இன்னொருத்தர் சமைத்துப் போடுகிறபோது, நாக்கைத் தீட்டி வைத்துக் கொண்டு, ‘இது உப்பு, அது உறைப்பு’ என்று நோணாவட்டம் சொல்லத் தோன்றுகிறது. இதில் நமக்கும் அதிருப்தி; பண்ணினவர்களுக்கும் மனக்கிலேசம். நாமே செய்து கொண்டால் அந்தச் சமையல் எப்படி இருந்தாலும் தேவாம்ருதமாகத் தோன்றும். சாப்பிடுகிற வேளையில் ‘எரி பிரி’ என்றில்லாமல் ஸந்தோஷமாக, திருப்தியாக இருக்கும். ஆஹாரம் இதனாலேயே உடம்பில் ஒட்டி சித்தத்திலும் நல்லதைப் பண்ணும். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்
When someone else does the cooking, one tends complain about the food being salty or spicy. We are disatisfied with the food and the person who cooked it is also hurt by our comments. If we cook for ourselves (Swayam Paakam) it will taste like Amrut even if it is not good. Instead of feeling discontented while eating, we will feel happy and satisfied. The food will nourish our body and mind because of this. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal
Categories: Deivathin Kural, Golden Quotes
Leave a Reply