Sri Periyava Mahimai Newsletter – May 25 2013


Jaya Jaya Sankara Hara Hara Sankara – There are not many instances where Sri Periyava reveals he is Eswara Avatharam. However it is a blessing for all of us that in both these incidents below HE reveals it pretty subtly.

Many Jaya Jaya Sankara to out sathsang volunteers Smt. Savita Narayan for the Tamizh typing and Shri. Harish Krishnan for the translation. Rama Rama

(வாயினால் உன்னைப் பரவிடும் அடியேன் படுதுயர் களைவாய் பாசுபதா பரஞ்சுடரே)

ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மஹாபெரியவாளின் மகிமை (25-05-2013)

ஆதிசங்கரரும் நானே

உலகோரை உய்விக்கச் சித்தம் கொண்ட பரமேஸ்வரர் முன்பு ஆதிசங்கரராய் திருஅவதாரம் கொண்டு அனுக்ரஹத்தின் தொடர்ச்சியாக மறு அவதாரமாய் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளெனும் துறவிக் கோலம் பூண்டு இத்திருக்கோலத்தில் பிரம்மரிஷியாம் சுகப்பிரம்ம முனிவரைப்போல் திகழ்ந்து அனுக்ரஹித்துள்ளார்.

சாக்ஷாத் சர்வேஸ்வரராய் இருந்த இந்த நடமாடும் தெய்வம் அந்த தெய்வரகசியத்தை மறைக்க பெரும் சிரமம் கொண்டு திருநாடகம் புரிந்தது ஒரு பக்கமிருந்தாலும், சில பிரத்யேக பக்தர்களுக்கு மட்டும் அந்த உண்மையை வெளிப்படுத்துவதுபோல தானே வலிய சில சூட்சமமான வெளிக்காட்டுதலை அருளி அவர்களின் பக்திக்குப் பரிசாக அனுக்ரஹித்துள்ளார்.

ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா சாக்ஷாத் ஈஸ்வரரே என்பதையும் ஆதிசங்கர திருஅவதாரத்திற்குப் பின் அவர் ஸ்தாபித்த காஞ்சிமடத்தில் 68-ம் பீடாதிபதியின் கோலத்தில் திரும்ப உலகோருக்கு பல கருணையினைப் பொழிந்து காப்பதும் சத்தியம் என்பதையும் தன்மேல் பரிபூர்ண பக்தி கொண்டிருந்த செல்லம்மா பாட்டி, பிரம்மஸ்ரீ பிரதோஷம் மாமா போன்ற அதீத ஸ்திர நம்பிக்கை கொண்டவர்களுக்கு விசேஷமாக எடுத்துக் காட்டி அருளியுள்ளார்.

அப்பேற்பட்ட பக்தர்களின் அனுபவங்கள் ஆபூர்வமானவை!

அலகாபாத் திரிவேணி சங்கமம் நதிக்கரையில் அந்த த்ரிகால சஞ்சார மூர்த்தியாம் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் பூர்ண அனுக்ரஹத்தால் தனக்குக் கிடைத்திட்ட ஒரு அதிசய சம்பவத்தினை பக்தை செல்லம்மா பாட்டி தன் கைப்பட எழுதி வைத்துள்ளார்.

திரிவேணி சங்கமத்தில் நடமாடும் தெய்வமாம் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா தன் திருப்பாதங்களைப் பதித்தபோது அந்தப் புண்ணிய நதியின் புனிதம் இன்னும் சிறப்புற்றது. ஸ்ரீ கங்காதரராம் பெரியவா ஸ்நானம் செய்யும் திருக்காட்சியை தரிசிக்க பக்தர்கள் கூட்டத்துடன் செல்லம்மா பாட்டியும் நிற்கிறாள்.

அன்னையாம் நதி ஆனந்தக் கூத்தாடிக் கொண்டு ஈஸ்வரருக்கு அபிஷேகம் செய்விக்கப் பொங்கி எழுந்து குதூகலிக்கிறது. பரவசமாய் அந்த அரியக் காட்சியைக் கண் சிமிட்டாமல் ரசித்துக்கொண்டிருந்த பக்தர்கள் அங்கு திடீரென்று தோன்றிய ஒரு முதலையின் தலையைப் பார்த்ததில் பதை பதைத்துப் போயினர். ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவாளின் அருகிலேயே வந்துவிட்ட முதலையைப் பார்த்து பயந்ததில் பக்தர்கள் கரையிலிருந்தபடி “பெரியவா வந்துடுங்கோ!” வந்துடுங்கோ என்று அலறினர்.

ஆனால் ஸ்ரீ மகான் தன் உடல் ரீதியிலும், மன ரீதியிலும் எந்த சஞ்சலமும் சிறிதும் அடையாதவராய் அந்த முதலையையும் அத்வைத அங்கமாய் பாவித்தது போல் பதற்றமின்றி நிற்பதுபோல் காட்சி தந்தார். இந்த அதிசயத்தை அனுபவித்து ஆனந்திக்க இயலாமல் பக்தர்களின் அச்சம் மிஞ்சி நின்றது.

சாக்ஷாத் பரமேஸ்வரரை தரிசிக்க மட்டுமே வந்ததுபோல அந்த கொடிய முதலை அங்கிருந்து சாதுவாக அகன்றது. ஒரு பரப்பிரம்ம ஸ்வரூபம் எப்படி எங்கும் வியாபித்து எந்த ஒரு சூழலுக்கும் தன் சலனங்களைக் காட்டாமல் ‘ஸ்தித ப்ரக்ஞன்’ என்ற நிலையில் திகழுமோ அப்பேற்பட்ட நிலைக்கு உதாரணத்தைக் காட்டியபடி ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா ஸ்நானம் செய்துவிட்டுத் திரும்புகிறார்.

பாட்டிக்கும் பக்தர்களுக்கும் பெரும் நிம்மதி! அதோடு இப்படி ஸ்ரீ பெரியவா இந்த சூழ்நிலையை ஏற்று எதிர்கொண்டவிதத்தினை அதிசயத்து இதைப்பற்றி ஸ்ரீ பெரியவாளிடம் கேட்டு விட வேண்டுமென்று பாட்டிக்கு மனதில் ஆவல் மிகுந்தது.

சாவகாசமாக பாட்டிக்கு ஸ்ரீ பெரியவாளிடம் இதைக் கேட்டறியும் சந்தர்ப்பம் கிட்டியது.

கேட்டதும் ஸ்ரீ பெரியவா திருவதனத்தில் ஒரு புன்னகைக் கீற்று ஒளிவிட்டது.

‘பகவத்பாதாள் சந்நியாசம் வாங்கறத்துக்கு முன்னால் இப்படித்தான் ஒரு முதலை கவ்விண்டது தெரியுமோ” என்று ஸ்ரீ பெரியவா ஆரம்பித்து அந்த பாலகனைப் பெற்ற அன்னையாம் ஸ்ரீ ஆரியாம்பாளிடம் மகனை சன்யாசம் கொள்ள அனுமதித்தால் முதலை விட்டு விடுவதாகச் சொல்ல அதன்படியே ஸ்ரீ ஆரியாம்பாளெனும் லோகமாதா உறுதியளிக்க முதலை பாலகனை விடுவித்ததை ஸ்ரீ பெரியவா சொல்லி முடித்தார்.

இதுவரை ஸ்ரீ பெரியவா சொன்ன சங்கர சரிதம் பாட்டி உள்பட எல்லோரும் அறிந்ததே என்பதால், ஸ்ரீ பெரியவா அடுத்ததாக இப்பொழுது நிகழ்ந்துள்ள ஒரு முதலை சம்பவத்தை எப்படி அதற்கு தொடர்பு படுத்தப் போகிறார் என்ற ஆவலோடு பாட்டி நிற்கிறாள்.

அப்போது அந்த தெய்வ ரகசியத்தை வெகு சூட்சமமாக ஸ்ரீ பெரியவா தெரிவிக்கப் பாட்டி அதைக் கேட்கும் பாக்யம் பெறுகிறாள்.

“இது ரெண்டாயிரம் வருஷத்துக்கு முன்னாலே நடந்தது. அப்போ முதலையா வந்தது ஒரு கந்தர்வன். அவனுக்கு ஸ்ரீ சங்கரரை பாலகனாய் தரிசிக்க மட்டும் தான் முடிந்திருந்தது. ஒரு சந்நியாசி கோலத்தில் தரிசிச்சாத்தான் பாவ விமோசனமோ என்னவோ? ரெண்டாயிரம் வருஷத்துக்கப்புறமா இங்கே அதனாலே அதே முதலையா வந்திருக்கோ என்னவோ என்று ஏதோ ஒரு அரிய சம்பவத்தை திசை திருப்புவதுபோல் வேடிக்கையாக சொல்லிவிட்டு குறும்பாக ஸ்ரீ பெரியவா சிரித்தாராம்.

பாட்டிக்கு உடல் சிலிர்த்தது.

சாக்ஷாத் ஆதி சங்கரரே தன் எதிரில் இத்தனை எளிமையாக இப்பேற்பட்ட ஒரு தெய்வீக அற்புதத்தை சர்வ சாதாரணமாக இயம்ப அதைக் கேட்கும் பாக்யம் எப்பேற்பட்டது என்று பாட்டியின் மனம் பரவசமுற்றது. சதாசிவமாய் வெளிக்காட்டி தன் முன்னே காட்சியருளும் நடமாடும் தெய்வத்தின் பெரும் கருணையை எண்ணி உளம் உருகி பாட்டி நமஸ்கரித்தெழுந்தாள்.

சர்வ வல்லமை படைத்த தெய்வம் ஏன் இப்படி தன்னை வருத்திக்கொண்டு சதாசர்வகாலமும் உலகோரை அன்னையினும் மேலான பரிவோடு காத்தருள நம்மில் ஒருவராய் அருளிக் கொண்டிருக்க வேண்டுமென்று பாட்டி நினைத்திருக்கலாம்.

எல்லா தெய்வ திருஅவதாரங்களும் ஒரு அசுர சம்ஹார நோக்கத்துடன் தான் நிகழ்ந்துள்ளன. ஆனால் ஸ்ரீ பெரியவா திருஅவதார காலகட்டத்தில் அப்படி ஒரு அசுரன் இருப்பதாக நமக்கு தெரியவில்லை. வெளிப்படையாக தெரியாவிடினும் கலியின்பிடியில் நமக்குள்ளேயே நாம் அசுரர்களாக சநாதன தர்மங்களை மறந்து தவறான வழிகளில் செல்கிறோம்.

சர்வேஸ்வரர் தன் அபார கருணையினால் நம்மை உய்விக்கவே எளிய துறவியாய் அவதரித்து நமக்கெல்லாம் தர்மவழிகாட்டி கடைத்தேறும்படி அருளியுள்ளார்.

ஸ்ரீ ஆதிசங்கர அவதாரத்திற்குப் பிறகு இப்படி ஒரு காருண்ய மழையைப் பொழிந்தருளுவது சாக்ஷாத் ஈஸ்வரரே என்று பாட்டிக்கு அன்று பூர்ணமாய் மெய்பிக்கப்பட்டு விட்டது!

 

நீயே தான் நான்!

பக்தை செல்லம்மா பாட்டியைப்போல், ஸ்ரீஸ்ரீஸ்ரீ மாஹாபெரியவாளை பரமேஸ்வர அவதாரமாக பூர்ண ஆனந்தத்துடன் அனுபவிக்கும் அனுக்ரஹம் பெற்றவர்களுள் பிரம்ம ஸ்ரீ பிரதோஷம் மாமா ஒரு விசேஷ அம்சமுடன் குறிப்பிடப்பட வேண்டியவராகிறார்.

ஸ்ரீ மஹாபெரியவா இந்த பக்தரை வலிய ஆட்கொள்வதுபோல் தரிசனம் எனும் மாதவ பேரின்பத்தை நல்கி, அப்படிப்பட்ட புண்ணிய சுப நேரங்களில் வைத்தீஸ்வரராய், ஜம்புகேஸ்வரராய், பிக்ஷாண்டவராய் தென்னாடுடைய கோயில் உறை ஈஸ்வர ஸ்வரூபத்தை எல்லாம் பக்தருக்கு தன் தரிசனத்தின்போது அருளி, உடல், பொருள், ஆன்மா அனைத்திலும் தன்னையே சிந்திக்க வைத்து எப்போதும் ஒரு அதீத பக்தியால் ‘தன்னிடம் மீளா’ அடிமை என்ற தாழ்மை ஏற்படுத்தி அந்த தாழ்மையும், சரணாகதமும் தந்த அசஞ்சல நிலைக்கு 64-ம் நாயன்மார் என்ற பெரும் பதவியையும் தந்து தடுதாட் கொண்டுள்ளார்.

இப்பேற்பட்ட ஈஸ்வரநேயத்திற்கு நாம் எவ்வகையில் ஈடுசெய்வது என்ற மன உறுத்தலோடு பிரதோஷம் மாமா ஏங்கிக் கொண்டிருந்த போது உன்னுள் இப்படி ஆதங்கப்பட்டு ஏங்குவதும் நானே என்றதொரு அத்வைத நிலையை ஏற்படுத்துவது போல் ஒருநாள் விடியற் காலையில் ‘தந்தது உன் தன்னை, கொண்டது என் தன்னை’ என்ற அற்புத மாணிக்கவாசகத்தை ஸ்ரீ பெரியவா சொல்ல, அதையே எதிரில் நின்ற பிரதோஷ பக்தரையும் சொல்லச் சொல்லி இதே போல் சில மணி நேரமாக பரஸ்பரமாக ‘உன்னுள் நான் என்னுள் நீ’ என்பதை பக்தருக்கு ஊர்ஜிதமாக்கி அருளிய  பெரிய அற்புதம் நிகழ்ந்தது.

இப்பேற்பட்ட பேரின்ப நிலையை வேறு எந்த பக்தர் பெற்றிருக்கக்கூடுமோ தெரியவில்லை. பக்தர் எப்படியெல்லாம் அதீதமாக பக்தி செய்தாரோ அதே அதீத நிலக்கு தன் அனுக்ரஹமும் இருந்ததாக வேண்டுமென்ற போட்டி மனப்பான்மையோ என்று இந்த ஈஸ்வர பெருங்கருணை சந்தேகிக்கச் செய்கிறது.

அன்று முதல் தன்னுள் இயக்குபவர் சாக்ஷாத் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளே என்பது பல அதிசய நிகழ்ச்சிகளால் இந்த பிரதோஷ சிவன் நாயன்மாருக்கு வெளிப்படையாகத் தெரிந்தது.

ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளுக்கு ஓரிக்கையில் ஒரு பெருங்கோயில் காணவேண்டும் என்ற ஸ்புரிப்பை இந்த எளிய பக்தருக்கு ஏற்படுத்தியதும் பக்தருக்குள் இருந்தே தெய்வம் தந்திட்ட  திட்டம் தான். நிலம் தேர்வு செய்து அனுக்ரஹம் வேண்டி சென்றபோது அதே நிலத்தின் அத்தனை அம்சங்களையும் கூறி அங்கே தான் வந்து உறைவதாக சொப்பனம் கண்டதாக பிரம்மஞானி அருளினார்.

ஓய்வுபெற்ற ரயில்வே அதிகாரிக்கான ஓய்வூதியம் என்ற சொற்ப நிதி நிலையில் ஸ்ரீ பெரியவாளின் அருள்நிதியும், தன் அதீத பக்தி நிதியும் மட்டுமே கோயிலுக்கான பெரும் நிலத்தை வாங்க பக்தருக்கு உதவிட்டது.

நிலம் வாங்கப்பட்டு நாட்கள் ஓடின. எந்த முன்னேற்றமும் இல்லாமலிருக்கிறதே என்று பக்தருக்கு தாபம் எழுந்தது.

