56.2 Sri Sankara Charitham by Maha Periyava – Suffering even in helpful service!

Jaya Jaya Sankara Hara Hara Sankara – The poignant chapter where Sri Periyava explains that any action we perform cannot be 100% good. Lot of real life and practical examples reminding ourselves on the verity of life. Makes us amaze at the way Periyava’s perspective of things.

Many Jaya Jaya Sankara to Shri ST Ravikumar the translation and Smt. Sowmya for the solid drawing and audio. Rama Rama

 

உபகாரப் பணியிலும் அபகாரம்!

இத்தனை லிஜிஸ்லேஷன்கள் (சட்டங்கள்) கொண்டுவரப் பட்டிருக்கின்றனவே, இவை அத்தனையும் யாருக்கோ நல்லது செய்யும் உத்தேசத்தில் கொண்டு வந்ததுதானே?ஆனால் எந்த லெஜிஸ்லேஷனாவது எதிர்ப்பு இல்லாமல் பாஸாகி இருக்கிறதோ? வாக்-அவுட், டெமானஸ்ட்ரேஷன், ஹர்த்தால் என்று போகிற அளவுக்கல்லவா எதற்கும் ஆப்போஸிஷன் வருகிறது?

என்ன அர்த்தம்?

எந்த நல்ல திட்டம் கொண்டு வந்தாலும் அதுவும் யாருக்கோ கெடுதல் செய்கிறது என்றுதான் அர்த்தம்!

அத்தனை அரசியல் கட்சிகளும் நல்லது செய்யத்தான் ஏற்பட்டிருப்பதாக அர்த்தம். அரசியல் கட்சிகளை மட்டும் சொல்வானேன்? அத்தனை மத ஸம்ப்ரதாயங்களும் நல்லதற்காகவேதான் ஸ்தாபிக்கப்பட்டதாகத் தெரிகிறது. ஆனால் கட்சிக்குக் கட்சி மதத்துக்கு மதம் சண்டையான சண்டை என்றால், யார் சொல்வது நல்லது, யார் சொல்வது கெட்டது? ஸமூஹ விஷயத்தில் (லௌகிகமாக) இதுதான் நல்லது என்று ஒரு வழியை மட்டும் வைக்க முடியாததால் தான் இத்தனை கட்சிகள் தோன்றியிருக்கின்றன. அப்படியே ஆத்மார்த்தமாகவும் இதுதான் நல்லது என்று ஸர்வ ஜன ஸம்மதமாக ஒன்றைக் காட்ட முடியாததால்தான் இத்தனை மதங்கள் தோன்றியிருக்கின்றன. எந்தக் கட்சியானாலும் மதமானாலும் அதனால் யாருக்கோ லோக ரீதியான வாழ்க்கையிலோ, மனோரீதியான அநுபவத்திலோ கஷ்டம் ஏற்படுவதால்தான் எதிர்ப்பு, சண்டை, குஸ்தி ஏற்படுகிறது!

ஸநாதனிக்கு நல்லது பண்ணினால் சீர்திருத்தவாதி லபோ லபோ என்கிறான். சீர்திருத்தவாதிக்கு ஸாதகமாகப் பண்ணினால் ஸநாதனி சபிக்கிறான்; இவன் சபிப்பது மட்டுமில்லை, ‘ரிஷிகள் எல்லாம் சபிப்பார்கள். தெய்வ சாபமே வந்துவிடும்!’ என்கிறான்!

ஒரு பாஷையை அபிவ்ருத்தி செய்தால் இன்னொரு பாஷை க்ஷீணிக்கிறது!

பண்ணையாளுக்கு நல்லது பண்ணினால் நிலச் சொந்தக்காரனுக்குக் கெடுதலாகிறது.

முன்னேறிய வர்க்கம், பின்னேறிய வர்க்கம் என்று பிரிவு செய்திருப்பதில் ஒன்றுக்கு நல்லது பண்ணுவதில் இன்னொன்று படும் அவஸ்தைகள் எல்லாருக்கும் தெரிந்ததுதான்.

‘இது நல்லது’ என்று ஒரு கட்சி, ‘அப்படியில்லை’ என்று இன்னொரு கட்சி என்பதாகப் பிரிந்து நிற்பதற்கிடமில்லாமல், ஸர்வ ஜனங்களும் ஏக மனதாக, ‘இது நல்லது தான்; இந்த ஸத்கார்யத்தினால் யாருக்கும் எந்தக் கெடுதலும் வராது’ என்று நினைத்துப் பண்ணுகிறவற்றில் கூட ஒரு அஞ்சு, பத்து பெர்ஸென்டாவது கெடுதி வந்து சேராமலிருப்பதில்லை.

கோவில் கட்டுவதைவிட நல்ல கார்யம் லோகத்தில் இல்லை. அதிலேகூட பெரிய பெரிய பாறாங்கல்லுகளைக் கொண்டுவந்து இறக்குவது, அவற்றை தூக்கி நிறுத்தி கோபுரம் கட்டுவது என்கிறபோது மாடுகளுக்கும், ஆள்களுக்கும் முழி பிதுங்கி முதுகு ஒடிகிற மாதிரி ச்ரமம் ஏற்படுகிறது. ரதோத்ஸவத்தில் தேர்க்காலில் அரைபட்டு எவனோ ஒருத்தன் உயிரை விடுகிறான்.

கோவில் கட்டுவதுகூட, ஸர்வஜன ஸம்மதமான நல்லது என்று இக் காலத்தில் சொல்ல முடியாது. ‘எதற்குக் கட்டணும்? இருப்பதையும் இடிக்கணும்’ என்று அதற்கும் எதிர்க்கட்சி இருக்கலாம்! ஆஸ்பத்திரியும் ஸ்கூலும் வைப்பதுதான் இப்போது ஸர்வ ஜன ஸம்மதம். வாஸ்தவமாகவே ஜனங்களின் சரீர உபாதைகளைப் போக்குவதும், அவர்களுக்குக் கல்வியறிவு தருவதும் உத்தமமான பணிகள் தான். சாஸ்த்ர, புராணங்களிலும் இவற்றை நிறையச் சொல்லியிருக்கிறது. ஆனாலும் இவைகூட முழுக்க, unmixed-ஆக நல்லது மட்டுந்தான் செய்பவையா என்று யோசித்துப் பார்த்தால், இல்லை என்றே தெரியும். துஷ்டத் தனமான மனப்போக்குள்ள ஒருத்தன் நோயாளியாக இருப்பதாலேயே தான் பாட்டுக்கு முடங்கிக் கிடப்பான். நல்லது செய்வதாக நினைத்து அவனுக்கு வைத்யம் பார்த்து த்ருடசாலியாக ஆக்கபோக, அவன் கன்னக் கோலையோ, கத்தியையோ தூக்கிக் கொண்டு போய் கைவரிசையைக் காட்ட ஆரம்பித்துவிடுவான். எதுவும் தெரியாமல் ஸாதுவாகத் தன்பாட்டுக்கு ஏதோ ஒரு மூட்டை தூக்கிப் போட்டுவிட்டுக் கஞ்சி காய்ச்சிக் குடித்துக் கொண்டிருப்பவனுக்கு அறிவு ப்ரகாசம் உண்டாக்குவதாக நினைத்து கல்வி தரப்போக, அவன் இல்லாத குயுக்தி எல்லாம் செய்யக் கற்றுக் கொண்டு, ஃபோர்ஜரிப் பத்திரம் எழுத ஆரம்பிக்கலாம்!

நல்லதையெல்லாம் தள்ளிவிட்டுக் கெடுதலை மட்டும் பார்த்துப் பெரிசு படுத்துவதற்காகச் சொல்லவில்லை. எதிலும் கெடுதல்தான் ஜாஸ்தி என்றும் சொல்ல வரவில்லை. அஞ்சு பெர்ஸென்ட், பத்து பெர்ஸென்ட் என்று (கெடுதலைக் குறைவாகத்) தானே முதலிலேயே சொன்னேன்? இன்னம் குறைவாக ஒரு பெர்ஸென்ட், அரை பெர்ஸென்ட் என்று வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுவோம். ஆனாலும் கார்யம் என்று வந்தால் நூறு பெர்ஸென்டும் நல்லதாகவே இருக்க முடியாது என்பதுதான் உண்மை என்று நிரூபணம் ஆகிறதா இல்லையா?

‘ஐயோ நாம் அப்படி நினைத்துப் பண்ணினோம்; இப்படி விபரீதமாக முடித்து விட்டதே!’ என்று எத்தனை ஸந்தர்பத்தில் நினைத்திருக்கிறோம்? நல்லதென்று நினைத்துப் பண்ணுவது கெட்டதில் முடிகிறதைத்தானே இது காட்டுகிறது?

ஸ்வராஜ்யம் வாங்கிக் கொடுத்த காந்தியைப் போல நமக்கு நல்லது பண்ணினவரே இல்லை என்று விழாக்கள் கொண்டாடித் தலைவர்களெல்லாரும் புகழாரம் சூட்டுகிறார்கள். ஆனாலும் அவரோ ஸ்வராஜ்யம் வந்து ஐந்தாறு மாஸங்களுக்குள் அஸாஸினேட் ஆவதற்கு (கொலை செய்யப்படுவதற்கு) முந்தியே, தேசம் இரண்டாகப் பிரிந்ததில் லக்ஷக்கணக்கில் ஜனங்கள் கொன்று கொண்டு ரணகளரியானதைப் பார்த்து மனஸ் தாங்காமல் ‘இதற்காகத்தானா ஸ்வயராஜ்யம் வந்தது?’ என்று புலம்பும்படியாயிற்று! ஸ்வதந்த்ர இந்தியாவில் அந்த ஐந்தாறு மாஸம் ஜீவிப்பதற்குள்ளேயே அவர் மனஸுக்கு ஏற்காத அநேக விஷயங்கள் நடந்து அவர் பட்டினிகூடக் கிடக்க வேண்டியதாயிற்று.

நல்லது பண்ணப் போய் எப்படி பயங்கரமாகக் கெட்டது புறப்பட்டுவிடுகிறது என்பதை நன்றாக தெரிவிப்பதாக ‘கிணறு வெட்ட பூதம் புறப்பட்டது!’ என்று பழமொழியே இருக்கிறது.

இன்னொரு பழமொழி: ஒரு ப்ரச்னையைத் தீர்க்கப் பரிஹாரமாக நினைத்து என்னவோ ஒன்று பண்ணுகிறோம். அப்போதைக்கு மூலமான ப்ரச்னை தீர்த்த மாதிரியிருக்கிறது. ஆனால், போகப் போக, நாம் பண்ணின பரிஹாரத்திலிருந்தே எதிர்பார்க்காத கஷ்டங்கள் உண்டாகின்றன! வியாதி தீரச் சாப்பிடும் மருந்தே அப்புறம் அதைவிடப் பெரிய வியாதியை ஏற்படுத்துவதையும் பார்க்கிறோம். “Remedy worse than disease” என்கிறார்கள்!

இதையெல்லாம் பார்த்துவிட்டு, ‘சும்மாக் கிடப்பது தான் ச்லாக்யம், நல்லது பண்ணுகிறேன் என்று ஆரம்பிக்கப் போனால் நல்லதற்கில்லாததெல்லாம் கிளம்பி விடுகிறது’ என்பதைத் தெரிவிப்பதாக ‘சும்மா இருக்கிற சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி’ என்றே பழமொழி இருக்கிறது!

_____________________________________________________________________________________________________________________________

Suffering even in helpful service!

Aren’t the several legislations brought about with the intention to benefit some one?  However, have these legislations been passed without any opposition?  Is it not that there is opposition to everything, to the extent of resorting to walk-out, demonstrations, hartal, etc.?

What does all these mean?

It means that whichever good scheme is brought out, even that could be detrimental to some people.

