Periyava Golden Quotes-917

ஆண்களில் முதியவர்களுக்கும் சமையல் தெரிந்திருக்க வேண்டுமென்பதற்கு சாஸ்திரமே ஆதரவாயிருக்கிறது. சாஸ்திர வாக்கியம் ஒன்று இருக்கிறது: “பஞ்சாசத் வத்ஸராத் ஊர்த்வம் ந குர்யாத் பாணி பீடநம்“. ‘பாணி பீடநம்’ என்றால் பாணிக்ரஹணம்; அதாவது கல்யாணம். ‘பஞ்சாசத்’ என்றால் ஐம்பது. ஐம்பது வயஸுக்கு மேலே கல்யாணம் பண்ணிக் கொள்ளக்கூடாது என்பது இந்த வாக்கியத்தின் அர்த்தம். முதல் பெண்டாட்டி தவறி விட்டால் ஐம்பது வயஸுக்கு அப்புறம்கூட இரண்டாம் கல்யாணம் செய்து கொள்கிறவர்கள், சமையலுக்கு ஆளில்லை என்ற காரணத்துக்காகவே அப்படிச் செய்வதுண்டு. ஸ்வயம்பாகம் தெரிந்து விட்டால் வானப்ரஸ்தத்துக்குத் போக வேண்டிய தசையில், சமையலை ஒரு காரணமாகச் சொல்லிக் கொண்டு, மறுபடி தாம்பத்தியத்துக்குத் திரும்புகிற ஆபாஸம் நடக்காமலிருக்கும். சாஸ்திரத்தை மீறின தோஷம் ஸம்பவிக்காமலிருக்கும். இப்படியேதான் பிரம்மச்சாரியாகவே இருக்க வேண்டுமென்று நினைக்கிறவர்களிலும் சிலபேர் ஓடி ஆடி அலைகிற மத்யம வயஸுவரை வீட்டில் அம்மா சமைத்துப் போட்டோ, ஹோட்டலிலோ சாப்பிட்டுக் கொண்டிருந்து விட்டு ஓய்ந்து உட்காருகிறபோது, ‘அம்மா போயிட்டாளே, இப்போ முன்மாதிரி ஹோட்டல் சாப்பாடு ஒத்துக்கமாட்டேனென்கிறதே’ என்று சமையலுக்காகவே (‘ஸஹ தர்ம’ இல்லை; தர்மத்துக்காக இல்லை; வயிற்றுக்காக, நாக்குக்காக) பிரம்மசர்யத்தை விட்டு விட்டுப் பெண் தேடிப் போகிற அஸங்கியமும் ஸ்வயம்பாக அநுஷ்டானம் இருந்துவிட்டால் ஏற்படாது. – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்

Sastras support the view that even elderly men should know cooking. There is a statement in our Sastras which says “Panchaashat vatsaraat oordhvam na kuryaat paani peetanam”[पञ्चाशत् वत्सरात् ऊर्ध्वम् न कुर्यात् पाणि पीठनम् ]. “paani peetanam” means paanigrahanam i.e. marriage. “Panchaashat” means fifty. This sentence means one should not get married after fifty years of age. If the first wife is no more, then, at times, even after fifty years the man gets married again just because he doesn’t know cooking. If he knew self-cooking, then, at an age suitable for vanaprastha, he need not get into the ugly state of marrying again citing the reason as cooking. He need not commit the offence of going against what is said in the sastras. Similarly persons who want to remain celibate (brahmachari) remain so till their middle age – till their mother is there to cook or till they can afford hotel food (monetarily or health wise) – and then resort to marriage at an older age just because they do not know cooking and hotel food on daily basis doesn’t suit their health. They leave the brahmacharya ashrama and look for a wife just for the sake of the tongue and not as a partner in dharma. This ugliness too will not happen if everyone learns to cook. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal



Categories: Deivathin Kural, Golden Quotes

Tags:

Leave a Reply

%d bloggers like this: