Periyava Golden Quotes-899


யதி [ஸந்நியாஸி]யைப் போலவே பிரம்மசாரியும் பிக்ஷை வாங்கித்தான் சாப்பிட்டாக வேண்டுமென்று ஒரே தீர்மானமாக வைத்துவிட்டதாக அர்த்தமில்லை. இவர்கள் இரண்டு பேருக்கும் பிக்ஷை எடுக்க வேண்டும் என்று வைத்ததற்குக் காரணம் வேறு வேறாகும். யதி எப்போதும் ஆத்ம விசாரம் பண்ண வேண்டியவனாதலாலும், உடைமையே அவனுக்குக் கூடாதாகையாலும் சமையற்கட்டைக் கட்டிக் கொண்டு அழ விடமால் அவனுக்குப் பிக்ஷா நியமம் வைத்தார்கள். குறிப்பாக எவரோ ஒருத்தர் இரண்டு பேர் அவனுக்கு ஆஹாரம் கொடுப்பது என்று வைத்துக் கொண்டால் அவர்களுக்கு இவன் obliged-ஆகிவிடுவான் [கட்டுப்பட்டு விடுவான்] என்பதால் அப்படிக் கூடாது என்று ஏதோ நாலு ஐந்து வீடாக இன்றைக்குப் போன இடத்துக்கு நாளைக்குப் போகாமல், ஸமூஹம் பூராவிலிருந்தும் பிக்ஷை வாங்கிச் சாப்பிட வேண்டுமென்று வைத்தார்கள். தனியாக எவருக்கும் இவனைப் பராமரிக்கிற பொறுப்புப் பளுவைத் தராமல், ஸமூஹம் முழுவதற்கும் அதைப் பகிர்ந்து தரும் உத்தேசமும் இதில் அடங்கியிருக்கிறது. அதோடு கூட இவனுக்கு அக்னி ஸம்பந்தமேயிருக்க கூடாது. [ஸந்நியாஸ] ஆச்ரமம் வாங்கிக் கொண்டவுடனேயே அக்னி ஹோத்ரம், ஒளபாஸனம் முதலான எல்லா அக்னி கார்யமும் நின்று விடுகின்றன. சமையல் செய்வதென்றால் அக்னியில்லாமல் முடியுமா? இவன் அடுப்பு மூட்டிச் சமைக்கும்போது ஏதோ பூச்சிப் பொட்டு விழுந்து செத்துப் போனால், இவனுடைய ஆச்ரமத்தின் பரமதர்மமான அஹிம்ஸைக்கு ஹானியாய் விடும். இந்தக் காரணங்களை உத்தேசித்தே இவன் சமைத்த ஆஹாரத்தை பிக்ஷை வாங்க வேண்டும் என்று வைத்திருப்பது. – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்

This does not mean that a brahmachari too – like a sanyasi – must eat food got from bhiksha alone. The reasons for prescribing bhiksha for a brahmachari and for a sanyasi are very different. Since a sanyasi is always on the path of self introspection and considering the fact that he should not own anything, he is ordained to take bhiksha. If just one or two people were to give him food regularly, he would become indebted to them. So he has to go to a different house each day to obtain bhiksha. There is another intention too. The burden of taking care of him is that of the whole society and not just that of an individual. Further, he should have no connection with fire. Once he accepts Sanyasa Ashrama, he stops all fire related rituals like Agnihotram, Oupasanam, etc. Can food be cooked without fire? If he were to light a fire for the sake of cooking and even if a small insect were to fall into it and die, it would be a loss of the supreme dharma of Ahimsa that is required to be followed by him. These are the reasons why a Sanyasi is ordained to obtain cooked food as bhiksha. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal



Categories: Deivathin Kural, Golden Quotes

Tags:

Leave a Reply

%d