Jaya Jaya Sankara Hara Hara Sankara – In this chapter, Sri Periyava reminds us all about the end goal of our life which is being idle.
Many Jaya Jaya Sankara to our sathsang volunteers, Shri ST Ravi kumar for the great translation and Smt. Sowmya Murali for the elegant sketch & audio. Rama Rama
நடைமுறை: காரியம் செய்வது; லக்ஷ்யம்: சும்மாயிருப்பது
ஆக, ஸ்வாமி — தக்ஷிணாமூர்த்தி — என்ன நினைத்தாரென்றால், ‘ஜனங்களால் ஒன்றும் பண்ணாமலிருக்க முடியவில்லையே; அப்படியிருக்க அவர்களுக்குத் தெரியவில்லையே! அதனால் — அதற்காக மட்டுமே — அவர்களுக்கு நிறைய வைதிக சாஸ்த்ரோக்தமான கார்யங்களை நாம் கொடுக்க வேண்டும் என்றாலும், ஒன்றும் பண்ணாமல் சும்மா இருக்கும் ஸ்திதியைத்தான் லக்ஷ்யமாக எப்போது பார்த்தாலும் ஞாபகப்படுத்திக் கொண்டிருக்கவேண்டும்’ என்று உத்தேசம் பண்ணினார்.
நடைமுறை லோகம் கார்யத்தினால்தான் நடக்கிறது என்பதைத்தான் அதற்கு (கார்யம் செய்வதற்கு) ஜஸ்டிஃபிகேஷனாகச் சொல்வது. ஆனாலும் நடைமுறை என்பதெல்லாமே இல்லாமலிருப்பதுதானே பரம ஸத்யமான லக்ஷ்ய நிலை? மோக்ஷமென்கிற நிலை? ஆத்மா ப்ரஹ்மமேதான் என்று தெரிந்துகொள்ளும் பரம லக்ஷ்யமான நிலை? அந்த அசலமான ஸ்திதியில் ‘நடை’ ஏது? ‘முறை’ என்பதும் ஒன்றுக்குமேல் வஸ்துக்கள் உள்ளபோது அவற்றை ஒரு ஆர்டரில் ஒழுங்கு பண்ணவதுதான். இருப்பதே ஒன்றுதான், வேறே வஸ்துவே இல்லை என்னும்போது, ‘முறை’ எங்கேயிருந்து வரும்? ‘நடை-முறை’ என்பது அடிப்பட்டுபோன ஸ்தானம்தான் நிஜமான நிலை. அங்கே இரண்டாவது ஆஸாமி, கருவி, கரணம் எதுவுமில்லாததால் கார்யமே கிடையாது.
நடைமுறை லோகம் மாயையும் மனஸும் இருக்கும் வரைதானே? இது அத்தனையும் அஞ்ஞானம்; மனஸைப் போக்கிக்கொண்டு மாயையிலிருந்து விடுபடுவதுதான் ஞானம் என்னும்போது, ‘நடைமுறை லோகம் கார்யத்தினால்தானே நடக்கிறது? கார்யத்தை விடு என்றால் எப்படி?’ என்று கேட்பதே அஸந்தர்பந்தானே? நடைமுறையில் கார்யத்தை விடச்சொல்வதும் அஸந்தர்பம். லக்ஷயத்தில் கார்யத்தை விடாமலிருக்கச் சொல்வதும் அஸந்தர்பம். ‘கர்மயோகம்’ என்று பெரிசாக ப்ரஸங்கம் பண்ணின பகவானும் இது நடைமுறையை உத்தேசித்தே ஏற்பட்ட ஆரம்பநிலைதான் என்று சொல்லி முடிகிற லக்ஷ்யத்திலே ஆரோஹணித்தவனைப் பற்றி, “அவனுக்குக் கார்யமே கிடையாது; தஸ்ய கார்யம் ந வித்யதே“* என்று ஒரே தீர்மானமாகச் சொல்லிவிட்டார்.
ஆகவே எவ்வளவுதான் கார்யத்தை விதித்தாலும் அதெல்லாம் லக்ஷ்யம் இப்போது அஸாத்யமாயிருப்பதால் அதை ஸாத்யமாக்கிக் கொள்வதற்காகச் செய்யும் பூர்வாங்க முயற்சிதான், அதாவது ‘பஹிரங்க ஸாதனம்’ என்று சொல்வதுதானே தவிர, ‘அந்தரங்க ஸாதன’மாக இருப்பது கார்யம் நின்றுபோன ஞானம்தான், ‘சும்மா – நிலை’தான். இப்படி, கார்யத்தை விதிக்கும்போதே சும்மாயிருப்பதையும் சேர்த்து சொல்வதற்காக அவதாரம் எடுக்கவேண்டுமென்று ஸ்வாமி நினைத்தார்.
* கீதை III.17
________________________________________________________________________________________________________________________________
Conventional world: Remaining active; Objective: To remain idle
Therefore, what Swami Dhakshinamurthy thought was, people are unable to remain without doing anything; they do not seem to know how to remain so, hence, although just because of that, we have to give them lot of activities as per holy scriptures and religious rituals, He decided that we should keep reminding them continuously that the objective is to remain doing nothing.
That, the conventional orderly world runs on activities, is quoted, as justification for engaging in activities. However, is it not that not being in an active world is truly the ultimate desired state? The liberated state? The ultimate desired state where there is a realisation that the soul is Brahmam itself? In that still state, where is the question of ‘activity’ and ‘order’? Order is only when there are more than one item and they are to be properly sequenced one after the other. When there is only one and there is no other thing, from where will this order come? The true state is the place where this traditional order of activity is laid low. In such a situation, since there is no second person, tool or manual work, there will be no activity.
Is it not that this traditional active world is there only till the mind and illusion exist? All these are total ignorance. When the mind has to be controlled and be freed from the illusion, is it not inopportune to ask, “Is this conventional world not happening because of activities and if so, what is the point in saying that one should refrain from doing an activity?”. It is inappropriate to counsel to cease from activity in this conventional world. It is also inappropriate not to prescribe ceasing from doing activities when it comes to the (ultimate) objective. Bhagawan, who has much elaborated on ‘Karma yoga’, also has stated that it was only an initial stage, considering the traditional world and has decisively said that ‘he has no activity; Thasya Kaaryam na Vidyathe’* while referring to the person who has conquered the objective.
Therefore, whatever may be the activities prescribed, they have been prescribed as the preceding efforts in a situation where the objective is seemingly impossible to be achieved currently and to facilitate reaching that objective. That is, they are only referred to as the exterior means, whereas the interior means is the superior knowledge gained in cessation of action – the state of being idle. Swamy thought that He should undertake this incarnation to convey to remain idle, along with prescribing undertaking of duties.
*Gita III.17
__________________________________________________________________________________________________________________________
Audio
Categories: Deivathin Kural
Excellent!!
Jaya jaya Sankara Hara Hara Sankara!!
Incredible drawing and awesome voice rendition Sowmi! Kudos!
Fantastic translation! Great work Sri. Sai Srinivasan!