I am sure some of you must have seen the new vigraha prathistai in Kumbakonam matam where Mahaperiyava is like Lord Swaminathar – in a standing pose with the vel on one hand and dhandam on the other – very unique! Very beautiful.
Thanks to Sri Suresh for the photo and a wonderful stuthi on Periyava!
பெரியவா சரணம்.
புனித பாரதத் திருநாட்டின் தென்னகத்துக் கோயில் நகரமாம் திருக்குடந்தை தலமதிலே ஸ்ரீகாஞ்சி காமகோடி மூலாம்னாய ஸர்வஜ்ஞ பீடத்தின் ஸ்ரீசங்கர மடத்தினிலே குடிகொண்டு நம்மையெல்லாம் அனுக்ரஹிக்கும் ஞானசாகரனான் ஸ்ரீமஹாபெரியவாளின் விக்ரஹ தரிசனம்.கண்டீரோ!
வேலும் திருத்தண்டமும் கொண்டு.ஸ்ரீஸ்வாமிநாத குருவாக காட்சி தரும் ஐயனைக் கண்டதும் குருப்புகழ் பாடிட.மனம்.லயித்ததென்று சொன்னால் அது தானே அவருடைய பரம.கருணைக்குச் சான்றே!
ஹர ஹர சங்கர…
ஜய ஜய்அ சங்கர…
தான தந்தன தான தந்தன
தான தந்தன தான தந்தன
தான தந்தன தான தந்தன …… தனதான
……… பாடல் ………
மூல மந்திர மோத செந்திற
மேது மெந்தனி லாத பித்தனை
போல லைந்தவ னோது மந்திர ….. முனதான
நாம சங்கர மோத சுந்தர
மாக வெந்தனி லேகு புங்கவ
ஞான சந்தத மான நின்னுரு ….. மனதார
நாடி நல்லற மோடு நின்னடி
பேணி சிந்தையுந் தூய நற்றவ
மான சுந்தர மோடு சங்கம …. நினைவாகி
தூய மஞ்சுள மோன சங்கரி
ஆடுஞ் சுந்தர மோடி ணைந்தெழி
லாக மர்தல மோடி வந்துனை …. பணிந்தேனே!
கூடு கொண்டுழ லாகி வெம்பிட
லோடு வாழ்வினி லேது மஞ்சிடல்
போது மிங்கினி ஞானந் தந்திட ….. வருவாயே
ஆல முண்டவ னாதி சங்கர
னாக வந்தவ ஞான சங்கர
னான நின்கழல் தேடி வந்திடுஞ்் …. சிறியேனை
ஆதி யந்தமு மான சுந்தர
ஞான சங்கர மோதி யிவ்வுல
கோடு மங்கள மோங்கி வாழ்வுற …. அருள்வாயே!
போக முப்புழ லோடு வெம்பின
னான எந்தனை வாரி யாண்டிடும்
மாய கண்ணனு மான சங்கர ….. பெருமானே!
எதற்குமே பயன்படாத ஜடப்புள் போலே வாழ்ந்தவனை ஆட்கொண்டு இன்றளவிலும் ஜீவித்துக் கொண்டிருக்க வைத்த அந்த மஹாபிரபுவை எப்பொழுதும் பாடிப் போற்றிட அர வேண்டியே மனம் ஏங்குகிறதாம்.
ஜகத்குருவிடம் ஜகத்திலுள்ள அத்துனை ஜீவராசிகளுக்குமாக பிரார்த்திக்கவே மனம் விழைகிறதும் அவர் க்ருபையாலே தாமே!
எல்லோருக்கும் ஆனந்தத்தைத் தாங்கோ பெரியவா! செய்வதறியாமற் செய்த பிழைகளைப் பொறுத்துக் காத்து ரக்ஷியுங்கோ பெரியவான்னு அவருடைய பாதகமலங்களிலே இன்றைய குருப்புகழைச் சமர்ப்பித்து ப்ரார்த்துத்துக் கொள்வோமே!
குருவுண்டு – பயமில்லை; குறையேதும் .
பெரியவா கடாக்ஷம் பரிபூர்ணம்.
நமஸ்காரங்களுடன்
சாணு புத்திரன்
Shankara.
saanu puthran anna-you are divinely gifted and guided also.saubhagyam-that i could meet you in person.
Jaya Jaya Sankara Hara Hara Sankara. Janakiraman. Nagapattinam.