Periyava Golden Quotes-920


‘குக்கர்’, ‘கிக்கர்’ கூட வேண்டாம். ஸுலபமாக, சீக்ரமாக அதில் நாலைந்து தினுஸைப் பண்ணிக் கொள்ள முடியலாம். ஆனால் நாக்கைக் கட்டுவதற்கு, ஸத்வ ஆஹாரத்தைத் தவிர மற்றவற்றுக்குப் போகாமலிருப்பதற்கு அது பிரயோஜனமில்லை. குக்கர் வந்தால் அப்புறம் அஞ்சறைப் பெட்டி, ரொம்பப் புளி, ரொம்பக் காரம் எல்லாம் கூடவே வரும். இது சித்தத்துக்குச் செய்கிற கெடுதலோடு உடம்புக்கும் கெடுதல் வந்து, பரிஹாரமாக மருந்து, அந்த மருந்திலே அநாசாரம், இந்த அநாசாரத்துக்குப் பரிஹாரம் என்று போய்க் கொண்டேயிருக்கும். செலவையும் சொல்ல வேண்டும். நிறைய வியஞ்ஜனம் என்றால் நிறையச் செலவாவதோடு, அப்புறம் டாக்டருக்காகவும் மருந்துக்காகவும் ஆகிற செலவு வேறே.

அதனால் ஒரு ஸாமான், இரண்டு ஸாமானை வைத்துக் கொண்டு, ஸாத்விகமாக, பெரியவர்கள் சொல்கிற மாதிரி ‘மதுர’மாக ‘ஸ்நிக்த’மாக லேசான ஆஹாரத்தைத் தானே தயார் பண்ணிச் சாப்பிட வேண்டுமென்பதை ஜன்ம விரதமாக எடுத்துக் கொள்ள வேண்டும். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்

There is no need for ‘cooker’ or the likes.  It may be possible to prepare different varieties of dishes easily and quickly with such appliances.  But these appliances will be of no use if one decides to control the tongue and consume only Satva food.  If a ‘cooker’ is brought along, a spice container, tamarind, chillies, etc. will follow. This is not only harmful for the well being of mind but also for the body. As a remedy one will have to consume medicines, which may have ill effects requiring further remedy; the cycle will go on. Expenses also need to be considered. More the varieties of food items, higher the expenses. In addition to these is the cost of consultation with the doctor and cost of medicines.

Therefore, as advised by our ancestors, one needs to take it as one’s life’s vow to consume ‘sweet’, ‘mildly greased’, light meals using just one or two ingredients and prepared by self. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal

Loading

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading