ப்ரம்மசாரிகள் பிக்ஷாசர்யம் பண்ண வேண்டும் (பிக்ஷை எடுத்துச் சாப்பிட வேண்டும்) என்று நான் சொல்லி வருவதற்கு இது [மாணவன் ஸ்வயம்பாகம் செய்து சாப்பிட வேண்டுமென்பது] விரோதமாயிருக்கிறதே என்று தோன்றலாம். வித்யாப்யாஸ காலம் பூராவும் ஒரு பையன் பிக்ஷை எடுத்துச் சாப்பிடுவான், சாப்பிட வேண்டும் என்று நான் இந்தக் கால நிலைமையில் எதிர் பார்க்கவுமில்லை, நிர்பந்திக்கவுமில்லை. அப்படி ஒருத்தன் பண்ணினால் அது எனக்கு ரொம்ப ஸந்தோஷந்தான். ஆனால் அபூர்வமாய் எவனோதான் அப்படிப் பண்ண முடியும். பொதுவில் எல்லா மாணவர்களும் ஒரு வருஷமாவது பிக்ஷாசர்யத்துடன் குருகுல வாஸம் பண்ண வேண்டுமென்பதுதான் நான் சொல்வது. மீதி வருஷங்களில் அவனும் ஸ்வயம்பாகம் பண்ணிக் கொள்வது என்று வைத்துக் கொள்ள வேண்டும். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்
Brahmacharis should ask for food as Bhiksha and eat it. This may seem to contradict with my view about them doing Swayampaakam (self-cooking). During the Vidhyabyasam (learning period) the brahmachari should ask for Bhiksha and eat the cooked food offered to him by the Gruhastas. In these days I do not expect, nor will compel students to ask for bhiksha and eat, though I will be very happy if someone were to do that. One odd student may do it; it is very rare. What I am saying is that every student should follow Bhikshacharya in the Gurukula at least for one year. During the remaining years he can do Swayampaakam (self-cooking). –Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal
Categories: Deivathin Kural, Golden Quotes
Leave a Reply