நின் பொற்பாத திருவடியில் கிடந்தேன், சரணம், சரணமின்றி வேறொன்றுமறியேன் யான் பராபரமே
Categories: Krithis
குரு அருளே திரு அருள். என்ன பாக்கியம் செய்தேனோ – சத்குருனாதா – – – – – ஜெய ஜெய சங்கர – ஹர ஹர சங்கர. நமஸ்காரம், கிரிதர்.
Very beautifully penned.