தானே தன் சாப்பாட்டைத் தயாரித்துக் கொள்வதில் எதிர்பார்க்க முடியாத இன்னொரு பிரயோஜனத்தைச் சொல்கிறேன். வேத வித்யாப்யாஸமே ஸ்வயம்பாகத்தால் வளரும். இதற்கும் அதற்கும் என்ன ஸம்பந்தம் என்று தோன்றலாம். சொல்கிறேன்: வடக்கே நான் போயிருக்கும் போது பார்த்திருக்கிறேன். ஒரிஸ்ஸா, பெங்கால், யு.பி. முதலிய இடங்களில் நம்மூர் மாதிரி வேத பாடசாலை என்றில்லாவிட்டாலும் ஸம்ஸ்க்ருத பாடசாலை என்று இருக்கும். நம்மூரில், தமிழ்நாட்டில் மொத்தம் ஏதாவது முப்பது நாற்பது பாடசாலைகள் நல்ல ‘ஸ்ட்ரெங்க்த்’தோடு இருக்குமா என்கிறதே ஸந்தேஹமாயிருக்க, அங்கேயெல்லாம் இப்படிப்பட்ட ஸம்ஸ்க்ருத பாட சாலைகள் நூற்றுக்கணக்கில் இருந்தன. பாடசாலை என்பதே அங்கே ‘டோல்’ என்பார்கள். இந்த விஷயத்தில் ரொம்ப backward -ஆக இருக்கும் என்று நாம் நினைக்கிற அஸ்ஸாமிலேயே சுமார் இருநூறு டோல் இருக்கிறதென்று கவர்னர் (ஸ்ரீ விஷ்ணுராம் மேதி) சொன்னார். இதிலே இன்னும் வேடிக்கை என்னவென்றால் நம் பாடசாலைகளுக்கு நிறைய மூலதனம் இருக்கிறாற்போலவும் வடக்கத்திப் பாடசாலைகளுக்குக் கிடையாது. – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்
I will tell you about an unexpected advantage of self-cooking. Veda Vidyabhyasam (learning of Vedas) will improve because of Swayampaakam (self-cooking). You may wonder how these two are connected. I have seen it when I had been to North India. In states like Orissa, Bengal, and UP, they do not have Veda Patasalas like we do here; there are Samskruta (Sanskrit) Patasalas. In our state – Tamizhnadu – I doubt if there are even 30 or 40 Sanskrit Patasalas that are functionally sound; but in North India there are hundreds of them. Patasalas in North India are called ‘Dol’. The supposedly backward states in as far as this aspect is concerned – states like Assam – have around two hundred Patasalas is what the state Governor (Sri Vishnuram Methi) told me. The funny part is that, unlike the Patasalas here, the resources for the patasalas there is much less. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal
Categories: Deivathin Kural, Golden Quotes
Leave a Reply