Periyava Golden Quotes-888

இப்படியெல்லாம் சீர்திருத்தம் பண்ணினால்தான் ஒற்றுமை உண்டாகுமென்கிறார்கள். எனக்குச் சிரிப்புதான் வருகிறது – எல்லாரையும் சேர உட்கார வைத்து, நியமமில்லாத ஆஹாரதிகளைப் போட்டு விட்டால், ஒற்றுமை உண்டாகிவிடும் என்பதைக் கேட்க!  உலகத்தின் எல்லா தேசங்களையும் யுத்தத்தில் இழுத்துவிட்டு ஜன ஸமுதாயத்துக்கே பெரிய சேதம் விளைவித்த World War -க்குக் காரணமாயிருந்த ராஜாங்கங்களெல்லாம் யுத்தப் பிரகடனம் செய்ததற்கு முதல் நாள் வரையில் பரஸ்பரம் விருந்து கொடுத்துக் கொண்டு, இவருக்கு அவர் ‘டோஸ்ட்’, அவருக்கு இவர் ‘டோஸ்ட்’ என்று சேர்ந்து சாப்பிட்டுவிட்டுத்தான் மறுநாளே ஒருத்தர் தேசத்தை இன்னொருத்தர் நாசம் பண்ண ஆரம்பித்தார்கள் – ராணுவம், ஸிவிலியன் பாபுலேஷன் என்ற வியவஸ்தை இல்லாமலே! அப்படியும் ‘ஒற்றுமை’ ஸஹபோஜனத்தால் வந்துவிடும் என்று உபதேசம் செய்கிறார்கள்! ஏதோ தாற்காலிகமாக ஏற்படக்கூடிய அல்ப திருப்திக்காகவே இப்போது நடக்கும் இந்த தேநீர்க் கச்சேரிகளும், சிற்றுண்டி விருந்துகளும், கலப்பு போஜனங்களும் பிரயோஜனப்படுகின்றனவே தவிர இதனால் ஒற்றுமையோ, ஸெளஜன்யமோ உண்டாகி விடவில்லை என்பது இந்தப் புதுப் பழக்கங்கள் நம் தேசத்தில் ஏற்பட்டு பல வருஷங்களாகி, இன்னமும் தினந்தினம் ஸமூஹச் சண்டைகள் ஜாஸ்தியாகிக் கொண்டு தானிருக்கின்றன என்பதிலிருந்தே தெரிகிறது. பட்டம் பெறுவது மாதிரி ஸ்வய லாபத்தை உத்தேசித்து ஒரு ஏமாற்று வித்தையாகத்தான் இந்த விருந்து உபசாரங்கள் நடக்கின்றன. இதோடு போனால் கூடப் பரவாயில்லை. இந்த நவ நாகரிக விருந்துகள் தர்ம நூல்களிலிருந்தும் வெகுதூரம் எட்டிப் போய்க் கொண்டிருப்பதால் ஆத்மார்த்தமாகவும் பெரிய நஷ்டத்தை உண்டாக்குகின்றன. – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்

I can only laugh when I hear that unity can be achieved only by the reformist activity of people sitting together and eating impure food. All the governments that were responsible for the World War were hosting parties for each other, offering ‘Toast’ in each other’s name, even up to a day before the war began! What they did from the next day was just senseless annihilation of the other nations and of mankind! They did not even care to differentiate between army men and civilians and killed everyone! In spite of these happenings, people still believe that ‘Unity’ can be achieved by eating together. We need to realize that all this fun and frolic of having tea parties or of eating together only brings about temporary satisfaction. Unity or harmony does not come because of these parties. This can be seen even in our country where we have class conflicts on the rise despite all these kind of activities. Like getting a degree [without the requisite knowledge], these food parties happen only for promoting one’s self interest and are also an attempt to fool others. It may be tolerable if it stops here. But these parties are way far from our Dharmic ways and thoughts and have brought about a severe decline in the spiritual progress of the individual. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal



Categories: Deivathin Kural, Golden Quotes

Tags:

Leave a Reply

%d bloggers like this: