Jaya Jaya Sankara Hara Hara Sankara – The greatness and significance of Kamakshi’s eyes has been eloquently described by Sri Periyava through Bhagawath Padhal’s Soundarya lahari sloka.
Many Jaya Jaya Sankara to our sathsang seva volunteer who wish to remain anonymous for the translation. Rama Rama
காமாக்ஷியின் கண்கள்
நம் அவயவங்களில் கண் மிகவும் முக்கியம். ‘என் கண்ணே’ என்று பிரியமானவர்களைச் சொல்கிற மாதிரி ‘காதே, மூக்கே’ என்பதில்லை அல்லவா? அம்பாள் என்பதாகப் பரமாத்மா மூர்த்திகரிக்கிறபோது அவளுடைய கண் எத்தனை முக்கியமாகும்? காமாக்ஷி, மீனாக்ஷி, விசாலாக்ஷி என்கிறபோது அக்ஷி என்பது அவளது கண் விசேஷத்தையே சொல்கிறது.
காமாக்ஷியின் கைகளில் மன்மதனின் வில்லும் அம்பும் இருப்பதாகச் சொல்கிறோம். அவளுடைய கைகளில் மட்டுமில்லை, கண்களிலும்கூட இவையே இருக்கின்றன என்று ஆசார்யாள் ‘ஸெளந்தர்ய லஹரி’யில் கவித்வ நயத்தோடு சொல்கிறார். (‘ப்ருவெளபுக்நே கிஞ்சித்’ என்கிற ஸ்லோகம்)
என்ன சொல்கிறார்? அம்பாளுடைய புருவம் கொஞ்சம் நெரிந்திருக்கிறதாம். கவலை இருந்தால்தான் புருவம் நெரியும். லோக மாதாவுக்கு ஜனங்கள் எல்லோரும் கெட்டுப் போகிறார்களே, அவர்களைக் காப்பாற்ற வேண்டும் என்கிற கவலை. அதனால் புருவம் வளைந்திருக்கிறது. அம்பாளுடைய பரம லக்ஷணமான புருவங்கள் வில் மாதிரி இருக்கின்றன. இரண்டு வளைந்த பாகங்களைக் கொண்ட தனுஸைப் போல் அவை உள்ளன. ஆனால் புருவ மத்தியில், அதாவது நாசி தொடங்கும் இடத்துக்கு மேலே ரோமம் இல்லை. ரோமம் இருந்தால் அது உத்தமமல்ல! சாமுத்திரிகா லக்ஷணம் ஆகாது. கூடின புருவம் கெடுதல் உண்டாக்கும் என்பார்கள். அம்பாளுடைய புருவங்களின் மத்தியில் ரோமமில்லாதது உத்தம ஸ்திரீ லக்ஷணம்தான். ஆனால் இது புருவங்களை வில்லுக்கு உவமிக்கும்போது அவ்வில்லுக்கு நடுவே ஊனம் செய்தாற்போல் தோன்றலாம். அப்படி ஊனம் தோன்றாமல் ஆசார்யார் ஒரு காரணம் சொல்கிறார். வில் என்று ஒன்று இருந்தால், அதை எய்கிறவன், அதன் மத்தியில் தன் முஷ்டியால் அதைப் பிடித்துக் கொண்டுதானே நாணில் அம்பு பூட்டி இழுப்பான்? முஷ்டி பிடித்திருக்கிற இடம் வில்லின் இரண்டு பாகங்களுக்கு மத்தியில் அந்த வில்லை மறைக்கத்தானே செய்யும்? இப்படித்தான் அம்பாளின் புருவ வில்லையும் எவனோ மத்தியில் பிடித்துக்கொண்டு அம்பைப் பூட்டுகிறான். அவனுடைய முஷ்டி உள்ள அந்த மத்ய பாகம்தான் ரோமம் இல்லாத இடைவெளி என்கிறார்.
இப்படி அம்பாளின் புருவத்தை வில்லாக வளைப்பவன் யார்? மன்மதன்தான். அவனுடைய கரும்பு வில் போலத்தான் கருணையால் வளைந்த லோக மாதாவின் புருவம் இருக்கிறது. மன்மதனுடைய வில்லுக்கு வண்டுகள் தானே நாண் கயிறு. அதற்கேற்றாற்போல் இந்த புருவத்துக்குக் கீழே அம்பாளுடைய வண்டு விழிகள் இப்படியும் அப்படியும் ஓடிக்கொண்டே இருக்கின்றன. ஒருத்தரும் விட்டுப் போகாமல் ஸமஸ்த பக்தர்களுக்கும் அநுக்கிரஹம் செய்ய வேண்டுமென்பதால் அவை இப்படிச் சஞ்சரித்துக் கொண்டே இருக்கின்றன. இந்த நாணிலும், வில்லிலும் மன்மதன் தன்னுடைய சக்தியை வைத்து எய்கிறான். அதனால்தான் ஞான மூர்த்தியாயிருந்த பரமேசுவரன் அம்பாளிடம் பிரேமை கொண்டான். அதனால் ஜீவப் பிரபஞ்சம் முழுதிடமும் அன்பு கொண்டான். ஆசையில்லாத பிரம்மம் அசைந்து கொடுத்து, சகல ஜனங்களையும் ரக்ஷித்தது; அம்பாளுடைய கவலையும் தீர்ந்தது.
வில்லைப் பிடித்த மன்மதன் முஷ்டி அம்பிகையின் புருவங்களுக்கு மத்தியில் உள்ள இடைவெளியாகவும், அவனுடைய மணிகட்டு நாண் கயிறான வண்டு விழிகளுக்கு நடுவில் நாசியின் அடிப்பாகமாகவும் ஆகிவிட்டது. இப்படி ஆசார்யாள் துதிக்கிறார்.
ஈசுவரனின் மீது காம பாணத்தை போடும் அந்தக் கண்களேதான் பக்தர்களைக் கடாக்ஷிக்கும்போது காமத்தைத் துவம்ஸம் செய்து ஞானத்தைப் பொழிகின்றன. மன்மத பாணங்கள் என்பவை என்ன? தாமரை, மல்லிகை, கருங்குவளை, மாம்பூ, அசோக புஷ்பம் ஆகியவைதான் அவனுடைய அம்புகள். ரூபம், ரஸம், கந்தம், ஸ்பரிசம் ஆகிய நான்கால் நம்முடைய நான்கு இந்திரியங்களை ஆகர்ஷிப்பது புஷ்பம். அதன் அழகு கண்ணுக்கும், அதில் சுரக்கிற தேனின் ரஸம் நாக்குக்கும், வாசனை மூக்கிற்கும், மென்மை தொடு உணர்ச்சிக்கும், இன்பம் தருகின்றன. பாக்கி இருக்கிற இந்திரியம் காது. அதற்குதான் வண்டு நாண் – அது எப்போதும் ரீங்காரம் செய்வது. இந்த ஐந்துக்கும் மேலே கரும்பு வில் – அதுதான் எல்லா இந்திரிய சேஷ்டைக்கும் காரணமான மனம்.
வெறும் பூவையும், கரும்பையும், வண்டையும் வைத்துக் கொண்டு மன்மதன் ஸமஸ்த ஜீவராசிகளையும் இந்திரிய வியாபாரத்தால் இழுத்துத் தள்ளுகிறான் என்றால் என்ன அர்த்தம்? ஸாக்ஷாத் பராசக்தியின் அநுக்கிரஹம் இருந்துவிட்டால், வல்லவனுக்குப் புல்லும் ஆயதமாகிவிடும் என்று அர்த்தம். உலக லீலை நடப்பதற்கே அவனுக்கு இந்தச் சக்தியை அநுக்கிரஹித்தாள். ஆகவே கவித்வ அழகுக்காக அவன் அவள் புருவத்தை வளைத்து அம்பு எய்வதாகச் சொன்னாலும் அவள்தான் அவனுக்கும் சக்தி தந்தவள். அவளுடைய சக்தியால்தான் அவன் நம் இந்திரியங்களை வெறித்தோடச் செய்கிறான். இதிலிருந்தே அவளுடைய கிருபை இருந்தால் தான் இந்த இந்திரியங்களை வசமாக்கி, ஓடாமல் நிறுத்த முடியும் என்றும் ஏற்படுகிறது.
தண்டிப்பது, காப்பாற்றுவது (சிக்ஷணை, ரக்ஷணை) இரண்டும் செய்கிறவன்தான் பிரபு. நம் கர்மத்துக்காக நம்மை ஆட்டிவைத்து சிக்ஷிக்கிறாள். காமனை அதிகாரியாகக் கொண்டு அவனுக்கும் ஜயம் வாங்கித் தருகிறாள். அந்தக் காமன் நம்மிடம் வாலாட்ட முடியாதபடி நாம் காம ஜயம் செய்யவும் அவளே கதி. அந்த ரக்ஷணையைச் செய்ய வேண்டுமென்றே லோகமாதாவான அவள் எப்போதும் கவலையோடு புருவ வில்லை வளைத்துக் கொண்டு அம்பு என்கிற பாணத்தை வீசிப் பரமேசுவரனைக் கருணையில் திருப்பிக் கொண்டிருக்கிறாள்.
அம்பாளுடைய கண்களிலிருந்து பொங்குகிற கடாக்ஷம் ஸ்ரீ ஆசார்யாளிடம் பூரணமாகப் பொலிந்துகொண்டிருந்த போது, அவரது வாக்கிலிருந்து ஒரு சுலோகம் வந்தது. இதுவும் ‘ஸெளந்தர்ய லஹரி’யில் இருக்கிறது. ‘த்ருசா த்ராகீயஸ் யாதரதளலித நீலோத்பல ருசா’என்ற சுலோகம். அவளுடைய கடாக்ஷம் இல்லாமல் இப்படிப்பட்ட அமிருதம் போன்ற சுலோகம் பிறக்க முடியாது. ஆனால் இந்த சுலோகத்திலோ ஆசார்யாள் அம்பாளின் கடாக்ஷம் தமக்குக் கிட்ட வேண்டுமென்றே பிரார்த்திக்கிறார். தமக்குக் கிட்ட வேண்டும் என்று மட்டுமில்லை, ‘தமக்கும்கூட கிட்டவேண்டும்’ என்கிறார் – பக்தியிலும் ஞானத்திலும் சிகரமாக இருந்தும் துளிகூட அகம்பாவமே இல்லாத நம் ஆசார்யாள்.
காமாக்ஷியின் கடாக்ஷ வீக்ஷண்யத்தின் பெருமையை இந்த சுலோகத்தில் சொல்லுகிறார். அவளுடைய கண் பார்வை எத்தனை தூரமும் தாண்டி விழுமாம் – ‘த்ருசா த்ராகீயஸ்யா’ என்கிறார். ஒரு தாயார்க்காரி பச்சைக் குழந்தைகளைத் தன்பார்வைக்குள்ளேதான் வைத்துக் கொள்வாள். அம்பாளுக்கும் நாம் எல்லோரும் பச்சை குழந்தைகள்தான். பெரிய பெரிய காரியம் சாதித்தவர்கள், அகடவிகடம் செய்கிறவர்கள், எல்லோரும்கூட அவளுக்குப் பச்சைக் குழந்தைகள்தான். மிருகங்கள், பட்சிகள், புல்பூண்டு எல்லாவற்றுக்கும் தாயார்க்காரி அவள். எல்லையில்லாத பிரபஞ்சத்துக்கு அம்மா அவளே. இத்தனையும் அவள் பார்வைக்குள்தான் இருக்கின்றன. எனவே அவளுடைய கடாக்ஷத்துக்கும் எல்லையில்லை. அது நீண்டு நீண்டு போய், தகுதியே இல்லை என்று எட்டாத் தொலைவில் நிற்கிறவர்கள் மீதும் விழுகிறது. அந்தக் கண்கள் பாதி மூடி, பாதி விரிந்திருக்கிற “நீலோத்பல புஷ்பம்” மாதிரி இருக்கின்றனவாம். ஜலத்தில் நனைந்த நீலோத்பலம் மாதிரி பரம சீதளமாக இருக்கிறது, அவளுடைய திருஷ்டி. நீண்ட நேத்திரங்கள், நீலமான நேத்திரங்கள், குளிர்ந்த நேத்திரங்கள் – இதனால் நீலோத்பலத்தை உவமிக்கிறார். ‘இப்படி நீள நெடுக எங்குப் பார்த்தாலும் போய்க் கொண்டிருக்கும் உன் கடாக்ஷப்பிரவாகத்தில் என்னையும்கூட முழுகும்படியாக செய்தருளேன்’ என்கிறார். ‘மாம் அபி’ – ‘என்னைக்கூட’ என்கிறார். “எனக்கு உன் கடாக்ஷம் கிடைக்க நியாயமே இல்லை என்றாலும் தீனனான என்னையும் உன் பார்வையால் ஸ்நானம் பண்ணி வையம்மா” என்கிறார். ‘தீனம்’, ‘மாமபி’ என்று மிகமிக விநயத்துடன் சொல்லுகிறார் பரமேசுவராவதாரமான ஆசார்யாள். ‘எனக்கு யோக்கியதை இல்லாவிட்டாலும் ஏன் கேட்கிறேன் என்றால், இப்படிக் கடாக்ஷிப்பதால் உனக்கு ஒன்றும் நஷ்டம் வந்துவிடவில்லை என்பதாலேயே கேட்கிறேன்’ என்கிறார். தோஷமுள்ளவர்களைப் பார்த்தாலும்கூட அவளுடைய பார்வைக்குத் தோஷம் வராது – எந்த ஹானியும் வராது. ந ச தே ஹாநிரியதா, ‘உனக்கு நஷ்டமில்லை என்பது மட்டுமில்லை; எனக்கோ இதனால் பரம லாபம் சித்திக்கிறது; நான் தன்யனாகிறேன்’ என்கிறார். ‘அனேனாயம் தன்யோ பவதி’. தனத்தை உடையவன் தன்யன். அம்பாளின் கடாக்ஷத்தால் அருட்செல்வம் என்ற தனம் கிடைக்கிறது, அதற்குமேல் பெரிய செல்வம் எதுவுமில்லை.
‘தகுதியைப் பார்க்காமல் கடாக்ஷிப்பாய்’ என்றதற்கு ஒரு திருஷ்டாந்தம் சொல்கிறார். பூரண சந்திர ஒளி பிரகாசிக்கிறது. அது வித்தியாசம் பாராட்டாமல் எல்லா இடங்களிலும் ஒரே போல் அமிருதமான நிலாவைக் கொட்டுகிறது – சக்கரவர்தியின் மாட மாளிகை நிலா முற்றத்தில் சந்திரிகையைப் பொழிகிறது. அதே போல் ஒரே முள்ளுப்புதர் மண்டிய காட்டிலும் நிலவைப் பொழிகிறது. உப்பரிகையில் விழுந்ததால் அரண்மனையின் சௌகரியங்கள் நிலாவைச் சேரவில்லை. காட்டில் விழுந்ததால் அதற்கு முள் குத்தவும் இல்லை. இப்படித்தான் அம்பாளின் கடாக்ஷம் எங்கு விழுந்தாலும் அதற்குக் கூடுதல் குறைவு இவை இல்லை. என் மேல் அது விழுந்தால் ஒன்றும் குறைந்து விடாது. நானோ அதன் ஸ்பரிசத்தால் நிறைந்தவனாகி விடுவேன். உனக்கு ஒரு நஷ்டமும் இல்லாமலே எனக்குப் பரம லாபம் கிடைக்கிறது. அதனால் என்னையும் உன் கடாக்ஷத்தில் முழுக்கடிப்பாய் அம்மா என்கிறார்.
என்னையும் என்று ‘உம்’ போட்டுச் சொன்னது நம்மையெல்லாம் உத்தேசித்துச் சொன்னதுதான். அம்பாளும் ஈஸ்வரனும் ஆசாரியாளும் ஒன்றேதான். அப்படிப்பட்ட ஆசார்யாள் பரம கருணையினால் நம்மோடு சேர்ந்து நின்று கொண்டு நமக்காக இந்த சுலோகத்தை அநுக்கிரகித்திருக்கிறார். மனமாரப் பிரார்த்தித்து விட்டால், எத்தனை யோக்கியதை இல்லாதவர்களையும் அம்பாள் கடாக்ஷிக்கிறாள்; நிலாப்போலவும் நீலோத்பலம் போலவும் குளிர்ந்தது அவளது கடாக்ஷம். அது எவரையும் கைதூக்கி விடும் என்று நமக்குக் காட்டிக் கொடுக்கிறார்.
_____________________________________________________________________________________________________________________________
Kamakshi’s Eyes
The human eye is a very important sensory organ. We say our loved one is the ‘apple of the eye’ and not of the ear or the nose. That being so, when Ambal takes a form, won’t Her eyes be more valuable? In the names Kamakshi, Meenakshi, and Vishalakshi, the word ‘akshi’ refers to the special and precious eyes of Ambal.
We say Kamakshi holds Manmatha’s bow and arrow in Her hands. In Soundarya Lahari, Sri Adi Sankara says that the bow and the arrow are not just in Her hands but in Her eyes too! He puts across this idea in elegant poetic language. ‘bhruvau bhugne kinchit’ (‘भ्रुवौ भुग्ने किञ्चित्’) (Soundarya Lahari sloka – 47).
He says that Ambal’s eyebrows are slightly creased. This happens when one is worried. Ambal (Lokamata) is worried about people treading the wrong path. She is anxious to protect them and bring them to the right path. Her eyebrows are creased because of this reason. Her perfect eyebrows resemble the bow. A bow has two bent halves. The two eyebrows resemble the two bent halves of the bow. Between the brows is the smooth, vacant space. It is devoid of hair. Absence of hair between the eyebrows is the characteristic of a noble woman (Saamudhrika lakshanam). But when the brows are compared to the two sections of a bow, this vacant space may be construed to be a breakage in the bow. Sri Adi Sankara gives an explanation for this. The person who has the bow, will hold the bow at the centre while shooting the arrows. That part of the bow, held by him, will remain hidden from view. Sri Adi Sankara says that Ambal’s brow shaped eyebrows is held by someone at the centre, and the arrows shot. The part held by him is the centre part of the eyebrows.
Who is this person using Ambal’s eyebrows as a bow? It is Manmatha. Loka Mata’s elegantly curved eyebrows are exactly like his sugarcane bow. The string for Manmatha’s bow is the row of honey bees. In keeping with this, Ambal’s bee like eyes are constantly on the move. They keep moving from one end to other so that Her blessings reach all those who worship Her, without any exception. Manmatha exerts his power with his bow. That’s how Parameshwara came out of His meditative state and developed affection for Ambal. Thereafter He developed love towards all living forms. The static Brahmam moved, only to protect the living. Thus, Ambal’s worry too came to an end.
Sri Adi Sankara says: ‘The fist of Manmatha is in the space between the eyebrows of Ambal. His wrist is the part of Her nose between the bee like eyes’.
The same eyes that shower arrows of love on Eswara, wipe out desires and shower knowledge on the bhaktas. What are the flowers used as arrows by Manmatha? They are the fragrant lotus, jasmine, water lily, mango, and Ashoka flowers. A flower attracts our four senses by its beauty, taste, fragrance, and softness. Its beauty is appealing to our eyes, the honey from it to our taste, its fragrance to our sense of smell, and its softness to our touch. The sense organ that is not included is the ear. The bees that make up the string are constantly buzzing. This is appealing to our ears. Above all these is the sugarcane bow which is like the mind – the root cause for all mischief.
What exactly do we mean when we say that Manmatha holds to sway the senses of all living things just with these flowers, sugarcane, and bees (all of which are very delicate)? It goes to say that even a blade of grass will become a mighty weapon with Parashakti’s blessings. She blessed Manmatha with these powers to ensure that there is continuity of life forms on this earth. Hence, even if Sri Adi Sankara were to poetically elucidate that Manmatha used Her eyebrows as a bow to shoot his arrows, it was She who endowed him with these powers. Using Her influence, he holds sway over our senses. From this we understand that Her blessings are needed for us to gain control over our senses.
Punishment and protection are done by the Master. She punishes us for our (bad) karmas. On one hand She helps KAma hold sway over all living things. On the other hand, She helps us get over our desires. It is to grant this protection to living beings, She appears with creased eyebrows. With affection as the arrow, She turned Parameshwara towards the world, ensuring it’s protection.
When Sri Adi Sankara was fully drenched in the blessings of Ambal , pouring forth from Her eyes, he composed a verse in Soundarya Lahari (sloka-56). ‘drusha dragheeyasya daradalita neelotpalaruchaa’. (‘द्रुशा द्रागीयस्या दरदलित नीलोत्पलरुचा’). Such a verse, as sweet as ‘amrutam’, can never be composed without Her blessings. In this sloka, Sri Adi Sankara prays to Ambal seeking Her blessings. Not that ‘he’ should get it, but that ‘he too’ should get it! Sri Adi Sankara who was the epitome of bhakti and gnana, prays to Her without a trace of ego.
He elucidates the glory of Her mere glance. Her glance covers a large region, ‘drusha dragheeyasya’ – he says. A mother ensures that her infant child is always within her sight. We are all infants of Ambal. Even those who have achieved great things and those who are highly knowledgeable are but small infants in her view. She is also the mother of all animals, plants, birds, etc. She ensures that all these remain within her view. Thus, the extent over which Her glance covers is boundless. Her far reaching glance extends further and further, falling on those who are at the farthest corners including those who consider themselves ineligible to seek Her blessings. Sri Adi Sankara says Her eyes are half open and half closed like a (just blossoming) blue lotus. They are cool like a fully drenched blue lotus. Her eyes are long, bluish (in colour) and cool – he therefore compares them to a just blossoming blue lotus. ‘With your far reaching glance, shower your grace on me too – says he. ‘maam api’ – ‘me too’ – he says. ‘I am too small and insignificant to seek your blessings. But shower grace on me too’ he pleads in all humility, though Sri Adi Sankara is himself an avatar of Parameshwara! He further implores – ‘I am aware I do not deserve your grace. But by blessing me you do not lose anything’. Even when She showers grace on sinners, she remains unaffected. ‘na cha the haaniriyathaa’ (न च ते हानिरियता). ‘You lose nothing, whereas I stand to gain in abundance’. He also says – ‘anenaayam dhanyo bhavati’ (अनेनायम् धन्यो भवति). One who has dhanam (wealth) is a ‘dhanya’. Ambal’s grace is in itself a great wealth. There is no wealth greater than that. Requesting Her to bless him though he doesn’t deserve it, he cites a simile. ‘A full moon spreads its cool bright light everywhere. It does not differentiate between the balcony of a palace and a thorn filled forest. The palace does not add any value to the moonlight nor do the thorns harm it in any way’. Similarly, Ambal’s graceful glance will not be affected by anything. ‘It would not be disgraced in any way if it fell on me. But I would become wealthier by her glance’. ‘You do not lose anything; but I stand to gain everything. So shower me with blessings from your graceful glance’ he says.
By saying ‘me too’, he has included all of us in his prayers. Ambal, Parameshwara, and Acharyal are one and the same. Such a great person, out of compassion, has, on our behalf, composed this verse. If we worship Her wholeheartedly, She is bound to shower Her blessings irrespective of whether we deserve it or not. Her graceful glance is as cool as the moon and the blue lotus. It is capable of elevating us all. This is the guidance Sri Adi Sankara provides us with.
Categories: Deivathin Kural
So pleasant to read
An elaborate post along the same lines here: https://divineexcerpts.wordpress.com/2017/04/12/mother-bathe-me-too-in-thy-grace-saundarya-lahari-verse-57/
and here :https://divineexcerpts.wordpress.com/2017/04/08/ambals-third-eye-and-poetry-sl-verse-50/