Jaya Jaya Sankara Hara Hara Sankara – Sri Periyava’s desperate longing to bless a devotee in crisis and a playful drama are the highlights of this newsletter from Sri Pradhosha Mama Gruham.
Many Jaya Jaya Sankara to out sathsang volunteers Smt. Savita Narayan for the Tamizh typing and Shri. Harish Krishnan for the translation. Rama Rama
(வாயினால் உன்னைப் பரவிடும் அடியேன் படுதுயர் களைவாய் பாசுபதா பரஞ்சுடரே)
ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மஹாபெரியவாளின் மகிமை (4-3-2013)
தவித்து, துடித்து சொரியும் காருண்யம்
(நன்றி: திரு. ரா. கணபதி அவர்கள்)
தன் அபாரக் கருணையின் மிகுதியால் சர்வ வல்லமையுள்ள சர்வேஸ்வரர் உலக மக்களை உய்வித்துள்ள ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளெனும் திவ்ய ரூபத்தில் நம்மிடையே சுகப்பிரம்மரிஷி அவர்களின் மேன்மையோடு பேரருள் பொழிந்துள்ளார்.
அந்த மாமுனிவர் திருஉருவில் எந்த ஒரு எளிய, ஏழை பக்தர்களானாலும் தன் சன்னிதானம் அடைந்தோருக்கு மகத்தான கருணையைக் காட்டுவதில் அத்தெய்வம் நிகரற்றதான அற்புதகங்களைக் காட்டியுள்ளதை பல சம்பவங்கள் சான்று கூறி நிற்கின்றன.
ஸ்ரீபெரியவா ஆந்திரதேசத்து தென்பகுதிகளில் 1966-69 வருடங்களில் சஞ்சாரம் செய்து கொண்டிருந்த காலம் அது. அப்பகுதியின் ஒரு ஊரில் முகாமிட்டிருந்த போது அன்று அல்ப துவாதசி. அதாவது சூரிய உதயத்திற்கு பின் சொற்பகாலமே துவாதசி திதியாக அமைந்திருந்தது. ஏகாதசி விரதம் இருப்பவர்கள் ‘பாரணை’ என்பதாக அந்த நேரத்திற்குள் பூஜையையும் முடித்துவிட்டு உணவும் அருந்திவிட வேண்டும்.
உலகோருக்கு சகல தர்மங்களையும் விடாது அனுஷ்டித்துக் காட்டிய ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா இவ்விதியையும் வழுவாது நடத்திக் காட்டியவர்.
வழக்கம்போல் அன்று அதிகாலை மூன்று மணிக்கே விழித்தெழுந்திருந்த போதிலும் காலை எட்டு மணியளவில் துவாதசித் திதி முடிந்து விடுவதால் அவசரமாகவே ஸ்ரீ சந்திர மௌலீச்வர பூஜையை செய்யப் போக வேண்டியதாயிற்று.
அப்போது ஸ்ரீ பெரியவாளிடம் அனுக்ரஹம் பெறுவதற்காக பெரும் தவிப்புடன் ஒரு பக்தர் வந்து நிற்கிறார். சற்று வயதான ஏழ்மைக் கோலத்தில் தோன்றிய அந்த ஆந்திரதேசத்து பிராமணர் ஓடோடி வந்து பெரியவாளை நமஸ்கரித்தார். ஏதோ தன் உள்ளக் கிடக்கையை அவர் சொல்லத் தவியாய்த் தவிப்பது தெரிகிறது.
ஸ்ரீ பெரியவா அந்த எளிய பக்தரைப் பார்த்ததும் சற்றே நின்றார். ஆனால் உடனிருந்த கைங்கர்ய அன்பர்களுக்கோ ஒரே பரபரப்பு. ஸ்ரீ பெரியவா அவசரமாக பூஜைகளை முடித்துக் கொண்டால் எட்டு மணிக்குள் ஆகாரம் என்கிற பிக்ஷை பண்ணிக் கொள்ள முடியும்; இந்த அவசர நேரத்தில் இந்த பிராமணன் சமயம் தெரியாமல் வந்து நிற்கிறாரே என்று நினைத்தவர்களுக்கு சற்றே சினம் மிகுந்தது.
பூஜைக்கப்புறம் தரிசிக்கலாம் என்று சற்றே கடினமாக கூறி அந்த பக்தரை நகரச் சொன்னார்கள்.
ஆனால் காருண்ய வடிவான ஸ்ரீ பெரியவா அவர்களை கையமர்த்தி விட்டு அருளூட்டும் தன் சாந்த நயனங்களால் அந்த பக்தரை தலையோடு காலாக தன் அருள் பார்வையைப் படரவிட்டு அவரது பிரச்சினை என்ன என்பதைக் கேட்டார்.
சமஸ்க்ருத பாஷையில் ‘பஹூஸம்க்ஷேபமாக’ அதாவது வெகு சுருக்கமாக பக்தரின் பிரச்சினையை சொல்லச் சொன்னார். ஆனால் அந்த பக்தருக்கோ, ஸ்ரீ பெரியவாள் கேட்பது போல அத்தனை சுருக்கமாகத் தன் குறைகளை சொல்லத் தெரியவில்லை.
மிகவும் பணிவுகுணத்தவராகத் தோன்றிய பக்தர் அதற்கு மேல் ஸ்ரீ பெரியவாளை தொந்தரவு செய்யாமல் விலக மனம் கொண்டார். அந்த நெருக்கடியில் தனக்கு என்ன சொல்ல வேண்டுமென்று முறைப்படுத்தி சொல்ல வரவில்லை என்றும், தான் தன் ஊருக்கு எவ்வளவு சீக்கிரம் திரும்ப முடியுமோ அவ்வளவில் திரும்ப வேண்டுமென்று மட்டும் கூறிவிட்டு ஸ்ரீ பெரியவாளின் கிருபை தான் தன்னை ரட்சிக்க வேண்டும் என்று கண்ணீர் பெருக விண்ணப்பித்து விட்டு நகர்ந்து, ஸ்ரீ பெரியவாளுக்கு வழிவிட்டு ஒதுங்கினார்.
ஸ்ரீ பெரியவாள் அவரிடம் எந்த ஊர் என்று விபரத்தை மட்டும் கேட்டுத் தெரிந்துக் கொண்டு அங்கிருந்து பூஜைக்காக நடந்து விலகினார்.
ஸ்ரீ சந்திரமௌலீச்வர பூஜை நடந்தது. பூஜை முடிந்தபின் ஸ்ரீ பெரியவா பிக்ஷாவந்தனத்திற்காக வந்து நின்றார். ஆனால் அந்த கருணாமூர்த்தி பிக்ஷாவந்தனத்தை ஏற்றுக்கொள்ள வந்து நிற்பவராய் தோன்றவில்லை.
அன்று பிக்ஷை செய்விக்க வந்திருந்த சென்னையைச் சேர்ந்த பெரிய புள்ளிகளான தொழில் அதிபரும் அவர் குடும்பத்தினரும் மண்டபம் முழுவதும் அடைக்கும்படியான பிக்ஷாவந்தன சரக்குகளோடு ஸ்ரீ பெரியவாள் முன் நின்று காத்திருந்தனர்.
ஸ்ரீ பெரியவாளின் கருணை விழிகளுக்கு அந்த பெரும் பணக்கார பக்தர்களின் பவ்யமோ, அவர்கள் கொண்டு குவித்திருந்த காணிக்கைகளோ பட்டதாகவே தெரியவில்லை. ஸ்ரீ பெரியவாளின் அருட்பார்வை அங்குமிங்குமாக யாரையோ தேடியது.
