Jaya Jaya Sankara Hara Hara Sankara – What will we get when we worship Ambal? Sri Periyava’s phenomenal explanation below.
Many Jaya Jaya Sankara to our sathsang seva volunteer Shri. S. Hemalatha Sukumaran for the translation. Rama Rama
அம்பாளை உபாஸிப்பதன் பலன்
அம்பாளை உபாஸிப்பதே ஜன்மா எடுத்ததன் பெரிய பலன். அன்பு மயமான அம்பிகையைத் தியானிப்பதைவிடப் பேரானந்தம் எதுவும் இல்லை. பெரிய சித்தாந்தங்கள் மதங்கள் எல்லாம் எத்தனையோ இருக்கின்றன. இவை எல்லாவற்றுக்கும் முடிவாகக் கிடைக்கிற பெரிய பலன் அம்பாளைத் தியானிப்பதால் லகுவாகக் கிட்டிவிடுகிறது. “அம்மா! நான் எத்தனையோ தோஷம் உள்ளவன் என்றாலும் உன்னை நம்பி விட்டேன். நீ கடாக்ஷித்து விட்டால் எத்தனை தோஷமானாலும் தூர ஓடிவிடும். நான் எப்படி இருக்க வேண்டுமோ அந்த மாதிரியாக இருக்கும்படியாக நீயே பண்ணம்மா” என்று அவளிடம் நம்மை ஓயாமல் ஒப்புக் கொடுத்துக் கொண்டிருந்தாலே போதும் – அதைவிடப் பெரிய மதமோ, சித்தாந்தமோ, அநுஷ்டானமோ இல்லை. எல்லாம் அவள் சித்தப்படி ஆகட்டும் என்று விட்டு விட்டு, நாம் பஞ்சு மாதிரி மனசில் எந்த கனமும் இல்லாமல் லேசாகிவிட்டால் அதைவிட பேரானந்தம் இல்லை.
அம்பாளை உபாஸிப்பதற்கு வேறு பலன் எதுவும் வேண்டாம். அதுவே அதற்குப் பலன். ஆனாலும், இந்த லோகத்தின் மாயையில் நாம் எல்லோரும் ஒன்றாகச் சிக்கிக் கொண்டிருப்பதால், ‘நான்’ என்பதைவிட்டு, அவளை அவளுக்காகவே உபாஸிக்கிற ஆனந்தம் நமக்கு ஆரம்பதசையில் புரியமாட்டேன் என்கிறது. நமக்கு என்று எதெதையோ எதிர்பார்த்து, அதை எல்லாம் அவள் பூர்த்தி செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டு, அதற்காக அவளை உபாஸிக்கத் தொடங்குகிறோம். இந்த நிலையில் அவளும்கூட நம்மை விட்டுப்பிடிக்கிற மாதிரி, நம் பிரார்த்தனைகளை நிறைவேற்றி வைக்கிறாள். தர்மத்துக்கு விரோதமாக இல்லாத வரையில் நாம் செய்கிற பிரார்த்தனைக்குச் செவிசாய்க்கிறாள்.
மநுஷ்ய ஸ்வபாவம் ஆசார்யாளுக்கு நன்றாகத் தெரியும். அம்பாள் உபாஸனையால் ஜனன நிவிருத்தி கிடைக்கும், மோக்ஷம் கிடைக்கும் என்று சொன்னால் எடுத்த எடுப்பில் யாரும் அதில் ஈடுபடமாட்டார்கள் என்பது ஆசார்யாளுக்குத் தெரியும். அதனால் அம்பாளை உபாஸிப்பதன் பலன் இன்னின்ன என்று ‘ஸெளந்தரிய லஹரி’யில் சொல்கிறபோது, முதலில் படிப்பு, செல்வம், அழகு முதலியன கிடைக்கும் என்கிறார்.
‘ஸரஸ்வத்யா லக்ஷ்ம்யா’ என்று ஆரம்பிக்கிற சுலோகத்தில் அம்பிகையை ஆராதிப்பதால் கிடைக்கிற பலன்களை வரிசையாகச் சொல்கிறார்.
இதில் விசேஷம் என்னவென்றால், சாதாரணமாக ஒவ்வொரு ஸ்துதியின் முடிவிலும் கவி, ‘இந்த ஸ்தோத்திரத்தைச் சொல்வதால் இப்படிப்பட்ட பலன்கள் கிடைக்கும் என்று சொல்வது ஒரு மரபு – இதை ‘பலச்ருதி’ என்பார்கள். அதாவது அந்த ஸ்தோத்திரத்தின் சக்தியாலேயே அந்தப் பலன்கள் கிடைக்கும் என்று தொனிக்கிற மாதிரி இருக்கும். ‘இதைப்பாராயணம் செய்வதால்’ ‘இதையே படிப்பதால்’ என்று திரும்பத் திரும்ப ஸ்தோத்திர கர்த்தா நூலைச் சிலாகித்துச் சொல்வர். ஆனால் துளிக்கூட அகம்பாவமேமில்லாத ஆசார்யாளோ, ‘ஸெளந்தர்ய லஹரி பாராயணத்துக்கு இது பலன்’ என்று சொல்லாமல், “அம்மா உன்னைப் பூஜிப்பவனுக்கு நீ இப்படியாகப்பட்ட அநுக்கிரஹங்களைச் செய்கிறாய்” என்றே சொல்கிறார்.
முதல் பலனாக ஸரஸ்வதீ கடாக்ஷம் கிடைக்கும் என்கிறார். அதாவது நல்ல கல்வி, உண்மையான கல்வியின் பயனாக நல்ல குணம் கிடைக்கும் என்கிறார். பிறகு லக்ஷ்மீ கடாக்ஷம் கிடைக்கும் என்கிறார். அதாவது நிறைய சம்பத்து கிடைக்கும் என்கிறார்.
பொதுவாக யாரும் பணத்தை விரும்புகிற மாதிரி குணத்தை விரும்பி ப்ரார்த்திப்பதில்லை! ஆனால் குணம் இல்லாத இடத்தில் பணம் இருந்து என்ன பிரயோஜனம்? நாம் பணத்தை விரும்பியே உபாஸித்தாலும்கூட, அம்பாளே, ‘இந்தப் பிள்ளை அசட்டுத்தனமாக பிரார்த்தனை பண்ணுகிறது; விவேகம் ஏற்படுவதற்கு முன்பு அர்த்தத்தைக் (பொருளை, பணத்தைக்) கொடுத்தால் அது அனர்த்தமே ஆகும். எவ்வளவுக்கெவ்வளவு பணம் தருகிறோமோ அத்தனைக்கத்தனை பாபத்தையே விலைகொடுத்து வாங்கிக் கொள்வான். எனவே பணத்தை எப்படி தர்ம மார்க்கத்தில் பிரயோஜனப்படுத்துவது என்கிற விவேகத்தை முதலில் தந்து, பிறகு தனத்தைத் தரலாம்’ என்று எண்ணுகிறாள். குழந்தை பக்ஷணம் கேட்டால் அதைச் செய்து கொடுக்கிற தாயார் பிற்பாடு அதனால் கெடுதல் ஏற்படாமல் விளக்கெண்ணெய் தருகிறாள். ஸரஸ்வதீ கடாக்ஷத்தைத் தந்து பிறகு லக்ஷ்மீ கடாக்ஷத்தைத் தருகிறாள்.
தைத்திரீயோபநிஷத்திலும் இப்படியேதான், முதலில், “மேதை (நல்ல புத்தி) யைக் கொடு” என்று சொல்லி, அப்புறம் “ஸ்ரீயை (செல்வதை)க் கொடு” என்று சொல்லியிருக்கிறது. இதற்கு ஸ்ரீ ஆசார்யாள் பாஷ்யம் செய்யும்போது, “மேதையில்லாதவனுக்கு ஸ்ரீயைத் தந்தால் அனர்த்தம்தான் உண்டாகும்” என்கிறார். ‘பஜகோவிந்த’த்திலும் ‘அர்த்தம் அனர்த்தம்’ என்கிறார்.
அம்பாளை உபாஸிப்பவர்கள் தனியாக லக்ஷ்மி, ஸரஸ்வதி இருவரையும் உபாஸிக்க வேண்டும் என்பதில்லை. அவர்கள் இரண்டு பேரும் இவளுக்கு இரண்டு பக்கத்திலும் சாமரம் வீசிக் கொண்டிருக்கிறார்கள். இப்படியே லலிதா ஸஹஸ்ரநாமத்தில் சொல்லியிருக்கிறது. (ஸ சாமர ரமாவாணீ ஸவ்ய தக்ஷிண ஸேவிதா). சகல சக்திக்கும் ஆதாரமான பராசக்தியை உபாஸித்தால் இவளே ஸரஸ்வதியையும், லக்ஷ்மியையும் கடாக்ஷிக்கச் செய்கிறாள். காமாக்ஷிக்கு ஸரஸ்வதியும் லக்ஷ்மியும் இரண்டு கண்கள். ‘க’ என்று பிரம்மாவுக்குப் பெயர் – ‘சிவ’ பத்தினி சிவா என்பதுபோல் ‘க’வின் பத்தினியான ஸரஸ்வதிதான் ‘கா’. ‘மா’ என்றால் மஹாலக்ஷ்மி. ‘மா’- தவன் என்றால் லக்ஷ்மிபதி. ‘கா’வையும் ‘மா’வையும் தன் அக்ஷங்களாக (கண்களாகக்) கொண்டவள் எவளோ அவளே “காமாக்ஷி”.
ஸரஸ்வதி கடாக்ஷம், லக்ஷ்மி கடாக்ஷம் இரண்டும் அம்பாள் அநுக்கிரஹத்தால் கிடைக்கும் என்றேன். இந்த இரண்டையும் பற்றி மநுஷ்ய சுபாவம் ரொம்பவும் விசித்திரமாக இருக்கிறது. எல்லோருக்கும் தங்களுக்கு ரொம்பவும் ஸரஸ்வதி கடாக்ஷம், அதாவது புத்திசாலித்தனம் இருப்பதாகவே நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் – தங்களை மஹா புத்திசாலிகளாகவே வெளியில் காட்டிக் கொள்ளப் பிரியப்படுகிறார்கள். ஆனால் நல்ல புத்தி வேண்டும் என்று அதற்காகத் தாபத்தோடு யாரும் பிரார்த்திப்பதாகத் தெரியவில்லை. பொதுவாகப் புத்திசாலித்தனம் என்பது சாமர்த்தியம் என்றுதான் நினைக்கப்படுகிறது. ஞானமும் விவேகமும்தான் உண்மையான புத்திமானின் லக்ஷணங்கள். இவற்றுக்கு யாரும் ஆசைப்படுவதில்லை. நமக்கு நிறைய சாமர்த்தியமும் சாதுர்யமும் இருக்கின்றன. அதாவது ‘யாரையும் ஏமாற்றி விடலாம்’ என்று அவரவரும் சந்தோஷப்பட்டுக் கொண்டு, இந்த ‘புத்திசாலித்தன’த்தோடு நின்றுவிடுகிறோம். ஆனால் லக்ஷ்மி கடாக்ஷம் மட்டும் எவ்வளவு இருந்தாலும் நமக்குப் போதமாட்டேன் என்கிறது. மண்டுவாக இருந்தாலும்கூட தன்னைப் புத்திசாலியாகக் காட்டிக் கொள்வதற்கு நேர் மாறாக, நமக்கு எத்தனை சம்பத்து இருந்தாலும் அது வெளியில் தெரியக் கூடாது என்று ஏழை வேஷம்தான் போடுகிறோம். ஒருத்தனைப்பற்றி யாராவது ‘எத்தனை புத்திசாலி’ என்று பேசினால் சந்தோஷப்படுகிறான். ஆனால் ஒருத்தன் பாங்கில் லட்ச லட்சமாகப் பணம் போட்டிருக்கிறான் என்று யாராவது சொன்னால், அவனுக்குக் கோபம்தான் வருகிறது. தங்களுக்கு இருக்கிற செல்வம் போதாது என்று நினைப்பதால்தான் இவர்களுக்கு அதைப்பற்றிச் சொன்னாலே கோபம் வருகிறது. அதிருப்திதான் தரித்திரம். திருப்திதான் சம்பத்து. ஆகையால், நாம் நிஜமான புத்திசாலிகளானால் தரித்திரர்களாக இருந்தாலும்கூட, அப்படிச் சொல்லிக் கொள்ளாமல், மனஸால் நிறைந்து, திருப்தியால் பணக்காரர்களாக இருந்து கொண்டிருக்கலாம். தரித்திரம் என்று சொல்லிக் கொண்டால்தான் நமக்கு யார் பணம் கொடுக்கிறார்கள்? சொல்லிக் கொள்ளாமலேதான் பணக்காரரை விடத் திருப்தியாக இருப்போமே!
புத்தி, செல்வம் – இவற்றோடு ஒவ்வொருத்தருக்கும் அழகாக இருக்க வேண்டும் என்கிற ஆசை இருக்கிறது. தான் புத்திசாலி என்பதைப்போல, எல்லோரையும்விடத் தானே அழகு என்கிற எண்ணம் நம் ஒவ்வொருத்தருக்கும் இருக்கிறது. இதற்குத்தான் அலங்காரம் எல்லாம் பிரமாதமாகச் செய்து கொள்கிறோம். தினத்துக்குத் தினம் ஃபாஷன்கள் மாறிக் கொண்டே இருப்பதெல்லாம் நம் அழகைப் பிரகடனம் பண்ணிக் கொள்ளத்தான். பரம கருணாமூர்த்தியான அம்பாள், கேவலம் ரக்த – மாம்ஸ சம்பந்தமான இந்தச் சரீர அழகை விரும்புகிறவர்களுக்கு அதைக்கூடப் பூரணமாகத் கொடுத்து அநுக்கிரஹிக்கிறாள். “ஸரஸ்வத்யா லக்ஷ்ம்யா” என்கிற சௌந்தரிய லஹரி சுலோகத்தில் ஆசார்யாள் இதையும் சொல்கிறார். “அம்பாளை உபாஸிக்கிறவனுக்கு பிரம்மாவவே அசூயைப்படுகிற அளவுக்கு ஸரஸ்வதியின் அநுக்கிரஹம் உண்டாகிவிடும். மகாவிஷ்ணு பொறாமைப் படுகிற அளவுக்கு மஹாலக்ஷ்மியின் அனுக்ரஹம் கிடைத்து விடும். இவனைப் பார்த்து “மன்மதன்தானோ?” என்று ரதியே சந்தேகப்படுகிற மாதிரி லாவண்யம் உண்டாகிவிடும்” என்கிறார்.
இத்தனையும் இருந்து தீர்காயுசு இல்லை என்றால் என்ன பிரயோஜனம்? அம்பாள் சிரஞ்ஜீவித்துவமும் தருவாள் என்கிறார்.
‘இதற்குமேல் வேறென்ன வேண்டும்?’ என்று தோன்றலாம். ஆனால், இதற்குமேல்தான் அம்பாளின் பரமாநுக்கிரஹத்தை தேடச் செய்யும் கேள்வியே பிறக்கும். ‘இத்தனை பணம், அழகு, புத்தி எல்லாவற்றையும் வைத்துக் கொண்டு இத்தனை காலம் ஓட்டியாச்சு; இதிலெல்லாம் வாஸ்தவத்தில் என்ன மனநிறைவைக் கண்டோம்? இதையெல்லாம் வைத்துக்கொண்டு எப்போது பார்த்தாலும் சஞ்சலப்பட்டுக் கொண்டே, ஒன்றை விட்டால் இன்னொன்று என்று தாவிக் கொண்டே இருந்து விட்டோம். நிரந்தர சௌக்கியத்தை, சாந்தத்தை இவை எதனாலும் பெற்றதாகத் தெரியவில்லையே! இதை எப்படிப் பெற்றுக்கொள்வது?’ என்கிற கேள்வி பிறக்கும். நடுநடுவே நமக்கு இந்தக் கேள்வி தோன்றினாலும், அடுத்த க்ஷணமே மாயை நம்மை இழுத்துக் கொண்டு போகிறது. ஆனால் நாமாக இப்படி நினைக்காமல் அம்பாளை உபாஸிப்பதன் பலனாக, அவள் நம்மை இப்படி நினைக்கப் பண்ணுகிறபோது, அந்த நினைப்பு நாளுக்குநாள் மேலும் மேலும் தீவிரமாக ஆகும். ‘பணம் வேணும், படிப்பு வேணும், அழகு வேணும், ஆயுசு வேணும்’ என்பதெல்லாம் மேலும் மேலும் நம்மைப் பாசத்தில் கட்டிப் பிரமையில்தான் தள்ளிக் கொண்டிருந்தது என்கிற அறிவு உண்டாகும். பாசம் என்றால் கயிறு, பாசத்தில் கட்டப்படுவது பசு. கயிற்றைப் போட்டுத் தறியில் கட்டின பசு மாதிரி, ஒரு குறிப்பிட்ட தூரத்துக்கு மேல் போக முடியாமல், அதற்குள் கிடைக்கிற தாற்காலிக இன்பங்களையே மேய்ந்துக் கொண்டு, அசட்டுத்தனமாக ‘இதுவே எல்லாம்’ என்று திருப்திப்பட்டுக் கொண்டிருக்கிறோம். இந்தக் கட்டை அறுத்துக் கொள்ள வேண்டும். அப்புறம் பரம சுதந்திரம். இந்த இந்திரியங்களின் சின்ன சௌக்கியங்களுக்கு அப்புறம் அகண்டமான, சாசுவதமான ஆத்ம ஆனந்தம்! பாசம் போய், நாம் பசுவாகக் கட்டுப்பட்டுக் கிடந்த நிலையும் போய்விட்டால், அப்புறம் நாம் பரப்பிரம்மம்தான். பணம், புத்தி, ஆயுள், அழகு ஆகிய சிற்றின்பங்களுக்குத் தவித்த மனஸில் இவற்றின் கட்டுக்களே வேண்டாம் என்கிற வைராக்கியம் உண்டானால், அப்புறம் பேரின்ப மயமாவதற்கான ஸாதனைகளில் இறங்கி, முடிவில் அம்பாள் அருளால் பேரின்பமாகவே ஆகலாம். அதைவிடப் பெரிய பலன் வேறில்லை. முடிந்த முடிவாக அம்பாள், பக்தனை இந்தப் பரமானந்த ரஸத்தில் திளைத்துக் கொண்டிருக்குமாறு அநுக்கிரஹம் செய்கிறாள் என்று ஆசார்யாள் முடிக்கிறார்.
_________________________________________________________________________________________________________________________________
Result of Ambal Worship
Worshiping Ambal is the end result of having taken birth. There is no greater pleasure than meditating on Ambal who is an embodiment of love. There are lot many philosophies and religions. The end result of all these is easily obtained by meditating on Ambal. We should surrender stating ‘Oh Mother! I have lots of defects. But I trust you. Whatever shortcomings I have will be warded off by your grace. Kindly shape me in the right way’. There is no religion, doctrine or discipline greater than this total surrender. There is no greater delight than leaving everything to Her and keep our mind as light as a feather.
Ambal upasana itself is a great blessing. We do not require any other boon. But due to the entanglement in the world which is perceived through Maya, we are unable to shed our ego initially and seek the happiness derived out of meditating on Her and for Her sake alone. We expect something in return and worship her in anticipation of our wishes getting fulfilled. She also gives allowance by answering all our prayers as long as they are fair and not against Dharma.
Acharyal knows the nature of humans. He knew that if said initially that by the upasana of Ambal we can get rid of births and attain Moksha no one would be interested to involve themselves. So when listing out in the Soundaryalahari as to what one can get by Ambal’ s worship, he starts with knowledge, wealth, and beauty.
In the Sloka beginning with ‘Saraswathya Lakshmya’ he lists out the benefits arising out of worshipping Ambika. There is a special feature here. Usually at the end of every stuthi, the norm is that the poet states the benefits one derives by reciting that stotram. It is called phalasruti. The composer repeats the things one can obtain by reciting the said verse and that gives a feeling that benefits are due to the greatness of the composition. Whereas Shankara who has no ego states, “oh mother, you bestow all these to the one who worships you”, instead of stating that the benefits are accrued by the recital of ‘Soundaryalahari’
He first says that one would get the grace of Saraswati. That means good education and, as an outcome of good education one would get good conduct.
Next he says one would get the Grace of Lakshmi meaning one would acquire lots of wealth.
Generally people don’t seek virtue through prayers as much as they seek wealth. What is the use of money if one is devoid of virtues? So even if we seek wealth, Ambal thinks,” this ignorant child is praying for wealth. Without a discreet knowledge, the Artha (wealth) will become Anartha (disastrous). He will end up accumulating as much sins, as the money he is given. So first let me give him the prudence to spend money towards Dharma and then bestow wealth.” If a child wants sweets, the mother gives castor oil also so as to protect the child from the ill effects of the sweets. So first she gives the grace of Saraswathi and then Lakshmi’s grace. In Taitreerya Upanishad also we find a prayer first seeking ‘Medha’ (knowledge) and then asking for ‘Shree’ (wealth). While writing commentary for this, Acharya has said that Artha given to an ignorant man will result in Anartha. In Bhajagovindam also he sang Artham Anartham.
Those who worship Ambal need not worship Saraswati and Lakshmi separately. They both are by Her side and keep fanning Her. This is described in Lalitha Sahasranama (sa chaamara ramaavaani savya dakshina sevithaa). If we worship Parasakthi who is the base of all the energy, she would make Saraswati and Lakshmi bestow their grace on us. Saraswati and Lakshmi are the two eyes of Kamakshi. Ka means Brahma. Just as Siva’s wife becomes Sivaa, Ka’s wife becomes Kaa. Maa means Lakshmi. Maa-dhavan means Lakshmi’s husband. The one who has Kaa and Maa as Her akshi (eyes) is Kamakshi.
I said one gets Lakshmi and Saraswathy kataksham by worshiping Ambal. In this aspect the nature of men is quite strange! Everyone thinks that he is very smart and likes to project himself as super intelligent. But nobody seems to earnestly pray for good intelligence. Generally smartness is considered as intelligence. But wisdom and discretion are the real intelligence. Nobody aspires for this. They feel that they are clever and shrewd and happy about their ‘capability to fool everyone’ and stop with that. However much we have Lakshmi Kataksham we are not satisfied. Even a fool wants to project himself as intelligent, but an affluent man attempts to cover up his wealth and projects himself as a poor man. One is very happy if somebody says ‘how intelligent he is’. But if someone is identified as having lakhs and lakhs in the bank, he gets annoyed. It is because of an insatiable feeling about money. Satisfaction is wealth and dissatisfaction is poverty. So if we are really intelligent we can be wealthy although poor by having a satisfied mind. Is there anybody to help us with money if we claim to be poor? Let us not speak out our condition and be contended so that we are more satisfied than a wealthy person.
In addition to wealth and wisdom everyone desires to look beautiful. Like the notion we carry about our intelligence, we consider ourselves to be good looking too. That is why we get ourselves decked up so much.
The change in fashion every day is to showcase our beauty. Ambal who is an epitome of compassion grants even the boon of beauty though it relates to just the body, composed of blood and muscle. Acharyal mentiones this in the sloka,’ Saraswathya lakshmya’ in Soundarya lahari. ‘The devotee of Ambal would get Saraswathi’s grace so much that it will make even Brahma jealous. Mahalakshmi would cause Vishnu’s envy by her abundant grace. The grant of wish for beauty would be such as to make Rathi wonder whether this man is Manmatha’.
It won’t be of any use if a person blessed with all these does not live long. So Ambal gives longevity too, says Shankara.
‘Does anyone need more than this’? Actually only now the need to seek Ambal’s supreme grace arises. ‘We have spent our life with these things – money, beauty, and intelligence. Are we totally satisfied with these? In spite of all these there is some restlessness in the mind. Have we attained permanent comfort or peace? How to get it?’ This query would be cropping up in the mind. Though such query arises it gets dragged away by Maya. Instead of us posing the question, if Ambal through Her worship, directs our thought process then the yearning will keep growing. We will realise that the attachment towards wealth, intellect, beauty, and longevity will drag us into the pitch of ignorance. Pasha (Attachment) means rope. A cow is tied to a rope. We are like the cow which cannot go beyond a short distance and is grazing within that enclosure feeling temporarily happy thinking that this is the world. We should break away from the rope. Then there is full freedom. The great permanent bliss ensues being rid of the small comforts of our sensory organs! Then we become Parabrahmam. Once we get detached from the longing towards minor pleasures of wealth, intelligence, longevity, and beauty and start practicing towards the greatest pleasure, then with Ambal’s grace we would achieve eternal bliss. There is no greater reward than this. At the very end, Acharyal sums up that Ambal graces the devotee by making him experience the nectar of supreme bliss.
Categories: Deivathin Kural
Leave a Reply