பக்தர் கண்துஞ்சாமல் கவலை கொண்டார். கோடிக் கணக்கில் பெருங்கோயிலுக்கான மதிப்பீடு போடப்பட்டது. ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளைக் கொண்டாடும் எந்த வைபவங்களானாலும் அவைகளை மதிப்பிட முடியாத உயரத்தில் தான் கொண்டாடி மகிழும் குணம் கொண்டவர் இவர். அப்படியிருக்க பிரானுக்கு ஓரிக்கையில் அமையப்போகும் கோயிலும் பிரம்மாண்டமாகத்தான் அமைய வேண்டுமென்று அவர் ஆதங்கப்பட்டார்.

கோடிக்கணக்கில் நிதி தேவைப்படும் நிலையில் நிலம் வாங்கப்பட்டதோடு இப்படி திட்டம் நின்றுவிட்டதே இதை யாரிடம் முறையிடுவது என மாமா வருத்தமுற்றார்.

தன்னைத் தந்து, என்னை எடுத்துக்கொண்ட ஈஸ்வரர் அசரீரியாய் மறுமுறை ஏதாவது உணர்த்துவாரா என்ற ஏக்கத்தோடு தெய்வத்தின் குரல் நாலாம் பாகத்தை எடுத்து மனதில் ஸ்ரீ பெரியவாளைத் தியானித்து ஒரு பக்கத்தை விரித்தார்.

அப்பக்கத்தில் இருப்பதை தெய்வ வாக்காகக் கொள்ள நினைத்து அதில் கண்டுள்ளதை படித்தபோது பக்தருக்கு எல்லையிலா ஆனந்தம் பெருகிற்று.

‘காளிதாசனும் அம்பிகையும்’ என்ற தலைப்பின் கீழ் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் அருள்வாக்காய் அந்த தெய்வத்தின் குரல் காணப்பட்டது.

போஜராஜன் தன்னிடம் இருந்த மூன்று கவிஞருக்குள் யாருடைய கவி உயர்ந்தது என்ற தரம் பிரிக்க இயலாமல் அம்பிகையின் சன்னிதானத்திற்கு அவர்களை அழைத்துப் போனார்.

காளிதாசன், பவபூதி, தண்டி எனும் மூவரை ராஜா அம்பிகையின் முன் நிறுத்த அசரீரியாக அம்பாள், “தண்டியை கவி என்று சொல்லலாம். தண்டியிடம் பாண்டித்தியத்தை விட கவிதாரஸம்  அதிகம் என்றும் பவபூதியிடம் கவிதாரசத்தை விட அறிவின் கனம் அதிகம் என்று பொருள்பட இருவருக்கும் ‘ரேங்க்’ கொடுத்துவிட்டு காளிதாசனை ஏனோ மறந்துவிட்டாளாம்.

காளிதாசனுக்கு கோபம் பொத்துக்கொண்டு வர “அப்படின்னா நான் யாருடீ” என்று கேட்டு விட்டான். யாருடீ என்று காளிதாசன் சீறியதில் அம்பிகைக்கு கோபம் வரவில்லை. மாறாக

“த்வமே வாஹம்………..த்வமே வாஹம்
த்வமே வாஹம் ந ஸம்சய

என்றாள் சாந்தமாக. அதாவது நீ நானே தான்……….நீ நானே தான்…..நீ நானே தான் என்று இதில் சந்தேகமேயில்லை என்பதற்காக மூன்று தரம் சொல்லிவிட்டாள்.

“நீ நானே தான்” அல்லது “நீயே தான் நான்” என்று சொல்ல வேண்டும்.

தெய்வத்தின் குரல் புத்தகத்தில் தான் தியானித்து எடுத்த பக்கத்தில் இருந்த மேற்கண்ட பகுதியை படித்ததும் பிரம்மஸ்ரீ மாமாவின் மனநிலை எப்படியொரு ஆனந்த நிலை பெற்றிருக்கும் என்பது எண்ணிப் பார்க்க இயலா ஒன்று.

இப்படி ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவாளின் பெருங் கருணை திரும்ப, திரும்ப ‘உனக்குள் நான் எனக்குள் நீ’ என்ற பரவச நிலையை அனுக்ரஹித்து ஆட்கொண்டருளியுள்ளது. இப்பேற்பட்ட பேரின்ப நிலையில் பெரும் தவம் கொண்டு இயங்கியதனால் ஓரிக்கையில் தன்னுள் இயக்கும் மாதவமுனிவருக்கு பெரும் பொருட் செலவில் ஒரு பெருங்கோயிலினைக் காணும் மாபெரும் பாக்யம் பிரம்மஸ்ரீ பிரதோஷம் மாமா என்ற புண்ணிய பிறவிக்கு உரித்தாகிவிட்டது.

இந்த உயரியபக்தரின் வழிகாட்டுதலான ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவாளிடம் பரிபூர்ண சரணாகத பக்தி எனும் பாதையில் நாமும் சென்று அந்த காருண்யத்தெய்வத்தின் பேரருளைப் பெற்று சகல சௌபாக்யங்களையும், சர்வ மங்களங்களையும் பெற்று நல்வாழ்வு வாழ்வோமாக.

—  கருணை தொடர்ந்து பெருகும்.

(பாடுவார் பசிதீர்ப்பாய் பரவுவார் பிணிகளைவாய்) — சுந்தரமூர்த்தி சுவாமிகள் தேவாரம்)

____________________________________________________________________________________________________________________________

Shri Shri Shri Mahaperiyavaal Mahimai (25-5-2013)

I am Adi Shankara!

Shri Mahaperiyava, due to His kindness, to bless all the people, like a Sugabrahma Rishi Saint, took avatar as Shri Shri Shri Mahaperiyava, walked this earth and blessed us.

Even though Periyava is Sarveshwaran Himself, He has tried to conceal His real identity multiple times with great difficulty. But He has also revealed His true form multiple times to some devotees as a blessings for their true devotion.

Periyava has revealed Himself as Sarveshwaran and also as Shri Adi Shankara coming back to be the 68th Peetathipathi of the Srimatam that He had established and blessing a large number of devotees with His kindness. These were particularly revealed to the staunch believers of Periyava like Chellamma paati and Shri Pradosham Mama.  The experiences of those devotees are extraordinary.

Chellamma paati has written about her experience that happened at the Thriveni Sangam at Allahabad. When Periyava set His foot at the river at Thriveni Sangam, the purity of the river became more special. There was a large number of devotees, including Chellamma paati, who had come to witness Periyava bathing at Thriveni Sangam.

The river was also joyously overflowing and ready to bathe Sarveshwaran. The devotees who were witnessing this event suddenly were terrified to see a crocodile come out of the river. They saw that the crocodile was very close to Periyava and everyone at the banks of the river started requesting Periyava to come to the river banks.

But Periyava stood there calmly without any physical or mental disturbance. He stood there calmly to show that the crocodile also nothing different and same as other things like advaitha. But the devotees were unable to enjoy that and were anxiously seeing what was going to happen.

The crocodile moved away silently as if it had just come for Sarveshwaran’s darshan. On that day, Periyava showed that He was like parabrahmam, who does not get disturbed by external things. Chellamma paati and the other devotees were relieved on seeing the crocodile go away. Paati was interested to find out how and why Periyava reacted for that situation.

Luckily, Paati got a chance to ask about this to Periyava. Sarveshwaran smiled on hearing Paati’s question. Periyava then started to say, “Do you know Bagavathpadha was caught by a crocodile before He took sanyasi.” He continued telling the story of how Bagavathpadha requested his mother Shri Aryambal to allow Him to take sanyasam and how once the mother agreed, the crocodile left Shri Adi Shankara.

Everybody there including Paati knew this story of Adi Shankara and they were waiting how that was linked to whatever happened today.  Periyava then started to describe the divine secret in a subtle way and Chellamma paati was blessed to hear that.

Periyava continued, “That event happened before 2000 years and a Gandharva had come as the crocodile. He was only able to have darshan of Bagavathpadha as a young boy. Maybe he will be freed only after he has the darshan of Bagavathpadha as Sanyasi. And maybe that is the reason he has come back after 2000 years.” Periyava said this in a subtle manner and distracted everyone from it by smiling. Paati had goosebumps on hearing this.

Paati was extremely happy to see Periyava as Shri Adi Shankara before her. She also felt extremely blessed on hearing this directly from Periyava Himself. Paati might also have thought why Periyava should undergo lot of difficulties to bless all of us.

All of the divine avatars have occurred with an intention of killing asuras. But we do not know if there exist any similar asuras in this kali age. But in these times, there are asuras inside everyone that makes us forget our Sanathana dharma and take the wrong path. But Sarveshwaran due to His extreme kindness has taken the divine avatar to bless us all and guide us in leading a good life. Paati realized that it is Periyava who showers kindness just like Sri Adi Shankara.


You are me

Shri Pradosham Mama is another devotee like Chellamma paati, who was blessed with the true form of Periyava. Periyava has blessed Pradosham Mama by appearing as various forms of Sarveshwaran like Vaitheeswaran, Jambukeswarar, and Bhikshandavar. He has also helped Mama think about Periyava all the time and also gave Mama the greatest title of 64th Nayanmar.

When Pradosham Mama was confused as how he could compensate for all of Periyava’s kindness, one day in his dreams, Periyava came and told the line from the great Tamil poet and Nayanmar Manickavasagar, “You gave yourself to me and you took me in you.” Periyava also made Mama say these lines and made him realize that truth.

We do not know who else would have been blessed like this. It was as if the devotee and Sarveshwaran were fighting to see if His blessings equaled the bhakti of the devotee. After that, Pradosham Mama realized that it was Periyava who was been helping and guiding him throughout. It was Periyava who wanted to build the temple at Orikkai through Pradosham Mama. Also it was Periyava who helped with the land, plans for the temple through a dream.

With only a meager pension as a retired railway officer, it was Periyava’s blessings and Mama’s devotion that helped in buying the land. It was a long time after the purchase of the land and there were no other progress. Mama was sleepless and started to worry about this. The estimate for the temple went into crores. Mama who celebrates Periyava at the highest place wanted the temple also to be grand. As they needed a lot of money to start building temple, Mama was saddened by the fact that the work has not started yet. He was waiting for Periyava to come in his dreams and guide him. With this thought in his mind, he opened the book four of Deivathin Kural. He wanted to take the words in that particular page as Periyava’s advice. He was surprised and happy to read what was in the page.

“Kalidas and Ambigai (Devi)” was the chapter in that particular page. King Bhojarajan was confused who among the three poets in his court was the best. So he takes all the poets to the Devi temple. As the king asked the three poets Kalidas, Bhavabudhi and Dhandi, Devi’s voice started to tell, “Dhandi can be called as a poet. His writings has imagination/expressions but not good content/knowledge, and Bhavabudhi has the knowledge but not imagination/expression.” She ranked them both but totally forgot about Kalidas.

Kalidas was very angry with Devi and asked “Then whom I” in a not so respectful way. Devi was not angry even though Kalidas had asked the question in a not so respectful way and then said,

“Twame vaaham.. Twame vaaham

Twame vaaham na samsaya”

These lines means, “You are me, you are me, there is no doubt that you are me.” Devi has confirmed this saying it three times. We cannot imagine the happiness of Pradosham Mama on seeing these lines in the page he had prayed and opened.

Periyava’s kindness repeatedly reminded Pradosham Mama of this truth multiple times. Due to Mama’s penance Periyava’s blessings, Mama was able to build the majestic and grand temple at Orikkai.

It is true that if we surrender at the feet of Periyava we will be blessed with health, wealth, peace and happiness.

Grace will continues to grow.

(Appease the hunger of those who sing, Cure the disease of those who spread your name – Sundaramurthy Swamigal Devaram)


 



Categories: Devotee Experiences

Tags:

1 reply

  1. JAYA JAYA SANKARA HARA HARA SANKARA. Janakiraman. Nagapattinam

What do you think?

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: