58. Sri Sankara Charitham by Maha Periyava – Benefits of Good karma in practical life


Jaya Jaya Sankara Hara Hara Sankara – Doing nothing (words, deeds, thoughts, actions) is the ultimate state. However is it possible now to achieve that state in the practical life now we are in? Sri Periyava explains what to do.

Many Jaya Jaya Sankara to our sathsang volunteers, Shri ST Ravi kumar for the great translation and Smt. Sowmya Murali for the glorious sketch & audio. Rama Rama

நடைமுறையில் நற்கர்மத்தின் பயன்

இதையே திருப்பிவைத்தும் கேட்கலாம்: “கர்மாப்படி, — ஜன்மாந்தரக் கடன் என்றுகூடச் சொல்வதுண்டே, அப்படி — நாம் ஒருத்தனுக்கு ஒரு உபகாரம் பண்ணியே அதனால் அவனுடைய கஷ்டம் நிவ்ருத்தியாகவேண்டும் என்றும் ஏன் இருக்கக்கூடாது? இந்த லோகத்தில் நம் ஒவ்வொருவருக்கும் பிறத்தியாரால் எத்தனையோ உபகாரம் தேவையாகத்தான் இருக்கிறது. யாருடைய ஒத்தாசையும் இல்லாமல் எவனொருத்தனும் வாழ்க்கை நடத்திவிட முடியாது என்றே பார்க்கிறோம். பல பேர் செய்துகொள்ளும் பரஸ்பர உதவியால்தான் நம் ஒவ்வொருவருடைய வாழ்க்கையும் நடந்துகொண்டு போகிறது. சிலது ஃபெயில் ஆகிறது என்றாலும் பலது ஸரியாக நிறைவேறவும் செய்வதால்தான் லோக வாழ்க்கை நடந்துகொண்டிருக்கிறது. அதனால் ஒரே ‘பெஸ்ஸிமிஸ’மாக (நல்லதே நடக்காது என்ற அழுமூஞ்சி ஸித்தாந்தமாக), அதோடு கொஞ்சங்கூட அன்போ, தயையோ இல்லாமல், ‘யார் வேணா என்ன வேணா கஷ்டப்பட்டுப் போகட்டும்! நமக்கென்ன ஆச்சுன்னு சும்மாயிரு’ என்றால் எப்படி? என்று கேட்கலாம்.

இதுவும் நியாயந்தான். அதோடுகூட, நாம் உள்ள நடைமுறை உலகத்தில், நடைமுறையில் நமக்குள்ள மனநிலையில், நாம் கெட்ட கார்யங்களில் போகாமலிருப்பதற்கு வழி ஏதாவது நல்ல கார்யங்களில் ஈடுபட்டுக்கொண்டேயிருப்பதுதான். எந்த நல்ல கார்யத்திலும் கெட்டது வரலாமானாலும், சாஸ்த்ரப்படியும், பெரியவர்கள் வழி காட்டியுள்ளபடியும், நம்முடைய மனஸ்ஸாக்ஷிக்குக் கொஞ்சம்கூட உறுத்தாதபடியும், ‘மொத்தத்தில் நல்லது’ என்று தெரிகிற கார்யங்களில் — கார்யத்தில் கெடுதல் ஏதாவது சேர்ந்தாலும்கூட, நம்முடைய உத்தேசம் கெட்டதேயில்லாமல் நல்லதாக இருக்கிற கார்யங்களில்— ஈடுபட்டு ஈடுபட்டுத்தான் பழைய கெட்ட கர்மா பாக்கிகளைத் தீர்த்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. இப்படிப் பணிகள் செய்வதில் வாஸ்தவமாகவே நாம் பிறத்தியாருக்கும், பிறத்தியார் நமக்கும் அநேக நல்லது பண்ணவும் முடியுந்தான். ஒத்துக்கொள்கிறேன் [சிரித்தபடி] ஒத்துக்கொள்வதோடு இத்தனை நாழி சொன்ன மாதிரி, சும்மாயிருந்துவிடமாட்டேன்! உங்களையும் சும்மாயிருக்க விடமாட்டேன்! ‘இதைப் பண்ணுங்கோ, அதைப் பண்ணுங்கோ!’ என்று ஓயாமல் உங்களுக்கு ஏதாவது கார்யத்தைக் கொடுத்து உபத்ரவம் பண்ணிக்கொண்டேதான் இருப்பேன்! ‘ஒரு நல்லதும் பண்ணவேண்டியதில்லை; சும்மாயிருக்கிறதுதான் பெரிய உபகாரம்’ என்று நான் விஸ்தாரம் பண்ணிக் கொண்டு போனதைப் பார்த்துவிட்டு யாராவது, ‘அப்பாடா! இனிமேலே இவர் வேத ரக்ஷணம், பிடி அரிசி, ஆத்திக்கீரை*, கும்பாபிஷேகம், குளம் வெட்டுவது என்று எதையாவது சொல்லி ஹிம்ஸை பண்ணமாட்டார் என்று நினைத்திருந்தால் நன்றாக ஏமாந்துதான் போவீர்கள்! இனி மேலேயும் இப்படிச் சொல்லி, இன்னும் புதிசு புதிசாக ஏதாவது சேர்த்துச் சொல்லி, உபத்ரவம் பண்ணிக்கொண்டு தானிருப்பேன்!

ஒன்றும் செய்யாமல், சொல்லாமல் இருக்கிற உபகாரத்தைச் சொல்லவே அவதாரம் பண்ணினவரும், ‘சாஸ்த்ரப் படி பண்ணு, பரோபகாரம் பண்ணு; பக்தி பண்ணு; பஞ்சாயதன பூஜை பண்ணு; ச்ரவண – மனன – நிதித்யாஸனம் பண்ணு’ என்றும் அநேகம் ‘பண்ணு’களைச் சொல்லிக் கொண்டேயிருந்தவர்தான்.

* பசுக்களுக்கென்று அகத்தி பயிரிடும் திட்டத்தை ஸ்ரீ சரணர்கள் வலியுறுத்துவது வழக்கம்.

_____________________________________________________________________________________________________________________________

Benefits of Good karma in practical life

This can be countered in reverse also.  Why could it not be that as per karma, – also referred to as lifetime debt, we may have to help someone, with which only, his difficulties would get solved?  Everyone of us in this world needs various help from others.  We observe that it is not possible for anyone to lead a life without someone’s help.  Each and every one of our lives run on the mutual help rendered by many people. While some may fail, life in this world continues because many get fulfilled properly.  Therefore, one could question how is it to be completely pessimistic (the cry baby philosophy that nothing desirable would happen) and remain totally uncaring and unperturbed about others whatever be their pitiable state.

This is also reasonable. Moreover, in this practical world, with our mental state, the solution to refrain from getting into evil things is to be continuously engaged in good things.  Although there could be some element of harm even in any good deed, as per our religious doctrines and also guidance given by elders, we need to be engaged in good deeds which do not prick our conscience even a little bit and considered as generally good, so long as our intentions are not at all bad but good, even if there is some element of harm in action, so as to wipe out the balances of bad karma.  Doing things this way, it is really possible to do many good to others and they to us.  I accept that (laughing), not only accepting, would also not remain not doing anything, as we have been talking about nor would allow you to remain idle.  I will continue to trouble, assigning some job or the other, continuously asking you to do this and that!  Seeing my elaboration that there is no need to do any help, being idle is the best help etc., if someone thought that, Bah, I would not trouble asking people to protect the Vedas, Pidi arisi scheme ( one hand-full rice), (offer) Agathikeerai* (Sesbania grandi flora), consecration (of temples), water tanks, etc., you will be disappointed very much.  I will continue to be troubling, elaborating in the same vein and also adding new and new things.

The person who took the incarnation to preach not to do anything, not to say anything, was also the one who was advising everyone to do so many ‘dos’, like do as per scriptures, render help to others, do bakthi, do five-fold poojas, do the profound and repeat meditation by listening and thinking about Bhagawan, etc.

*Sri Charanar use to emphasise on the scheme of cultivating Agathikeerai (a type of green) to feed the cows.

_______________________________________________________________________________________________________________________________

Audio



Categories: Deivathin Kural

Tags: ,

What do you think?

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: