Jaya Jaya Sankara Hara Hara Sankara – For all the non-stop work and yathras in his early years to being mostly in Kaashta Mounam over his last few decades demonstrates the spirit of this chapter and signifies how Sri Periyava walked the talk. One key difference is Periyava talks about attaining the action-less state through action after attaining maturity. This obviously does not apply for Sarvesawaran Periyava who as a Jagadguru showed us how to do it.
Many Jaya Jaya Sankara to our sathsang volunteers, Shri ST Ravi kumar for the great translation and Smt. Sowmya Murali for the nice sketch & audio. Rama Rama
செயலற்றுப் போக வழியாகவே செயல்களும்!
ஆனாலும் — இதுதான் முக்யமான, ஸாரமான விஷயம் — ஆனாலும் இத்தனை அவர் பண்ணச் சொன்னதும் ஒன்றுமே பண்ணாமலிருக்கும் நிலைக்கு ஏற்றுவதற்காகத்தான்! கார்யம் பண்ணுவது-எத்தனை தர்ம கார்யமானாலும், ஸத்கார்யமாயிருந்தாலும், அதைப் பண்ணுவது — அதுவே லக்ஷ்யம் என்பதற்காக அல்ல. ஒன்றுமே பண்ணாமலிருக்கும் லக்ஷ்யத்தில் சேர்க்கத்தான் கர்மயோகம் என்ற அத்தனை தர்ம கார்யமும், பக்தி யோகத்தில் வரும் அத்தனை உபாஸனைகளும், ஞான யோகத்தினாலேயே வரும் ச்ரவண-மனன-நிதித்யாஸன கார்யங்களுங்கூட! அதற்கான பக்குவம் வருகிற வரைக்கும் யாராலும் சும்மாயிருக்க முடியவில்லையே என்பதனால்தான் அவரும் ஸரி, அவருக்கு முன்னால் கீதை, மற்ற ஸ்ம்ருதிகள் ஆகியவையும் ஸரி, எல்லாவற்றுக்கும் முந்தைய ச்ருதியுமே ஸரி, ‘மனம் போனபடி பண்ணித் தன்னையும் கெடுத்துக் கொண்டு, ஊரையும் கெடுக்காதே! மனஸின் கோணலை நிமிர்த்தும் படியாக, அதன் அழுக்கை அலம்பி எடுக்கும்படியாக இப்படியிப்படி கர்மாநுஷ்டானம், தர்மாநுஷ்டானம் என்று நிறையக் கார்யம் செய்’ என்று வழி சொல்லிக்கொடுத்தது.
மனஸை ஆத்மாவிலே கரைப்பதற்குப் பூர்வாங்கமாக சுத்தப்படுத்த வேண்டும். அதற்கு உபாயமாகக் கர்மாநுஷ்டானம் தவிர எதுவும் ஸாமானிய ஜனங்களுக்கு இல்லை. ஆகையால் செயலில்லாத ஆத்ம ஸாக்ஷாத்காரத்திற்குப் போகவே ஸத் கர்மாக்களில் ஆரம்பிப்பது தவிர வேறு வழியில்லை. இதுதான் வேத சாஸ்த்ரம், கீதா சாஸ்த்ரம், ஆசார்யாளின் அத்வைத சாஸ்த்ரம் ஆகிய எல்லா சாஸ்த்ரங்களும் நைஷ்கர்ம்ய ஸ்திதியையே (செயலற்ற நிலையையே) லக்ஷ்யமாகக் கொண்டுள்ள போதிலும் கர்ம யோகத்தை வெகுவாக வலியுறுத்தியிருப்பதற்குக் காரணம். கார்யமில்லாமல் நடைமுறை லோகமில்லை, நடைமுறையில் ஜீவர்களுக்குச் சேர்ந்துள்ள கர்மா கழியவும் அதுதான் வழி என்பதே நம்முடைய ஸகல சாஸ்த்ரங்களும் ஒப்புக் கொண்டுள்ள உண்மை.
______________________________________________________________________________________________________________________________
Action only a means towards inaction
Still – this is the most important and essence of the matter – Although he advised to do so many things, it was for graduating to the state of being doing nothing! Doing something – howsoever noble or honorable it may be, doing it, is not for the sake of doing it. All the righteous acts called Karma Yoga, all the worshipping prescribed in Bhakti yoga and listening and thinking based profound and repeated meditation prescribed in Gnana yoga, are all only acts aimed towards reaching the objective of not doing anything. Since it is not possible for anyone to remain inactive till the time he gets the maturity for that, he too, and before him, the Gita and also other scriptures and foremost of all, the sacred knowledge orally transmitted by the Brahmans (Sruthi) from generation to generation also, have advised that one should not indulge as he pleases, causing harm to himself and in the process, to the society at large but to engage in lot of activities prescribed as one’s duties, virtuous or moral conduct activities so as to straighten the crooked bent in the mind and to cleanse its dirt.
As a prelude to immerse the mind in the soul, it should be cleaned. To facilitate that, there is no alternative to engaging in activities prescribed as one’s duties. Therefore, there is no way other than indulging in noble activities to move towards the inactive state of liberation. This is the reason, why Veda Sastras, Gita Sastras, Acharya’s Adwaita Sastras and all other Sastras have greatly emphasized on Karma Yoga, although the ultimate aim is to reach the inactive state (Naishkarmya sthithi). Conventional orderly world does not exist without activities. It is also the truth accepted by all Sastras as the way for reducing the karma accumulated by the human beings in the living world.
______________________________________________________________________________________________________________________________
Audio
Categories: Deivathin Kural
Awesome drawing & great translation!!
Hara Hara Sankara Jaya jaya Sankara !!