‘அலவணம்’ என்று ஒன்று. சாப்பாட்டில் உப்புச் சேர்த்துக் கொள்ளக் கூடாது என்பதே அலவணம். “உப்பில்லாப் பண்டம் குப்பையிலே” என்று ஒரு பக்கம் சொல்லிவிட்டு, சில காலத்தில் உப்பு கூடாது என்றும் வைத்திருக்கிறது. உணர்ச்சி வேகத்துக்கு உப்பு காரணம். “மானம், ரோஷம் இல்லே? நீ உப்புப் போட்டுண்டு தின்றதில்லே?”என்று கேட்கிறோமல்லவா? ரொம்பவும் ஆத்ம மார்க்கத்தில் போகும்போது இந்த மானம், ரோஷம், மற்ற உணர்ச்சி வேகமெல்லாம் போகத்தான் வேண்டும். அதனால் ஸந்நியாஸி முதலியவர்கள் அலவணமாகச் சாப்பிட வேண்டும். டாக்டர்கள் ஒரு காரணத்துக்காக உப்பு கூடாது என்றால், சாஸ்த்ரமும் ஒரு காரணத்துக்காக தள்ளுகிறது. ‘வருண ஜபம்’ முதலான வேத மந்த்ர ஜபங்களின்போது ஜபிக்கிறவர்கள் உப்புச் சேர்த்துக் கொண்டால் நிச்சயமாகப் பலன் கிடைக்காமலிருப்பதையும், அதுவே அவர்கள் அலவணமாய் இருந்தால் மழை பெய்கிறதையும் இந்தக் காலத்திலும் நிதர்சணமாகப் பார்க்கலாம். முருகன் சம்பந்தப்பட்ட செவ்வாய்க்கிழமை, ஷஷ்டி, கிருத்திகை முதலானவற்றில் குறிப்பாக அலவண நியமம் அநுஷ்டிக்கப்படுகிறது. பதார்த்த சுத்தியில் ஜெனரலாக இருப்பதைத் தவிர குறிப்பிட்ட காலங்களில் மட்டும் குறிப்பிட்ட பதார்த்தங்கள் விலக்கப்பட்டிருக்கின்றன என்பதற்கு இதெல்லாம் திருஷ்டாந்தம். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்
There is rule called ‘Alavanam’ (अलवणम्). It means one should eat his food without salt. On one hand it is said ‘Upilla Pandam Kuppayile’ (a food item without salt, goes into garbage) and on the other hand it is advised to avoid salt during certain times. Salt is the main cause for triggering of emotions. We ask ‘Don’t you have any self pride? Are you not having salt in your food’? While progressing on the spiritual path (Atma Margam), we have to get rid of all these emotions of pride, anger etc. Therefore Sanyasis have to eat their food without salt. If doctors ask people to avoid salt for a reason, Sastras tell us to avoid salt for a different reason. Performance of Varuna Japa for rains will not bear fruit if the people performing it add salt to their food. We see rains pouring down if they follow this ‘Alavana’ rule, even in present times. ‘Alavanam’ is observed on auspicious days like Tuesdays, Sashti, Kruthigai, etc., days associated with Lord Muruga. These are examples that our Sastras not only prescribe eating of pure (sathvik) food but also tell us to avoid certain food items during certain times. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal
Categories: Deivathin Kural, Golden Quotes
Leave a Reply