Periyava Golden Quotes-868

மற்ற காலங்களில் சுத்தமானதாக ஒத்துக் கொள்ளப்படும் ஆஹார பதார்த்தங்களிலும் இந்த நாலு மாஸங்களில் (சாதுர்மாஸ்ய காலத்தில்) ஒவ்வொரு மாஸமும் ஒவ்வொரு வகையானது தள்ளப்பட்டிருக்கிறது. இதை ஆஷாட த்வாதசியிலிருந்து கார்த்திகை த்வாதசி வரையிலான நாலு மாஸமாக வைத்துக் கொள்வது ஒரு வழக்கம். இன்னொரு வழக்கப்படி ஆஷாடத்தை அடுத்து வரும் ச்ராவண மாஸத்தில் ஆரம்பித்து கார்த்திகை முடிய இருக்கும் நாலு மாஸத்தில் அநுஷ்டிப்பதாக இருக்கிறது. ச்ராவண மாஸம் பூராவும் காய்கறிகளே சாப்பிடக்கூடாது. குழம்பில்கூடத் ‘தான்’ (காய்கறி) போடக்கூடாது. அப்பளாம், வடாம், சுண்டல் மாதிரியானவற்றைத் ‘தொட்டுக் கொண்டே’ அந்த மாஸத்தைத் தள்ள வேண்டும். குழம்பேகூட புளியும் காய், மிளகாயும் காய் என்பதால் அவை இல்லாமல் மோரையும் இஞ்சியையும் போட்டே செய்ய வேண்டும். பாத்ரபத மாஸம் பூராவும் தயிரும் மோரும் சேர்த்துக் கொள்ளக் கூடாது. ஆச்வின மாஸம் முழுதும் பால் தள்ளுபடி. கார்த்திகை மாஸத்தில் நெய்யும், உளுந்து, துவரை, கடலை முதலான எந்தப் பருப்பு தினுஸும் சாப்பிடக் கூடாது. சாதம் அல்லது சப்பாத்தியுடன் வெறுமனே கறிகாய்களை மட்டும் வேக வைத்துச் சாப்பிடலாம். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்

Some of the items normally accepted as pure food are excluded during these four months (Chaaturmaasya). Each month, certain food items are excluded. The four month time period (Chaaturmaasya) is from Aashada Dwadasi to Karthigai Dwadasi. There is another custom whereby Chaaturmaasyam is observed from Shravana month (that comes after Aashada) till Karthigai. During the entire month of Shravana one should not consume any vegetables. Not even in Kuzhambu (Sambar) should there be any vegetables (Thaan). One should eat items like Appalam, Sundal, Vaadam, etc. during this month. Since Kuzhambu (Sambar) contains Tamarind and Chillies (which are considered vegetables) they are avoided and can be replaced with buttermilk and ginger. In the entire month of Bhadrapada, curd and buttermilk should be excluded. In Ashvina month milk should not be consumed. In Karthigai month, one should not consume ghee and lentils like urad dal, toor dal, and chana Dal. One can have rice or chapatis with boiled vegetables. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal



Categories: Deivathin Kural, Golden Quotes

Tags:

Leave a Reply

%d