It is presumed that all the political parties have been floated with the intention of doing good.  Why talk about only political parties?  All the religious traditions appear to have been established with only good intentions.  However, when there is conflict between each and every religion and between parties, whose claims should be considered as correct and whose should be regarded as wrong?  In the matter of society, since it is not possible to lay down that only a particular path is the correct one, so many political parties have come. Similarly, since it is not possible to identify one religion as the best spiritually and universally acceptable to all the people, so many religions have come to exist.  Be it a party or religion, opposition, fights, objections, etc., arise only because someone is adversely affected either by way of material life or by way of intellectual experience.

If a good is done to a religious person, the reformist makes hue and cry.  If a benefit is given to a reformist, the religious person curses.  Not only he curses, he also says that all the ascetics will curse and declare that it would result in the curse of the divine.

If one language is developed, another one suffers.

If a farm labourer is done some good, it affects the land owner.

In having created the two divisions of forward and backward, everyone knows the hardship one group suffers when the other one is extended benefit.

Even in a situation where there is no place to have a category of one party considering it good and another one bad and all the people unanimously do something which they consider to be good and feel that by doing this good deed, no harm would befall anyone, it is not that suffering does not accrue to at least 5% to 10%.

There is no better deed than building temples.  Even in that when big big boulders are unloaded and thereafter lifted up to construct the tower of the temple, it causes unbearable, almost spine-breaking pain to the cattle and workers involved.  Someone gets crushed under the wheel during the temple car festival (Rathothsavam).

Even constructing temples cannot be called a universal good deed.  There could be opposition to it, questioning why it should be constructed and on the other hand, the existing ones should be demolished.  Establishing only hospitals and schools is universally accepted. Removing the bodily illness of the people and providing education are really great acts of service.  Sastras and Puranas also have extolled them much.  But even these, if we dwell to see whether they are entirely and unmixedly good, it will be known that they are not so.  A person with evil mind, if sick (suffering from some illness), will remain confined to himself.  Thinking that we are doing a good act, if he is medically treated and made to become a strong person, he might start showcasing his abilities taking a stick or knife.  If a simple person who is engaged in manual labour of lifting loads and satisfied with only having porridge for his daily food, is provided with education, with the intention of making him mentally bright, he might learn short cuts and tricks which he was not knowing earlier and start writing forged documents.

I am not saying all these only to see the negatives and exaggerate them, ignoring the positives.  I am also not trying to say that in all the things, negatives are more.  Did I not mention them to be only about 5% to 10% (negatives being on a lower scale) even earlier? We may even assume it, as still less at ½% or 1%.  However, is it not proved that when you consider any act, it may not be 100% purely good?

Have we not wondered on several occasions that alas it has happened this way, although we had thought it would be good?  Is this not indicating that what is well-intended ends up in something bad?

Several leaders organize functions and heap praise on Gandhiji as a man without parallel in doing good to the nation, for having secured self-governance.  However, he himself had to rue within 4-5 months (before being assassinated), for having secured such an independence, unable to bear the pain on witnessing the blood bath with lakhs of people getting killed, upon the nation getting split into two.  Several incidents, which were not to his liking, took place within five to six months the country could live as an independent entity, forcing him to go on fast.

To emphasise that how great harm occurs even when something is done with good intentions, there is even a proverb, ‘A demon rose up when a well was constructed’.

Another proverb: We undertake something as appeasement to solve an issue.  For the time being, it may appear that the problem is solved.  However, as days pass by, unexpected problems crop up from the very appeasement we had done.  We also observe that the medicine taken to cure a disease, itself causing a much bigger illness later.  This is what people say as, ‘Remedy worse than the disease’.

Based on all these only there is a proverb that “a pauper spoiled an otherwise lying idle conch by blowing into it”, to show that if someone starts doing something good, as keeping idle is not proper, will throw up worse things.

_____________________________________________________________________________________________________________________________

Audio



Categories: Deivathin Kural

Tags: ,

1 reply

  1. Superb and apt drawing!!
    Jaya jaya Sankara Hara Hara Sankara!!

Leave a Reply

%d bloggers like this: