Periyava Golden Quotes-895

நம்மூரில் பாடசாலை வைக்கிறோம் என்றாலே உக்ராணம், வெங்கலப் பானை, வாணலி, அண்டா, குண்டான், அரிசி மூட்டை, புளிப்பானை, அப்புறம் அஞ்சறைப் பெட்டி இத்யாதி வேண்டியிருக்கின்றன. நிர்வாஹம் பண்ண மணியக்காரன், காவலுக்கு ஆள் இதெல்லாம் வேறே. எத்தனைதான் மூலதனமிருந்தாலும் இப்போதிருக்கிற இன்ஃபளேஷனிலும் விலைவாசி நாளுக்கு நாள் ஏறிக்கொண்டிருப்பதிலும், சாப்பாட்டுக் செலவுக்கே கட்ட மாட்டேனென்று ஆகிறது. அப்புறம்தானே வாத்தியார் சம்பளம், பசங்களுக்கு ‘ஸ்டைபென்ட் இதெல்லாம்? இந்தக் காரணத்தால்தான் பாடசாலைகளையே மூட வேண்டியிருக்கிறது.

அவர்கள் சொன்னதிலிருந்துதான், ‘ஓஹோ! தக்ஷிணத்தில் வேதவித்யை க்ஷீணித்துப் போகிறதற்கே நம்முடைய அஞ்சறைபெட்டிச் சமையல்தான் காரணமா? நாக்கு ருசிக்காகவா நம் மதத்தின் வேரான வேதத்தை அறுத்திருக்கிறோம்?’ என்று தெரிந்தது. – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்

If we have to set up a Patasala in South, we need a store room, brass vessels, kadai, rice bags, tamarind, and other spices. At least one person is required to administer these and yet another for security. Even if the resources are there, in these days of inflation, with prices of commodities increasing everyday, the available resources do not seem to be enough even for food. Only after this requirement is met, can one think about the salary for the teacher or stipend for the student. This is the reason for the closure of the Patasalas.

Only after I heard them did I realize that Vedic studies have declined here only because of the burden of our elaborate cooking. I wondered    ‘Have we cut off the Vedas – the roots of our religion – just for the sake of our taste buds?’ – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal



Categories: Deivathin Kural, Golden Quotes

Tags:

1 reply

  1. “……….. ‘ஓஹோ! தக்ஷிணத்தில் வேதவித்யை க்ஷீணித்துப் போகிறதற்கே நம்முடைய அஞ்சறைபெட்டிச் சமையல்தான் காரணமா? நாக்கு ருசிக்காகவா நம் மதத்தின் வேரான வேதத்தை அறுத்திருக்கிறோம்?………”

    பெரியவா தவிர வேறும் யாரும் இப்படி வித்யாஸமாகவும், ஆழ்ந்தும் யோசிக்கமாட்டார்கள்.

Leave a Reply to Balaji Canchi SistlaCancel reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading