Jaya Jaya Sankara Hara Hara Sankara – Sri Periyava continues to pour evidences from Vedas (Sri Rudram) Sri Bhagawath Padhal is none other than Lord Parameswara…
Many Jaya Jaya Sankara to our sathsang volunteers, Shri ST Ravi kumar for the great translation and Smt. Sowmya Murali for another sweet drawing that depicts the entire universe as parameswara swaroopam & audio. Rama Rama
ஈச்வராவதார ப்ரமாணங்கள்: வேத-இதிஹாச-புராணங்களில்
யஜுர்வேத ரெஃபரன்ஸுக்கு வருகிறேன்.
நாலு வேதங்கள் என்று சொன்னாலும் நடைமுறையில் ஸகல கர்மாநுஷ்டானங்களுக்கும் ரிக்-யஜுஸ்-ஸாமம் என்றமூன்றுதான் முக்யமாக இருக்கின்றன. 40 ஸம்ஸ்காரங்களில் வரும் யக்ஞங்களில் உபயோகப்படும் வேதங்கள் இந்த மூன்றே. அதனால் நாலு என்று சொல்லாமல் மூன்று என்று பொருள் கொடுப்பதான ‘த்ரயீ’ என்றே வேதங்களைக் குறிப்பிடும் வழக்கம் இருக்கிறது. மேலே பார்த்த (பாஸ்கரராயரின்) ச்லோகத்தில்கூட “வேத – த்ரய வியாக்யாந” என்றே வருகிறதல்லவா? இப்படி வேதங்கள் மூன்று என்கிறபோது, 1, 2, 3, என்பதில் 2 மத்தியில் உள்ளதுபோல், ரிக், யஜுஸ், ஸாமம் என்பதில் யஜுர் வேதம்தான்மத்தியில் இருக்கிறது. மத்தியிலுள்ள விஷயத்திற்கு அதிக மதிப்பு. கௌரவம். ‘நடு நாயகம்’ என்று சொல்வது அதனால்தான். கோயிலில் நடு மத்தியில்தான் மூலமூர்த்தியின் கர்ப்ப க்ருஹம் இருக்கும். இப்படி யஜூர்வேதம் த்ரயீயின் நடுநாயகமாக இருக்கிறது.
அந்த யஜுர் வேதத்தை எடுத்துக்கொண்டால் அதற்கு எது மத்தி? யஜுர் வேதம் ஏழு காண்டங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. 1, 2, 3, 4, 5, 6, 7 என்பதில் 4 தானே மத்தியில் இருக்கிறது? அதனால் நான்காம் காண்டம்தான் (யஜுர் வேதத்தின்) மத்ய ஸ்தானம். அந்த நான்காம் காண்டத்தின் நடுவிலிருப்பது அதிலுள்ள ப்ரபாடகங்களில் (‘ஸெக்ஷன்’களில்) ஐந்தாவதாக உள்ள ‘ஸ்ரீ ருத்ரம்’. அதை ‘ஸ்ரீருத்ர ப்ரச்னம்’ என்றும் ‘சத ருத்ரீயம்’ என்றும் சொல்வார்கள். பரமசிவனின் ஸ்துதியாக இருப்பது அது.
ஸரி, அந்த ருத்ரத்தில் எது நடு மையத்திலிருக்கிறதென்று பார்த்தால், அதுதானே ஸகல வேதங்களுக்குமே மத்ய ஸ்தானமாக இருக்கும்? வேதங்கள் என்கிற பிரம்மாண்டமான கோவிலுக்கு நடுநாயமாக உள்ள மஹாலிங்க மூலமூர்த்தி அந்த வாக்கியம்தானே? அது என்ன? வேதத்தின் உயிர் மையமாக இருக்கப்பட்ட அது என்ன என்றால் —
அதுதான், ஸ்ரீருத்ரத்தின் எட்டாவது அநுவாகத்தில் (‘ஸப்-ஸெக்ஷ’னில்) நடுவிலே வரும் சிவா பஞ்சாக்ஷர மஹா மந்த்ரம்.
அந்த மஹா மந்த்ரத்துக்கு அழைத்துக்கொண்டு போவதாக அதற்கு முந்தி வருகிற இரண்டு பெயர்கள்தான் ‘சம்பு’ என்பதும், ‘சங்கர’ என்பதும்! 3
முதலில் ‘சம்பு’ என்று சொல்லி, அப்புறம் ‘சங்கர’ என்று சொல்லி, அதற்கப்புறம் ‘சிவ’ ‘நாமாவை நமஸ்கார பூர்வமாகப் பஞ்சாக்ஷரமாக்கிச் சொல்லியிருக்கிறது. இப்படி சம்பு, சங்கர, பஞ்சாக்ஷரம் என்ற ஆர்டரில் சொல்லியிருப்பது நாம் பார்த்துக் கொண்டிருக்கிற விஷயத்திற்கு ரொம்பவும் ஆதரவாக இருக்கிறது. எப்படியென்றால், பஞ்சாக்ஷரத்தை ஆசார்யமுகமாக உபதேசம் வாங்கிக்கொண்டுதான் சொல்ல வேண்டும். ‘ஆசார்யாள்’ என்றாலே இவர்தான் என்னும்படி இருந்த சுகதாசார்யாள் நம்முடைய சங்கர பகவத்பாதர்கள்தான். இவர் இப்படி அவதாரமாக வருவதற்கு முன்னாள் எப்படியிருந்தார்? சம்புவாக இருந்தாரென்று பார்த்தோம். சம்புவாகப் பேசாமலிருந்த ரூபம், அப்புறம் அவர் சங்கர குருவாக எடுத்துக்கொண்ட பேசும் ரூபம், அதற்கப்புறம் குரு முகமாகப் பெறவேண்டிய பஞ்சாக்ஷர ரூபம் என்று வரிசை க்ரமமாகக் காட்டிக் கொடுப்பதுபோலவே “சம்பவே…, சங்கராய….,” அதற்கப்புறம் பஞ்சாக்ஷரம் என்று ஸ்ரீருத்ரம் சொல்லிக்கொண்டு போகிறது. சம்புவின் அவதாரம்தான் சங்கரர் என்பதற்கு இங்கேயும் ச்ருதி ப்ராமாண்யம் கிடைக்கிறது.
இது எனக்கு தோன்றியது. ஸ்ரீருத்ரத்துக்கு பாஷ்யம் செய்தவர்களில் ஒருவருக்கு4 இந்த ருத்ர ஸுக்தத்திலேயே இன்னோரிடத்தில் ஆசார்யாளை பரம சிவாதாராமாகச் சொல்லியிருப்பதாகத் தோன்றி அதற்குப் புஷ்டியான காரணம் காட்டி உறுதிபடுத்தியிருக்கிறார். அது என்ன வென்றால்……..
லோகத்திலுள்ள ஸகல தினுஸான ஜனங்கள், ப்ராணிகள், சேதன அசேதன வஸ்துக்கள் எல்லாமே ருத்ர ஸ்வரூபம்தான் என்று விவரிப்பதாக இந்த ஸூக்தத்தின் இரண்டாம் அநுவாகத்திலிருந்து எட்டு அநுவாகங்களில் மந்த்ரங்கள் இருக்கின்றன. இதில் ஸரியாக முன்னூறு மந்திரங்கள் இருப்பதால் இதையே “ருத்ர த்ரிசதி” என்று நாமாவளியாக்கி முன்னூறு அர்ச்சனை பண்ணுகிறோம். தச்சர்கள், குயவர்கள், கம்மாளர்கள், வேடர்கள், குரவர்கள், திருடர்கள் எல்லாரும் கூட ருத்ரனாகிய பரமசிவன்தான் என்று அதில் வருகிறது. திருடர்களின் தலைவனான பக்காத் திருடன்கூட அவன்தான் என்று வருகிறது! “தச்கராணாம் பத்தி” என்று இப்படிஅதில் வருவதைத்தான் ஞானசம்பந்தரும் “உள்ளம் கவர் கள்வன்” என்று சொன்னது. வ்ருக்ஷமா, புல்லா, வெள்ளமா, அலையா, மழையா, காற்றா, – அதெல்லாம்கூட சிவா ஸ்வரூபம்தான்; ஒரு மாடாகட்டும், நாய்தானாகட்டும், அல்லது அந்த நாய் மாம்ஸத்தைத் தின்னும் சண்டாளனேயாகட்டும்- இதுவெல்லாமும் அவன்தான் என்றிப்படி ஸகல சராசர (சராசர என்றால் ‘சர, அசர’. ‘சர’ என்பது அசையும் வஸ்துக்கள். ‘அசர’ என்பது அசையாத வஸ்துக்கள். அதாவது ஜீவ ப்ரபஞ்சம், ஜட ப்ரபஞ்சம் முழுதும் சேர்ந்தது ‘சராசரம்’. இப்படிப்பட்ட ஸகல சராசர) வஸ்துக்களிலும் ஏக பரமாத்மா ஸ்வரூபத்தைத் தெரிவிப்பது ஸ்ரீருத்ர ப்ரச்னம்.
இப்படி லோகத்திலுள்ள பல வஸ்துக்களாக’ இல்லாமல் பரமேஸ்வரனாக நாம் தெரிந்துகொண்டுள்ள ரூபத்தில் அவனோருத்தனுக்கு மட்டுமே இருக்கும் நாமாக்களும் நடுநடுவே வருகின்றன. இவற்றை ‘அஸாதாராண நாமா’க்கள் என்பார்கள். நாம் ஸாதாரணம் என்றால் ஆர்டினரி என்றும், அஸாதாராணம் என்றால் ரொம்ப விசேஷமாக, அபூர்வமாக இருப்பது என்றும் அர்த்தம் பண்ணிகொள்கிறோம். வாஸ்தவத்தில் ஸாதாரணம் என்றால் பொது: common; அஸாதாரணம் என்றால் தனிப்பட்டது: specific, பரமசிவனை லோக வஸ்துக்களாகச் சொல்லும்போது பெரும்பாலும் பஹுவசனத்திலும் (பன்மையிலும்) பரமசிவ மூர்த்திக்கே உரிய அஸாதாரணப் பெயரைச் சொல்லும்போதும் ஏக வசனத்திலும் (ஒருமையிலும்) இருக்கும். ‘உட்கார்ந்துகொண்டிருப்பவர்களாக, சயனித்துக் கொண்டிருப்பவர்களாக, தூங்குகிறவர்களாக, நிற்கிறவர்களாக, ஓடுகிறவர்களாக – இப்படியெல்லாம் உள்ளவனுக்கு நமஸ்காரம்’ என்று சொல்லுபோது பஹுவசனத்திலேயே இருக்கிறது. இப்படிக் கடகடவென்று நிறையச் சொல்லிக்கொண்டே போனபிறகு, சிவனுக்கே உரிய பெயர்களை, ‘பவனுக்கு, ருத்ரனுக்கு, சரவணுக்கு, பசுபதிக்கு, நீலகண்டனுக்கு, சிதிகண்டனுக்கு (அதாவது அந்த நீலமே விபூதியால் வெளுத்துக் காண்கிற கழுத்துக்காரனுக்கு) என்று ஏகவசனத்தில் கொடுத்துக்கொண்டு போயிருக்கிறது. சிதிகண்டனுக்கு என்று சொன்னதை அடுத்து ‘கபர்திக்கு’ ‘வ்யுப்தகேசனுக்கு’ என்று இரண்டு நாமாக்களைக் கூறி நமஸ்காரம் தெரிவித்துவிட்டு, ‘ஸஹஸ்ராக்ஷனுக்கு’ (அதாவது, எண்ணிமுடியாத நேத்ரங்கள் கொண்டவனுக்கு), ‘சததன்வனுக்கு’ (அதாவது, எண்ணி முடியாத ஆயுதங்களை உடையவனுக்கு), ‘கிரிசனுக்கு’ என்றெல்லாம் மேலே நமஸ்காரம் தெரிவித்துக்கொண்டு போகிறது. கிரிசன், கிரீசன் என்ற இரண்டுமே பரமேஸ்வரனுக்கே உரிய அஸாதாரண நாமாக்கள். கிரீசன் என்றால் கைலாஸபதி. கிரிசன் என்றால் கைலாஸ வாஸன். இப்படி பரமேஸ்வரனுக்கே உரிய அஸாதாரணமான நாமாக்களைச் சொல்லிக்கொண்டு போகும்போதே நடுவில் ‘கபர்தி’, ‘வ்யுப்தகேசன்’ என்ற இரண்டு பேர்களையும் சொல்லியிருப்பதால் அவையும் அவனொருத்தனுக்கு உரியவை என்றாகிறது.
ஸரி, கபர்தி என்றால் என்ன? ‘வ்யுப்தகேசன்’ என்றால் என்ன?
__________________________________________________
3 நம: சம்பவே ச மயோபவே ச நம: சங்கராய ச மயஸ்கராய ச நம: சிவா ச….. (ஸ்ரீருத்ரம், 8,1)
4 அபிநவ சங்கரர். (இவர் காஞ்சி ஸ்ரீமடத்தின் 38–வது பீடதிபதிகளான அபிநவ சங்கரர் அல்ல. இவர் அதே பெயர் கொண்ட வேறொருவர்.)
_______________________________________________________________________________________________________________________________
Evidences for Divine incarnate in Veda, Ithihasa, Puranas
Let me come to the reference in Yajur Veda.
Although we say 4 Vedas, only three, Rig-Yajur-Sama are important for discharging all the day-to-day duties. Only these three are used in the religious practices. These are the three Vedas which are used in the Yagnas that are covered in the 40 Samskaras. That is why there is a convention of referring to Vedas as “Thrayee”, meaning three, instead of saying four. Is it not mentioned as “Veda-Thraya Vyakyana” in the above verse also? Just like 2 being in the middle of 1,2,3, Yajur veda is in the middle of Rig-Yajur-Sama. The matter pertaining to the middle one, has more importance. That is why, it is said as “central core”. Sanctum will be located only in the middle of a temple. Yajur veda is also similarly the central core of the Thrayee.
When we take Yajur Veda, which is the centre for that? Yajur veda is divided into 7 chapters. Is 4 not the middle one out of 1,2,3,4,5,6 & 7? Therefore, the 4th chapter is in the middle place. The centre of that 4th chapter is “Sri Rudram”, the 5thsection. It is called as “Sri Rudra Prashnam” and also “Satha Rudhreeyam”. It is in praise of Paramashiva.
Ok, when we look for the one which is in the middle of that Rudram, would that not be the one in the mid point for all Vedas? Is not the sentence, the central core of main deity, Mahalinga in the huge temple of Vedas? What is that which happens to be the lifeline of the Vedas is–
It is the Shiva Panchakshara maha mantra, which is in the eighth sub section of Sri Rudra.
“Shambhu” and “Shankara” are the two names which precede and lead to that Maha mantra!3.
It has mentioned “Shambhu” first,” followed by Shankara”, and later the name of “Shiva” coined into Panchakshara, for paying respects. Mentioning in this order of Shambhu, Shankara, and Panchakshara is very supportive to the subject that we are discussing. Why because, Panchakshara can be chanted, only after receiving it through an Acharya. When we say, Acharya, it is only the Sugadhacharya, our Shankara Bhagawath Padal, who lived in such a way as to be referred to as ‘the Acharya’. How was He before He came as an incarnation? We saw that He was as Shambhu. Sri Rudram goes on saying “Shambhave…, Shankaraya..” and later Panchakshara, by indicating first the form of silence, then the form of Shankara, who was speaking and later the Panchakshara, which needs to be obtained through a Guru, in that order. Here also, we get evidence through Shrutis, that Shankarar was the incarnation of Shambhu.
This one had occurred to me. One of those4 who had rendered the commentary for Sri Rudram, had felt that there was another context in the Rudra Suktha itself, where it is mentioned that Acharya is the very incarnation of Lord Shiva, and affirmed it, citing strong reasons. That is…
There are mantras in this Suktha, contained in eight sections (Anuvakas), starting from the second Anuvaka, describing that all the varied forms of life in this world, people, animals, animate and inanimate things, etc., are all, only forms of Rudra. As this contains exactly 300 mantras, it is called as “Rudra Thrisathi” and taken as list of holy names and we do three hundred Archanas. It is mentioned therein that all, even carpenters, potters, goldsmiths, hunters, Kuravas, thieves etc., are Paramashiva, the Rudra. It is also stated that even the head of the thieves, the hard core one also, is Him! (Paramashiva). What is mentioned here as “Thaskaraanaam pathi” is the one referred to by Gnanasambhandar as “the person who steals the heart”. Whether it is a tree, grass, flood, waves, rains, wind, even they are only a form of Shiva. Rudra Prashnam says that it could be a cattle or a dog, or even a demon who may eat the dog’s meat, anything (moving things, motionless things, which is the living world and non-living world, the entire set), and everything is only the form of the only Supreme.
Names that we know of Parameswara, which belong to only Him and not as that of the many ‘things’ in this world, also come in between. These are referred as ‘Specific names’. We normally understand, ‘Saadhaarana’, as ordinary and ‘Asaadhaarana’, as very special, rare. But actually, ‘Saadhaarana’, means, common and ‘Asaadhaarana’ means, specific. When Paramashiva is referred to the things in the world, they are mostly referred to in plural and when referred to, in the specific names, exclusive to Paramashiva, they are in singular. When it talks about as those, ‘who are sitting, who are lying down, who are sleeping, who are standing, who are running- offered respect to the person who is as all these’, it is only in plural. After mentioning rapidly like this, it is referring in singular, while stating the exclusive names of Shiva, as ‘to Bhavan, to Rudra, to Saravanan, to Pasupathi, to Neelakanta, to Sithikanta (that is the one whose blue neck looks white due to application of sacred ash). Subsequent to saying Sithikanta, after mentioning the two names, ‘Kapardhi’ and ‘Vyupthakesa’ and offering reverence, goes on saying and offers respect, “to Sahasraksha’, (that is, the person who has countless number of eyes), ‘to Sathadhanvan (that is, to the person who has countless weapons), ‘to Girishan’. Girishan and Gireeshan, both are the exclusive names of Parameswara. Girishan means, Kailasapathy (owner of Kailash). Gireeshan means, who lives in Kailash. Since ‘Kapardhi’ and ‘Vyupthakesa’ have been mentioned in the middle while going about mentioning such exclusive names of Parameswara, it can be understood that they also belong to Him.
Ok. Kapardhi means what? Vyupthakesa means what?
3Nama: Sambhave Cha Mayobhave Cha Nama: Shankaraaya Cha Mayaskaraaya Cha Nama: Shiva Cha… (Sri Rudram, 8.1)
4Abhinava Shankara. (He is not the Abhinava Shankara, the 38th pontiff of Sri Kanchi Matam, but some other namesake)
_________________________________________________________________________________________________________________________________
Audio
Categories: Deivathin Kural
VANDHE GOU MADHRAM MAHAPERIYAVA SARANAM Sri Gokulakrishna gau shala wishes a very HAPPY and DELIGHTFUL DEEPAVALI to all.
In our Gau shala family, along with all the cows and calves there are around 45 dedicated workers and full time volunteers, 25 women and 20 men. We are PROVIDING FREE FOOD, 3 TIMES daily for those who stay in the gau shala and 2 times to those who stay outside.
In the merry moments of festival, we request all the devotees to Please consider the GAU SHALA WORKERS also as your own FAMILY MEMBERS. Please DONATE generously to gift them DRESSES, SWEETS and some SMALL AMOUNT for their FESTIVAL EXPENSES. We earnestly pray the Almighty and GOUMADHA to shower all the blessings to all for PEACE and HAPPINESS in this world.
SRI GOKULA KRISHNA GOUSHLA
DEVADHAVAKKAM VILLAGE
THIRUVALLAUR DISTRICT
9655993208/8940224744
Lalita Natarajan