Periyava Golden Quotes-892

பஹுகாலமாக நான்-வெஜிடேரியன்களாகவே இருந்து வருகிற தேசங்களிலும் அங்கங்கே ஏதோ பத்து இருபது பேர் கஷ்டப்பட்டு வெஜிடேரியன்ஸாக இருந்து கொண்டு வெஜிடேரியனிஸத்தைப் பிரசாரப்படுத்தப் பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் புதிசாக எதை ஏற்படுத்த முயல்கிறார்களோ அது ஏற்கெனவே நம்மிலே எத்தனையோ கோடிப் பேருக்குப் பாரம்பர்யமாக வந்திருந்தும், நாம் இருக்கிறதையும் அழித்து விட்டு, லோகத்துக்கே வழிகாட்டியாகச் செய்கிற லாபத்தை நஷ்டப்படுத்தி, ‘சீர்திருத்தம்’ செய்கிறோம்! மநுஷ்யர்களாகப் பிறந்தவர்கள் தங்களுடைய status (அந்தஸ்து) என்கிறதை அதற்கு ஸம்பந்தமேயில்லாமல் சாப்பாட்டில் கொண்டு வந்து அதற்காக ஏற்படுத்துகிற ஸமத்வத்துக்காகப் பசு பக்ஷிகளாகப் பிறந்த அநேக ஜந்துக்கள் உயிரையே இழக்கும்படிப் பண்ணி வருகிறார்கள். காந்தீயத்தில் இந்த ஸமத்வம், அந்த அஹிம்ஸை இரண்டுமே இருக்கின்றன என்கிறார்கள்! – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்

Even in the countries where people have traditionally been non vegetarians, we see a handful of them trying to campaign and propagate the values of vegetarianism. While these people are trying to introduce a new culture in their countries, crores of people of our country have already been following vegetarianism for many generations. Instead of leading from the front, we are destroying the cultural values that are prevalent, in the name of ‘reforms’. People bring in their social status into food habits, which is totally unrelated. In the process of bringing about this equality, many animals and birds lose their lives. These people claim that both equality and ahimsa are there in Gandhi’s ideology! – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal



Categories: Deivathin Kural, Golden Quotes

Tags:

Leave a Reply

%d bloggers like this: