சுத்த உபவாஸம் என்றால் முழுப் பட்டினி என்று உங்களுக்குத் தெரிந்திருக்கும். ‘உபவாஸம்’ என்றால் ‘கூட வஸிப்பது’. பகவனோடுகூட, அவனுக்குப் பக்கத்தில் ஒட்டிக் கொண்டு வஸிப்பதுதான் உபவாஸம். அன்றைக்கு வயிற்றில் ஒன்றையும் தள்ளாவிட்டால்தான் அப்படி அவனோடுகூட, கிட்டக்க வஸிக்க முடியும். மனஸ் அவன் கிட்டக்கவே கிடக்க வேண்டுமானால் அதற்கு முதலில் வயிறு வெறுமனே கிடக்கணும். சாப்பிட்டால் வயிற்றிலே ‘கடாபுடா’. வேலை செய்ய முடிவதில்லை. மனஸையும் எதிலேயும் நிறுத்த முடிவதில்லை. வயிறு அடைசலில்லாமலிருந்தால்தான் நன்றாகப் பிராணாயாமம் பண்ணி, மனஸை சுத்தி செய்து கொண்டு ஒருமுகமாக நிறுத்த முடியும். பெரிசாக மூச்சடக்கிக் கும்பகம் பண்ணவேண்டுமென்றில்லாவிட்டாலும், தடைப்படாமல் தீர்க்கமாக ச்வாஸம் விடும்படியிருந்தால்தான் மனஸ் தியானத்தில் நிற்கும். வயிற்றில் கனம் இருந்தால் இப்படி ஃப்ரீயாக ச்வாஸிக்க முடியவில்லை. இதற்காகத்தான் உடம்பை நெற்றுப்போல ஆக்கிக் கொண்டு அதனால் ச்வாஸத்தை ஃப்ரீயாகவும் மனஸை லைட்டாகவும் பண்ணிக் கொண்டு நன்றாக ஈஸ்வர தியானத்தில் ஈடுபடும் பொருட்டு எப்போதுமே ஆஹாரத்தை லகுவாக வைத்துக் கொள்ள வேண்டுமென்றும், பக்ஷத்துக்கு ஒருநாள் சுத்தோபவாஸம் அநுஷ்டிக்க வேண்டுமென்றும் சாஸ்திரம் விதிக்கிறது. – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்
You may know that ‘Shuddha Upavas’ means complete fasting. ‘Upavasam’ means, to ‘live with’ – with Bhagawan. ‘Upavasam’ means, to live near, attaching ourselves to Him. It would be possible to be with Him, close to Him on that day, only if we do not push anything into our stomach. If the mind has to be close to Him, firstly, stomach should be empty. When we eat, there is turbulence (activity) in the stomach. One is not able do any work nor able to fix the mind on anything. Only if there is no clogging in the stomach, can Pranayama be done well, can one purify the mind and make it concentrate on the divine. Although it is not necessary to control the breath for a long time, the mind will stay fixed and meditate only if there is long, deep breathing. When there is heaviness in the stomach, one cannot breathe freely. Only for this reason it has been prescribed in the sastras that the food consumed should be always light. Fasting should be observed once every (paksha) fortnight so that the body is maintained like a matured dried seed, breathing is free and the mind light, so that one can focus on Eswara. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal
Categories: Deivathin Kural, Golden Quotes
Leave a Reply