பிரம்மசாரிக்குப் பிக்ஷை வைத்ததற்குக் காரணம் வேறு. விநயம் ஏற்பட வேண்டும், அப்போதுதான் வித்யை பலன் தரும் என்பதற்காகத்தான் வீடு வீடாகப் போய் அவனை பிச்சைக் கேட்கும்படியாக விதித்திருப்பது. அப்புறம் இவனுக்குச் சமைத்துப் போடுவதற்காக குரு பத்தினியைச் சிரமப்படுத்த வேண்டாமென்றுதான், சமைத்த அன்னமாகவே பிக்ஷை வாங்கி வரலாம் என்று அநுமதித்திருப்பதும். அக்னி ஸம்பந்தமே கூடாது என்று ஸந்நியாஸிக்குக் கட்டுப்பாடு இருப்பது போல் பிரம்மசாரிக்குக் கிடையாது. அவன் தினமும் இரண்டு வேளையும் பண்ண வேண்டிய ஸமிதாதானம் என்பது அக்னி வளர்த்து அதில் ஸமித்தைப் போடுகிற சடங்குதான். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்
The reason for prescribing bhiksha for a brahmachari is entirely different. His education will be effective only if he develops humility. So he has been ordained to go from house to house and ask for food. Further, the wife (Guru Pathni) of his Guru need not go through the trouble of cooking food for him. Therefore he has been permitted to obtain cooked food. A sanyasi should have no connection with fire; this is not the case with a brahmachari. He has to perform Samitadanam twice a day – i.e. offer samith into the agni. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal
Categories: Deivathin Kural, Golden Quotes
Leave a Reply