228. Ambal Grants Eloquence by Maha Periyava

Jaya Jaya Sankara Hara Hara Sankara – How does Ambal grant her devotees with eloquence? Sri Periyava gives three examples in this awesome chapter.

Many Jaya Jaya Sankara to our sathsang seva volunteer Shri. S. Hemalatha Sukumaran for the translation. Rama Rama

 

வாக்குவன்மை வருஷிப்பாள்

ஜகன்மாதாவாக இருக்கிற அம்பாளைப்பற்றி அநேக மகான்கள், கவிகள், ஸ்தோத்திரங்கள் செய்திருக்கிறார்கள். இப்படிப்பட்ட ஸ்தோத்திர கிரந்தங்களுக்குள் மூன்று மிகவும் சிரோஷ்டமானவை. முதலாவது ‘ஸெளந்தரிய லஹரி’. ஸ்ரீ சங்கரர் பகவத் பாதர்கள் கைலாசத்துக்கு போன போது சாக்ஷாத் பரமேசுவரன் தாமே, அம்பிகையைப் பற்றி செய்திருந்த சௌந்தர்ய லஹரி சுவடிக்கட்டை நம் ஆசாரியாளுக்குக் கொடுத்து அநுக்கிரஹித்தார். அதில் மொத்தம் நூறு சுலோகங்கள் இருந்தன. ஆசாரியாள் கைலாஸத்திலிருந்து திரும்பி வரும்போது, வாசலில் காவலிருந்த நந்திகேசுவரர், மகா பெரிய சொத்து கைலாஸத்திலிருந்து போகிறதே என்று நினைத்து, ஆசாரியாள் கொண்டு வந்த சுவடியிலிருந்து தம் கைக்குக் கிடைத்ததை அப்படியே உருவிக் கொண்டு விட்டார். முதல் 41 ஸ்லோகங்கள் மட்டுமே ஆசாரியாள் கையில் நின்றன. பாக்கி 59 சுலோகங்கள் நந்திகேசுவரர் கைக்குப் போய்விட்டன. அப்புறம் ஆசாரியாள் தாமே அந்த 59 சுலோகங்களையும் கடல் மடை திறந்த மாதிரிப் பாடிப் பூர்த்தி செய்து விட்டார். இவ்விதத்தில்தான் இப்போது நூறு சுலோகங்களோடு உள்ள ‘ஸெளந்தரிய லஹரி’ உருவாயிற்று.

அதில் முதல் நாற்பத்தியோரு சுலோகங்கள் மந்திர சாஸ்திர சூக்ஷ்மங்கள், குண்டலினி யோக தத்வங்கள், ஸ்ரீ வித்யா ரகசியங்கள் முதலியவற்றைச் சொல்கின்றன. அதில் உபாஸகர்களுக்கு ரொம்பவும் உபயோகமான விஷயங்கள் இருக்கின்றன. ஆனாலும் பின்னாலுள்ள, ஆசாரியாள் வாக்கிலிருந்து வந்த 59 சுலோகங்கள் அழகே அழகு! இந்த சுலோகங்களில் அம்பாளின் சிரஸிலிருந்து பாதம் வரையில் அங்கம் அங்கமாக வர்ணித்திருக்கிறார். கம்பீரத்துக்கும் சரி, மாதுர்யத்துக்கும் சரி, இந்த வாக்குதான் சிகரம் என்று சொல்கிறமாதிரி அப்படிப்பட்ட அற்புதமான சுலோகங்கள் இவை. பழங்காலத்தில் செய்த அதி சுந்தரமான விக்கிரங்களிலும் சிற்பங்களிலும் நகத்தளவு பங்கமானாலும்கூட, பிற்காலத்தவர்களால் அதே மாதிரி வேலைப்பாட்டோடு செய்து ஒட்டுப் போட முடியவில்லை. இந்த மாதிரிதான், ஆசாரியாளின் ஸெளந்தரிய லஹரி சுலோகத்தில் ஒரு வார்த்தையை எடுத்துவிட்டு அதற்குப் பதில் இன்னொரு வார்த்தையை யாரும் போடமுடியாது. ஆதி ஸெளந்தரிய லஹரியில் 59 சுலோகம் நஷ்டமானதே நம் பாக்கியம்தான்! நந்திகேசுவரர் அதை உறுவிக் கொண்டிரா விட்டால் ஆச்சாரியாளின் இந்த அற்புத வாக்கு லோகத்துக்குக் கிடைத்திருக்காதல்லவா, என்று தோன்றுகிறது. இப்படிப்பட்ட கவித்துவ பொக்கிஷமாக ஒரு கிரந்தத்தைச் செய்து முடிக்கிறபோது, ஆசாரியாள் “இதில் நான் செய்தது என்ன அம்மா இருக்கிறது? எல்லாம் நீ கொடுத்த வாக்கு. நீ தந்த வாக்கால் உன்னையே துதித்தேன்” என்று விநய சம்பத்துடன் சொல்கிறார். அவளைத் துதிக்கிற கவித்வமும் அவளது உபாஸனையாலேயே அவளருளால் ஸித்திக்கிறது என்று தெரிவிக்கிறார்.

அம்பாளைப் பற்றிய முக்கியமான மூன்று கிரந்தங்களில் இன்னொன்று ‘மூக பஞ்ச சதீ’. காமாக்ஷி அம்பாளின் பொதுவான மகிமை பற்றி ‘ஆர்யா’ என்ற விருத்தத்தில் நூறு சுலோகங்கள். அவளுடைய பாதார விந்தங்களின் அழகைப் பற்றி மட்டும் நூறு சுலோகங்கள், ஸ்துதிக்கு உகந்த அவளது குணங்களைப் பற்றி நூறு சுலோகங்கள், அம்பாளின் கடாக்ஷ வீக்ஷண்யத்தைப் பற்றி மாத்திரம் நூறு சுலோகங்கள், அவளுடைய புன்சிரிப்பின் ஸெளந்தர்யத்தைப் பற்றியே நூறு சுலோகங்கள் என்றிப்படி மொத்தம் ஐந்நூறு சுலோகங்களைப் பொழிந்து விட்டார் மூகர். நூறு சுலோகங்கள் கொண்ட தொகுப்புக்கு ‘சதகம்’ என்று பெயர். தமிழில்கூட, ‘தொண்டை மண்டல சதகம்’, ‘அறப்பளீசுவர சதகம்’ என்றெல்லாம் கேள்விப்பட்டிருப்பீர்கள். நான் மேலே சொன்ன ஐநூறு சுலோகங்களுக்கு முறையே ஆர்யா சதகம், பாதாரவிந்த சதகம், ஸ்துதி சதகம், கடாக்ஷ சதகம், மந்த ஸ்மித சதகம் என்று பெயர். ஐந்து நூறும் சேர்ந்த நூலுக்கு ‘மூக பஞ்ச சதீ’ என்று பெயர். ஆர்யா சதக முடிவில் அம்பாளை ஆராதிக்கிறவனுக்கு அமிருதம் போன்ற வாக்கு சித்திக்கிறது என்று சொல்லியிருக்கிறது.

அம்பாளைப் பற்றிய முக்கியமான ஸ்தோத்திரங்களில் மூன்றாவது ‘ஆர்யா த்விசதி’ என்பது. த்வி – இரண்டு, சதம் – நூறு. ‘ஆர்யா த்விசதி’ என்ற இந்த ஸ்துதி ஆர்யா என்ற விருத்தத்தில் இருநூறு சுலோகங்கள் கொண்டது. ‘லலிதா ஸ்தவ ரத்னம்’ என்றும் அதற்கு இன்னொரு பெயர் உண்டு. அம்பாளுடைய பிரஸாதத்தைப் பரிபூரணமாகப் பெற்ற துர்வாஸ மஹரிஷி செய்த நூல் இது. இந்த ஸ்தோத்திரத்தைப் பாராயணம் பண்ணினாலே நல்ல வாக்கு உண்டாகும் என்பது கண்கூடு. ஸ்ரீ காமாக்ஷி ஆராதனை கிரமத்தைச் செய்தவரே துர்வாஸர்தான். ‘பட்டாரிகை’ எனப்படும் பராசக்தியின் மூன்று முக்கிய உபாஸகர்களுக்கு மட்டுமே ‘பட்டாரகர்’ என்ற பட்டம் உண்டு. இந்தப் பட்டம் பெற்றவர்களில் ஒருத்தர் சாக்ஷாத் ஈசுவரன்; இன்னொருத்தர் காளிதாஸர்; மூன்றாமவர் துர்வாஸர்தான். காமாக்ஷி ஆலயத்தில் இவருக்கு பிம்பம் இருக்கிறது.

அம்பாளைப் பற்றிய இந்த மூன்று பிரதானமான ஸ்தோத்திரங்களும் அவள் அருளால் நல்ல வாக்கு சித்திக்கிறது என்கின்றன.

ஆனால் முடிந்த முடிவாக இந்தத் துதிகள் எல்லாம் அம்பாள் உபாஸனையின் முக்கிய பலனாக ஞானம் ஸித்திக்கிறது என்பதையே சொல்கின்றன. அஞ்ஞானம் நீங்கி, ஞானம் வருவதுதான் மோக்ஷம். இதை அம்பாள் அநுக்கிரஹிக்கிறாள்.

அம்பாளின் பாதத்தில் பிரம்மா, விஷ்ணு, ருத்திரன் ஆகிய திரி மூர்த்திகளும் நமஸ்காரம் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள். அதனால் இவள் பாதத்தில் நாம் பண்ணுகிற அர்ச்சனை அவர்களுடைய சிரஸுக்கும் பண்ணிய அர்ச்சனையாகிறது என்று ஆச்சாரியாள் சொல்கிறார். ‘பவானி உன் தாஸன் நான்’ என்று துதிக்க ஆரம்பிக்கிறவனுக்கு அம்பாளாகவே ஆகிவிடுகிற அத்வைத மோக்ஷத்தை அவள் அநுக்கிரஹித்து விடுகிறாள் என்று சொல்கிற போதும், அவளுடைய பாதத்தில் விஷ்ணு, பிரம்மா, இந்திரன் முதலானவர்களின் கிரீடத்தில் உள்ள ரத்தின மணிகளிலிருந்து எழுகிற ஒளி கற்பூர ஹாரத்தி செய்வதுபோல் பிரகாசிக்கிறது என்கிறார். இப்படி எல்லா தேவர்களும் அவள் பாதத்தில் கிடப்பதாகச் சொல்வதற்கு தாத்பரியம் ஒரு தேவதை உசத்தி, இன்னொன்று தாழ்த்தி என்பதல்ல. எல்லா சக்திகளும் – மநுஷ்யர்களின் சக்தி, மிருகங்களின் சக்தி, தேவர்களின் சக்தி, இயற்கையில் காண்கின்ற பல சக்தி, இவை எல்லாமும் மூலமான ஒரு சக்தியின் திவலைகளே என்பதுதான் அதன் தாத்பரியம். இதைத்தான் ஸயன்ஸிலும் ஒரே எனர்ஜி (Energy) பலவிதமான அணுக்களாக (Particle) அலைகளாக (Wave) ஆகியிருக்கிறது என்கிறார்கள். அந்த மூல சக்தியை அன்போடு ஆராதித்தால் அதுவும் அன்போடு அநுக்கிரஹம் செய்கிறது. மற்ற தனித் தனித் தேவதைகளுக்கு இருக்கிற சக்தி எல்லாமும் இதனிடமிருந்து வந்ததுதான். எனவே அந்த சக்தியை அம்பாளாக ஆராத்திக்கிறபோது எல்லா தேவதைகளின் அநுக்கிரஹத்தையும் பெற்று விடலாம். சிருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹாரம் எல்லாம் அந்த ஒரே சக்தியிடமிருந்து உண்டானவைதாம். அதனால், அவர்களைப் பூஜிப்பதால் பிரம்ம, விஷ்ணு, ருத்திரர்களையும் பூஜித்ததாகிறது. இவள் ஆராதனையே ஸரஸ்வதி, லக்ஷ்மி ஆகியவர்களுக்கும் வழிபாடாகிறது; வித்யை, செல்வம் எல்லாம் பக்தனுக்குச் சித்திக்கின்றன. அம்பாளை உபாஸித்தால் கிடைக்காததில்லை. சாஸ்திரங்கள் இதிலே பல பலன்களைக் குறிப்பிட்டுச் சொல்கின்றன. அம்பாளை உபாஸிப்பதால் மிகவும் உத்தமமான வாக்கு சித்திக்கிறது. கவித்வத்தை விசேஷமாக அநுக்ரஹிக்கிறாள். காளிதாஸர் பூர்வத்தில் மிகவும் மந்தமாக இருந்தார் என்றும், உஜ்ஜயினியில் காளி அநுக்கிரஹம் கிடைத்தே அவர் கவி சிரேஷ்டரானார் என்றும் கதை கேட்டிருப்பீர்கள். ஊமையாக இருந்த மூகரும் அவளருளாலேயே க்ஷணத்தில் மகா கவியானார்.

தான் பெற்ற இன்பத்தை உலகமும் பெறும்படி செய்வது வாக்கு வழியாகத்தானே? இதனால்தான் மகா பெரியவர்களுக்கு அம்பாள் அருள் செய்தது மட்டுமின்றி, அந்தப் பேரருள் அசடுகளான நமக்கும் பாயவேண்டும் என்ற கருணையிலேயே அந்த மகான்கள் தம் அநுபவத்தைப் பாடுவதற்கான வாக்குவன்மையையும் வருஷித்தாள்.

கவித்வம், சங்கீதம் முதலிய கலைகள் எல்லாம் அம்பிகையின் அநுக்கிரஹத்தால் உண்டாகின்றன. பொதுவாக இதற்கெல்லாம் ஸரஸ்வதியை அதி தேவதையாகச் சொல்கிறோம். இப்படிப்பட்ட ஸரஸ்வதி, அம்பாளின் சந்நிதானத்தில் எப்போதும் வீணையோடு கானம் பண்ணிக் கொண்டிருக்கிறாளாம். என்ன பாட்டுக்கள் பாடுகிறாள்? அம்பாளின் பெருமையைப் பற்றியா? இல்லை. மகாபதிவிரதையான அம்பாளுக்கு ஈச்வரனைப் பாடினாலே சந்தோஷம். அதன்படி வாணி ஈசுவரப் பிரபாவத்தைப் பாடிக் கொண்டேயிருக்கிறாள். அம்பாள் அதை ரொம்பவும் ரஸித்து ஆனந்தப்படுகிறாள். கேட்கிறவர்கள் ஆனந்திப்பதே பாடுகிறவனுக்கும் ஆனந்தத்தைத் தந்து மேலும் உற்சாகப்படுத்தும். அப்போதுதான் வித்வானுக்கு மேலே மேலே கற்பனை விருத்தியாகும். கேட்கிறவன் தப்புக் கண்டுபிடிக்கிற மாதிரியே உட்கார்ந்திருந்தால், வித்வானுக்கு சுபாவத்தில் இருக்கிற பிரதிபா சக்தியும் போய்விடும். அம்பிகை ஆனந்தத்தோடு உத்ஸாகப் படுத்தப் படுத்த ஸரஸ்வதி பரமாற்புதமாக கானம் பண்ணிக் கொண்டே போகிறாள். அம்பாள் ரொம்பவும் சந்தோஷப்பட்டுத் தலையை ஆட்டிக் கொண்டு “பேஷ் பேஷ்” என்று வாய் விட்டுச் சொல்லி விடுகிறாள். அவ்வளவுதான்! அம்பாளுடைய அந்த வாக்கின் மாதூர்யத்தில் ஸரஸ்வதியின் வீணா நாதம் அத்தனையும் ஒன்றுமில்லை என்றாகிவிடுகிறதாம். ‘இப்படிப்பட்ட மதுரவாக்குக் கொண்டவளுக்கு முன்பா என் வித்தையைக் காட்டினேன்?’ என்று வெட்கப்பட்டுக் கொண்டு ஸரஸ்வதி தன் வீணையை உறையில் போட்டு மூடி வைத்து விடுகிறாளாம். “விபஞ்ச்யயா காயந்தீ” எனறு ஆரம்பிக்கிற ஸெளந்தரிய லஹரி ஸ்லோகம் இந்த சம்பவத்தை நாடகம் போட்டுக் காண்பிக்கிற மாதிரி வர்ணிக்கிறது. அம்பாளை உபாஸிப்பதால் நம் ஆனந்தத்தைப் பிறர்க்கும் தர வைக்கிற ஸங்கீதம் முதலான சகல கலைகளிலும் எளிதில் ஸித்தி பெறலாம் என்பது அர்த்தம்.

அம்பாளை வழிபடுவதால் குருபக்தி, பதிபக்தி இவையும் விசேஷமாக விருத்தியாகும்.

_____________________________________________________________________________________________________________________________

Ambal Grants Eloquence

Many great saints and poets have composed stotrams on Ambal who is the goddess of the universe. Out of those compositions three are revered the most. First one is ‘Soundaryalahari’. When Sri Sankara Bhagavatpada went to Kailasa,  Parameshwara handed over the palm leaf booklet containing Soundaryalahari  composed by he himself on Ambal and blessed him. There were hundred slokas in that. But when Adishankara was returning from Kailasa, Nandikeshwara who was the sentry at the entrance, unable to digest the fact that a great treasure is leaving Kailasa, tried to snatch from his hands and grabbed a portion. Only the first 41 slokas got retained with Adishankara as the remaining 59 were seized by Nandikeshwarar.  Acharya sang the balance verses like water gushing out of an opened dam to make it hundred and completed it. The present Soundaryalahari is compiled thus.

The first 41 slokas give intricacies of Mantra Sastra, Kudalini yoga, and the secret of Srividhya containing useful information for Upasakas (doing spiritual practice). But the following 59 slokas composed by Adisankara are exquisitely beautiful. It describes the beauty of every part of Ambal right from head to foot. They are wonderful slokas par excellence in melody and majesty. Some of the ancient beautiful sculptures are such that in later years rectification matching the original work becomes impossible even if there is a minute dent. Similarly in Acharya’s Soundaryalahari the words are such that no one would be able to find a better word as substitute. In a way we are fortunate to have lost the 59 slokas of the original Soundaryalahari. We feel that had not Nandikeshwar seized those slokas the world would have missed the wonderful composition of Acharya. Acharya after composing such a treasure of poetry says with the height of modesty, “This is not my creation. You had given me speech. I worship you with the speech enabled by you”. He states that the ability to sing her praise happened only due to her worship and her blessings.

Out of the three most important rendering on Ambal Mooka Pancha shathi is another one. In the meter called Arya the greatness of Ambal is detailed in a general way in hundred slokas. Another hundred slokas describes the beauty of her lotus feet; hundred slokas about her praiseworthy qualities; another hundred about the power of grace of her eyes; One more hundred about the beauty of her smiles. Mookar thus composed exquisite five hundred slokas. Compilation of hundred stanzas is called ‘shathakam’. You would have heard in Tamizh also phrases like ‘Thondaimandala shathakam’ and ‘Arapaleeswarar shathakam’. The five hundred slokas I mentioned above are called respectively as Arya shathakam, Paadaaravindha Shathakam, Stuthi Shathakam, Kataaksha Shathakam, Mandasmitha Shathakam. The book compiling all the five hundred slokas is called ‘Mooka Panchashathi’. It is mentioned at the end of Arya Shathaka that the one who worships Ambal is endowed with speech as good as nectar.

The third in the most important sthothras on Ambal is Arya Dwishathi. Dwi means two and shathi means hundred. ‘Arya dwishathi’ is compilation of two hundred stanzas in the meter Arya.  It has another name ‘Lalitha Sthava Rathnam’. It was composed by Dhurvasa Maharishi who was bestowed with the complete grace of Ambal. It is a known fact that one gets good speech by chanting this sloka.  It is Dhurvasa who had streamlined the worship of Kamakshi. Bhattarikar is the title give to three main worshippers of Parasakthi who has another name Bhattarikai. One of the three persons to receive the title is Parameshwara himself. Another is Kalidasa. The third one is Dhurvasav Maharishi. His deity is found in Kamakshi temple.

All these three important sthothra on Ambal states that eloquence is obtained by her grace.

But the conclusive effect as stated by all these as the benefit of Ambal worship is attainment of wisdom or Gnana. Removal of ignorance and getting Gnana is Moksha. Ambal grants this.

At the foot of Ambal the trinity Brahma, Vishnu, and Siva keep prostrating. So the offerings we make to her feet reaches their heads too says Acharya. Sri Adishankara says that she grants Adwaita Moksha to the one who just starts praying, ‘Bhavani, I am your servant,” and also that the radiance of the jewels in the crowns of Brahma, Vishnu, and Indira  gives the effect of lighted camphor at her feet. Mentioning that all the other Gods are found at the feet is not to indicate one is superior and another inferior. It is symbolic that all the energies are part of one prime energy be it the energy of men, animals, devas, or the various energy found in nature.  This is what is conveyed in science when it says same energy is transmitted as particles and waves. If the base energy is revered with love it also blesses us with affection. All the other individual gods have received their energy from this source. So if we worship that energy in the form of Ambal, we get the grace of the other gods too. Creation, sustenance, and destruction get their energy from the same source. So by worshipping her it becomes equivalent to worship of Brahma, Vishnu, and Siva. Her worship is also the worship of Saraswathi and Lakshmi. The devoted gets education and wealth. There is nothing that he cannot attain. Sastras list out specific benefits. By Ambal worship one becomes highly eloquent. He gets mastery on poetry. You would have heard the story that Kalidasa was initially dull headed but with Ujjayini Kali’s grace became the greatest poet. Even Mookar who was dumb became a great poet just in seconds by her grace.

Is not that the pleasure derived by one is transmitted to others through speech? That is why Ambal not only graced great men but out of compassion for us who are dull heads she blessed them with eloquence to sing their experience so that the great blessings reach us also.

The mastery over arts like poetry and music are attained by the blessings of Ambal. Generally Saraswathi is considered the predominant deity for all these.  Goddess Saraswathi constantly sings and plays Veena in the vicinity of Ambal. Is she singing the praise of Ambal? No. Because Ambal who is devoted to her husband is happy to hear the songs on Eshwara. So Vani keeps singing hymns glorifying Eashwara. Ambal enjoys the music and is delighted. Singer gets encouraged and his creative ideas are augmented if the listener enjoys.  If the listener appears to be a critic then the singer would loose his natural ingenuity also. As Ambal keeps appreciating, Saraswathi also keeps playing wonderful renderings. At one point along with nodding of the head in appreciation Ambal expresses by words, ‘wah wah’ (Besh, Besh). The very next moment Saraswathi kept her Veena down and covered it. It was because she was abashed by the sweetness of the voice of Ambal which overshadowed the melody of Veena recital. Saraswathy was overwhelmed with a feeling of shame for showing her talent in the presence of Ambal whose honeyed voice surpasses the sweet music of Veena. Soundaryalahari sloka starting with ‘Vipanchyayaa gaayanthi’ describes this incident vividly. It states by worshiping Ambal we get expertise over arts like music which delights the others too.

Devotion towards Ambal leads to abundant devotion towards Guru and husband.

 



Categories: Deivathin Kural

Tags:

3 replies

  1. Great art work by Sudhan. Hats off Sudhan. Continue your great art works on Sri Periyava and Ambal.

  2. Jaya Jaya Sankara Hara Hara Sankara, Pahi Pahi Sri Maha Prabho. Janakiraman. Nagapattinam

  3. Thanks for the great translation to English.

Leave a Reply

%d bloggers like this: