பதார்த்த சுத்தியும், சமைக்கும்போது பகவத் ஸ்மரணத்தால் உண்டான சுத்தியும் சேர்ந்த ஆஹாரத்தை அப்புறம் பகவானுக்கு நைவேத்யம் பண்ணி இன்னம் சுத்தமானதாக ஆக்க வேண்டும். கடைசியில், சாப்பிடும் போது “கோவிந்த, கோவிந்த” என்று சொல்லிக் கொண்டே சாப்பிடணும். “மௌனேன போக்தவ்யம்”- பேசாமலே சாப்பிட வேண்டும் என்பது விதி. ‘பேசாமல்’ என்றால் ‘அதைப்போடு இதைப்போடு’ என்காமல், எது இலையில் விழுகிறதோ அதைச் சாப்பிட வேண்டுமென்று அர்த்தம். மனஸுக்குள் கோவிந்த நாமோச்சாரணத்துடன் இப்படி போஜனம் பண்ண வேண்டும். கோவிந்த ரஸமாக உள்ளே போகிற அன்னத்தை, அங்கே ஜாடராக்னியாக இருக்கும் அவனே ஜீர்ணித்து தேஹ புஷ்டியோடு சித்த சுத்தியும் அருள்வான். கீதையில் இப்படித்தான் சொல்லியிருக்கிறான். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்
The purity of food grains gets merged with the purity of chanting Bhagawan Nama while cooking. This food should be offered to Bhagawan, thereby making it even more pure. Finally, while eating, one should chant ‘Govinda Govinda’ and eat the food. It is a rule that food should be eaten silently – ‘Mounena Bhoktavyam’ (मौनेन भोक्तव्यम्). Here ‘silently’ means one should not keep demanding and should eat only what is offered. Food should be eaten with ‘Govinda’ Nama in mind. The food that goes inside as Govinda Rasam (the essence of Govinda) will be digested by Him (Bhagawan) who is present there as ‘Jataragni’ – the Digestive Fire (जठराग्नि), through which He will give us the energy and the mental purity. This is what Bhagawan has told in Bhagawad Gita. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal
Categories: Deivathin Kural, Golden Quotes
Leave a Reply