துவாதசி முடியுமுன் தீர்த்த பிரசாதமளித்து பிக்ஷை கொள்ள வேண்டிய நிர்பந்தமான குறுகிய அவகாசத்தில் ஸ்ரீ பெரியவா அவசரம் காட்டாமல் அப்படி யாரைத் தேடி சமயத்தைக் கடத்துகிறார் என்று புரியாமல் எல்லோருக்கும் தவிப்பானது.
சற்றுநேரம் பார்வையை அலையவிட்டுத் தேடியபின் ஸ்ரீ பெரியவா அவர்களிடம் காலையில் வந்து தன்முன் நின்று குறைகளைக் கூற முடியாமல் தவித்த பக்தரைப்பற்றி கேட்கிறார். அந்த வாடிய பக்தருக்குத்தான் ஸ்ரீ பெரியவாளெனும் அருள் ஊற்று பீரிட காத்து நிற்பதை அங்கிருந்தோர் உணரலாயினர்.
அந்த பக்தர் எங்கிருந்தாலும் தேடிக் கண்டுப்பிடித்து அழைத்து வருமாறு ஸ்ரீ பெரியவாளிடமிருந்து அருள் கட்டளை பிறக்கின்றது. இப்படி கட்டளையிட்டபின் பிக்ஷா வந்தனத்தை ஸ்ரீ பெரியவா ஏற்க வருகிறார். பிக்ஷை செய்யும் பெரும் முக்கியஸ்தர்களான அன்பர்களிடம் பண்பு மாறாமல் அவர்களின் க்ஷேமலாபங்களை விசாரித்துக் கொண்டிருந்தாலும், ஸ்ரீ பெரியவாளின் சிந்தனையாவும் அந்த முக்கியத்துவமில்லாத அநாமதேய தெலுங்கு பக்தரிடமே இருப்பதாக மகானின் உடல்மொழி வெளிப்படுத்தியது.
அந்த பக்தரைத் தேடிவர தான் அனுப்பியிருந்த கைங்கர்ய அன்பர்கள் திரும்ப வருகின்றனரா என்று அவ்வப்போது ஸ்ரீ பெரியவா ஆவலுடன் பார்த்தபடி அதே சமயம் எதிரே உள்ளவர்களிடமும் பேசியபடி இருப்பது தெரிந்தது.
தேடிப்போனவர்கள் நாலாபக்கமும் சல்லடைப் போட்டு அவசர அவசரமாகப் பார்த்தும் அந்த பக்தரைக் காணவில்லை.
அப்போது ஸ்ரீ பெரியவாள் அந்த பக்தரின் ஊரின் பெயரைக்கேட்டுத் தெரிந்துக் கொண்டதுதான் கை கொடுத்தது. அந்த ஊரைச் சொல்லி அந்த ஊருக்கு எத்தனை மணிக்கு பஸ் என்று ஸ்ரீ பெரியவா விசாரிக்கிறார். அது ரயில் நிலையமில்லாத ஊர் என்று அவர் அறிவார். அவருக்கு கிடைத்த பதிலிலிருந்து அந்த ஊருக்கு சுமார் அரைமணியில் பஸ் என்று தெரிகிறது.
பின் வெகு அவசரமாக ஸ்ரீ பெரியவாளிடமிருந்து உத்தரவு பிறக்கிறது. தெலுங்கு தெரிந்த ஒரு சிஷ்யரிடம் பிக்ஷா வந்தனத்திற்கு வந்திருக்கும் பணக்காரரின் கார்களில் ஒன்றை உடனே பஸ் நிலையத்திற்குப் போக வேண்டுமென சொல்கிறார்.
“பிரசாதம் தரேன், எடுத்துண்டு போ. அந்த பிராமணரைக் கண்டுபிடித்து அதைக் குடு. நான் அம்பாளை அவருக்காக நன்னா பிரார்த்தனை பண்ணிண்டிருக்கேன். அவரும் நம்பிக்கையோட பிரார்த்திச்சுண்டா கஷ்டமெல்லாம் தீர்ந்து சௌக்கியமா இருப்பார்னு அவருக்கு மனசு நன்னா ஆகிறமாதிரி சொல்லு, இல்லாட்டா பஸ் டிரைவர், கண்டக்டரைக் கேட்டுக் கொண்டு அவா அஞ்சு பத்து நிமிஷம் அந்த பிராமணருக்காக காத்துண்டுருப்பான்னா அவரை இங்கே அழைச்சுண்டு வந்துடு நானே பார்த்து பேசி அனுப்பி வைக்கிறேன்” என்று ஸ்ரீ பெரியவா அவரிடம் கூறிகிறார்.
“அதுக்குள்ளே பெரியவா எப்படி தீர்த்தம் குடுத்துட்டு பிக்ஷை பண்ணமுடியும்? அவர் வந்துட்டு போனா அதுக்குள்ளே துவாதசியே முடிஞ்சு போயிடுமே”. அந்த சிஷ்யர் ஸ்ரீ பெரியவாளிடம் தன் கவலையை சொல்கிறார். துவாதசி முடிந்துவிட்டால் அப்புறம் அன்று போஜனம் கொள்ளக்கூடாது என்பது வழக்கு. மறுதினமும் ஏதோ விரதமானதால் அன்றும் மாலை பூஜை முடிந்தபின்தான் மகாபெரியவா பிக்ஷை கொள்ள முடியும். அதனால்தான் பணிவிடையாளர் அப்படிப் பதைபதைத்தார். ஆனால் ஸ்ரீ பெரியவாளுக்குத்தான் அப்படி பட்டினி கிடப்பதைப் பற்றியெல்லாம் சிறிதும் கவலையில்லாமல், அந்த பக்தருக்கு அனுக்ரஹம் செய்யும் வழியைப் பற்றியே விசனம் கொண்டவராகத் தென்பட்டார்.
“அதை நான் பாத்துக்கறேன். நீ சொன்னதைப் பத்தி சந்தோஷம். இப்ப நான் சொன்னதை சட்டுனு செய்” என்று கூறிய பெரியவா விபூதி, குங்குமம், அட்சதை, கற்கண்டு, திராட்சை எடுத்து குங்குமத்தை அரை நிமிடம் கருணையுடன் தியானித்து மூடிய கண்களுடன் திருவிரல் பதித்து நன்றாக பிரார்த்தித்துக் கொடுத்தார்.
அங்கே பிக்ஷைக்காக பெரும் பணக்காரர்கள் கொண்டு வந்திருந்த கனிவர்கங்களை ஒரு மூங்கில் தட்டு நிறைய வைத்து அதையும் பக்தருக்கு கொடுக்கும்படி கூறினார்.
இதற்கிடையில் எல்லோரும் கவலைப்பட்டவாறே துவாதசி முடியும் காலம் மிகவும் நெருங்கிவிட்டது. அந்த கைங்கர்யகாரருக்கு மட்டுமே ஒரு உண்மை தெரிந்துவிட்டது. இப்படி நேரம் கடந்துவிட்டதால் ஸ்ரீ பெரியவா வெறுமனே துளசி தீர்த்தம் அருந்திவிட்டு தன் பாரணை என்பதான போஜனத்தை முடித்துக் கொண்டதாக காட்டிக் கொள்ளப் போகிறார் என்று அவருக்கு நிச்சயமாக தெரிந்துவிட்டது. அந்த ரகசியம் அந்தரங்கமானவர்கள் தவிர எவருக்கும் தெரியாமல் மறைத்து, மடத்தில் மற்ற எல்லோரும் அறுசுவை உணவு பாயசத்துடன் உண்டு, நிறைய செய்து அதிலேயே ஸ்ரீ பெரியவா மனம் குளிர்வார் என்பதும் தெரிந்தது.
இப்பேற்பட்ட அபாரக் கருணையை எண்ணி அந்த கைங்கர்யம் செய்பவருக்கு கண்ணில் நீர்முட்டியது.
இந்தக் கவலையோடு போனவர், அந்த ஆந்திர பிராமணரை பத்து பன்னிரெண்டு நிமிஷத்திலேயே அழைத்து வந்திருந்தாலும், அன்றைய அல்ப துவாதசி மாமுனிவரின் துளசி தீர்த்தம் உட்கொண்டதிலேயே முடிந்து விட்டிருந்தது.
ஆனாலும் அழைத்து வரப்பட்ட பக்தரைப் பார்த்ததும் அந்த பரமதயாளரின் திருமுகத்தில் அத்தனை பிரகாசம்! எவரோ ஒரு அநாமதேய பக்தருக்காக இப்படி இதய ஆழத்திலிருந்து தவித்து, துடித்து அருள் சொரியும் காருண்ய வள்ளலை என்னென்று போற்றுவது?
லீலா நாடகம்
“பெண்ணுக்கு கல்யாணம்……… மடத்திலேர்ந்து ஏதாவது உதவி வேணும்” என்று ஒரு ஏழை தம்பதிகள் ஸ்ரீ பெரியவாளிடம் வந்து நின்றனர்.
ஸ்ரீ பெரியவா அவர்களைக் கருணையோடு நோக்கினார்.
“நான் ஒரு சந்யாசி. ஒரு பைசாகூட கையால் தொட்டதில்லை. என்னிடம் கேட்டு வந்திருக்கிறாயே” என்று ஒரு குறும்புப் புன்னகையுடன் அதன்பின் நடக்கப்போவதை எல்லாம் அறிந்த திரிகாலஞானி ஒன்றும் அறியாதவராய் கேட்டார்.
அச்சமயம் காமாட்சி கோயில் தலைமை ஸ்தானீகர் பிரசாதம் கொண்டு வந்தார். முதலில் பெரியவாளுக்கு பரிவட்டம் சமர்ப்பித்தார். பின் குங்குமப் பிரசாதத்தை சமர்ப்பித்தார்.
ஸ்ரீ பெரியவாள் பரிவட்டத்தைக் கழற்றி அதை பெண் கல்யாணத்திற்கு உதவிகேட்டு வந்தவருக்கு கட்டச் சொன்னார். யாசகம் கேட்டு வந்தவருக்கு இப்படி ஒரு யோகம் அடித்தது.
பின் பெரியவா அந்த காமாட்சி குங்குமத்தை அவரிடம் கொடுக்கச் சொல்லி “நீயே எல்லோருக்கும் கொடு” என்றார். பரிவட்டம் கட்டிக் கொண்டவருக்கு ஒன்றும் புரியவில்லை.
இருந்தாலும் ஸ்ரீ பெரியவாளின் உத்தரவை சிரமேற்கொண்டு பரிவட்டம் கட்டிய சிரத்தையோடு அனைவருக்கும் குங்குமப் பிரசாதத்தை அவர் தந்துக் கொண்டிருப்பதை பார்த்தபோது அவர்தான் அங்கே சந்யாசியோ என்ற சந்தேகம் எழும்படி இருந்தது.
அந்த சந்தேகம் துளிக்கூட எழாதவர்களாய் அப்போது திமு திமு வென்று உள்ளே வந்த மார்வாடி பக்தர் கூட்டம் பரிவட்டம் கட்டியவர்தான் இந்த மடத்து சந்யாசி என்று நம்பி அவரை நமஸ்கரித்து நூறு, இருநூறு என்று காணிக்கைகளைத் தந்து அவரிடம் குங்குமப் பிரசாதமும் பெற்றுக் கொண்டனர்.
அவருக்கு பெண் கல்யாணத்திற்கு ஒரு தொகை சேர்ந்தேவிட்டது.
இந்த லீலாநாடகம் நடந்து முடிந்ததும் ஸ்ரீ பெரியவா அந்த மார்வாடி பக்தகர்களுக்கு ஆசிர்வதித்து பிரசாதம் இரண்டாம் முறையாக தந்து அனுப்பினார்.
ஸ்ரீ மகான்களின் சன்னதியில் கேட்டதெல்லாம் கிடைத்தேயாகும் என்பதை யாசகம் கேட்டுவந்தவர் புரிந்துக் கொண்டார். ‘நான் பைசாகூட கையால் தொட்டதில்லை’ என்ற ஞானியின் தர்மமும் அங்கு காப்பாற்றப்பட்டு விட்டதையும் அந்த பக்தர் உணரலானார்.
இப்பேற்பட்ட கருணைமிகு தவசீலரை நாம் அடையும் சரணாகதம் நம்மை உய்வித்தருளி சகல ஐஸ்வர்யங்களையும் சர்வ மங்களங்களையும் நல்வாழ்வோடு நல்கும் என்பது சத்தியம்.
— கருணை தொடர்ந்து பெருகும்.
(பாடுவார் பசிதீர்ப்பாய் பரவுவார் பிணிகளைவாய் சுந்தரமூர்த்தி சுவாமிகள் தேவாரம்)
___________________________________________________________________________________________________________________________
Shri Shri Shri Mahaperiyavaal Mahimai (4-3-2013)
“Desperate Divine blessings”
Shri Mahaperiyava, due to His kindness, to bless all the people, like a Sugabrahma Rishi Saint, took avatar as Shri Shri Shri Mahaperiyava, walked this earth and blessed us.
Periyava blesses everyone, who reaches out to His Sannidhanam. His blessings does now know if the people are rich or poor. There are multiple incidents that stand as an example for this.
Periyava was traveling around southern Andhra Pradesh during 1966-69. He had camped in a small village. That day, the Dwadashi was supposed to be only for a limited duration after sunrise. People observing fast on Ekadashi, are supposed to complete their Pooja and break their fast by eating during that time. Periyava who set an example for everyone in following the Shastras, followed this very strictly.
Periyava woke up at 3 am in the morning and started the Chandramouleeswara Pooja without any delay, since Dwadashi will be over by 8 am.
An old Brahmin belonging to a poor family from the local area had come for Periyava’s darshan at that time. Periyava stopped on seeing him. All the Sippanthis were in a hurry. They wanted Periyava to hurry too, so that He can complete the Pooja on time for the Bikshavandanam before 8 am that day. They were upset that the Brahmin had come at a very wrong time. They asked the devotee to go now and come back after the Pooja is over.
But Periyava stopped them and looked at the devotee from head to toe thereby blessing him with His eyes and enquired about his problem. Periyava mentioned the Sanskrit word “Bahusamkshepam” so that the devotee can explain his problem in short. But he did not know how to explain his problem in short.
The devotee was very humble and did not want to hold Periyava for long. He said that, he was unable to explain his problem quickly and also that he was supposed to go back to his village as soon as possible. So with tears in his eyes, he requested Periyava to bless him and moved back allowing Periyava to continue for His Pooja.
Periyava enquired the details about his village and then proceeded for His Pooja. Periyava came back after completing the Chandramouleeswara Pooja, but it did not look like He was ready for Bikshavandanam. A rich industrialist from Chennai had come for Bikshavandanam that day. They had bought items to fill up the entire Srimatam, but Periyava’s eyes did not see them. The eyes were moving here and there looking for someone else.
With the time for Dwadashi coming to an end, the other devotees were surprised that Periyava was busy looking for somebody and not accepting His Bikshavandanam. After looking all over the place for some time, Periyava asked about the whereabouts of the devotee who had come in the morning.
Periyava asks the Sippanthis to find out about that devotee and bring him here. Then Periyava proceeds to Bikshavandanam. He talks to the other devotees and enquires their well-being, but His body language said that He was still looking for the devotee who came in the morning. Periyava kept looking outside to see if the Sippanthis were able to find the devotee and bring him back here.
The Sippanthis looked everywhere, but were unable to find that devotee. Periyava, who knew the name of the devotee’s village, immediately enquired about the next bus to that place. It was easier, since there were no railway station in that village, bus was the only mode of transport. There was a bus to that village in another half an hour.
Periyava immediately asks a Shishya well versed in speaking Telugu to go to the bus stand in one of the devotee’s car. Periyava continued, “I will give you prasadam. When you reach the bus stand and find the Brahmin, give the prasadam and tell him that everything will be alright and his problems will be solved. If the bus driver or conductor agree to wait for 5-10 minutes, then bring the devotee here.”
The Shishya replied, “How can Periyava complete the Bikshavandanam on time? If I bring the devotee here, then Dwadashi will be over.” If the fast is not broken during Dwadashi, then one should not consume food. If the fasting needs to be observed the following day for some reason, then Periyava will break His fast only after completing His Pooja the following day evening. This was the reason for the Shishya’s concern. But Periyava was not concerned about the fast and wanted to make sure that the devotee was blessed.
Periyava replied, “I will take care of it. You now do as I said.” Periyava took a pinch of kumkum, closed His eyes, prayed and then gave it to the Shishya along with Vibuthi, raisins, Atchathai to be given to the devotee. Periyava also gave a bamboo plate full of fruits that were brought by the rich devotee for Bikshavandanam.
Just like how others had worried, Dwadashi was almost about to be over. The Shishya knew a secret. During these times, usually Periyava will drink some Thulasi water and complete His fast. This did not stop there. This will be known only to few. Periyava also make sure the others in the Srimatam enjoy the feast that will be served with Payasam for the other devotees breaking their fast. They used to shed tears on seeing Periyava’s kindness.
Even though the Shishya had successfully bought the devotee back in 10-12 minutes, Periyava had only the Thulasi water on the Dwadashi day. But Periyava’s face brightened on seeing the devotee. Who else could be so kind to their devotees and bless them from the depth of their heart?
Divine Drama
A poor couple had come to the Srimatam seeking some help for their daughter’s marriage. Periyava looked at them with kindness and said, “I am a Sanyasi, I do not touch any money. Why have you come to me seeking help?” Periyava smiled as if He did not know what events are going to happen in the next few minutes.
The chief priest of Kamakshi temple had come for Periyava darshan and to give the prasadam. He had bought kumkum prasadam and parivattam (cloth headband). Periyava removed the parivattam and asked that be given to the father who had come for help. After that, Periyava gave him the kumkum and asked it to be given to everyone there. The girl’s father did not understand what was going on, but followed as Periyava had told. For an instant, everyone thought if he was the Sanyasi there.
At the same time, a large group of Marwadi devotees came there. Looking at the father with parivattam and distributing kumkum, they thought it was the Sanyasi and gave 100-200 denominations and received prasadam. A good amount was collected for his daughter’s marriage. Once this divine drama was over, Periyava gave prasadam for a second time to the Marwadi and blessed them all.
The devotee realized that in Periyava’s Sannidhi, all the wishes will be fulfilled. They also realized that Periyava had kept His dharma of not touching any money.
It is true that if we surrender at the feet of Periyava we will be blessed with health, wealth, peace and happiness.
Grace will continues to grow.
(Appease the hunger of those who sing, Cure the disease of those who spread your name – Sundaramurthy Swamigal Devaram)
Categories: Devotee Experiences
‘ எவரோ ஒரு அநாமதேய பக்தருக்காக இப்படி இதய ஆழத்திலிருந்து தவித்து, துடித்து அருள் சொரியும் காருண்ய வள்ளலை என்னென்று போற்றுவது? ‘……
என் கண்களில் கண்ணீர் தாரை தாரையா வழிந்தது. தன் பசியை கூடா பாராமல், தன் பக்தரின் துயருக்காக பட்டினி கிடந்த இந்த மஹானை எப்படிதான் போற்றுவது?