லோகத்தில் சாந்தம் பரவ வேண்டுமென்றால் நாம் சாந்தர்களாக வேண்டும். இதற்கு நம் வாழ்க்கை முறைகள் நம்மை ஸத்வ குணமுள்ளவர்களாகப் பண்ண வேண்டும். சாப்பாட்டை வைத்துத்தான் ஜீவனம் என்றிருப்பதால் இப்படிப்பட்ட பழக்கங்களில் ஆஹார விஷயத்துக்கு ரொம்பவும் முக்கியத்வம் இருக்கிறது என்று புரிந்து கொண்டு பார்த்தால், உடம்பை மட்டுமின்றி உள்ளத்தையும் வளர்ப்பதாக உணவை அமைத்துக் கொள்ள நம் சாஸ்திரங்கள் போஜன விதிகளை ஏற்படுத்தித் தரும்போது அதிலே பிரயோஜனமாகும் பதார்த்தங்கள், அதோடு ஸம்பந்தப்பட்ட மநுஷ்யர்கள் என்ற இரண்டுக்கும் சொல்லி இருக்கும் லக்ஷணங்களின்படி, பதார்த்தம் இல்லாமல் மரக்கறி உணவாக இருக்க வேண்டுமென்று முடிவாகிறது. – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்
If we want peace in the world we should become peaceful first. Our life style should be such that we develop Satva Guna in us. Our life is based on food. Hence food plays a vital role in development of Gunas. Sastras have prescribed food habits not only for nourishment of the body but also for nourishing the mind and have specified the characteristics of the food items and also of the person preparing the food. This is possible only if the food is vegetarian. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal
Categories: Deivathin Kural, Golden Quotes
Can someone tell what kind of vegetables are acceptable as per our shastras on which days? Like, we should be avoiding Onion and Garlic, this day this vegetable is not supposed to be cooked etc.