கிருஹஸ்தர்கள், முக்யமாக ஸுமங்கலிகள் அளவாக வெற்றிலை போட்டுக் கொள்வதில் தப்பேயில்லை. தாம்பூலம் கொடுத்து உபசரிப்பதே மங்களம் என்று இருக்கிறது. பூஜையிலும் தாம்பூலம் அர்ப்பணம் பண்ண வேண்டும். அது ஸெளபாக்ய சின்னம்; அதோடு ஜீர்ணகாரி, ரத்த சுத்தி. சுண்ணாம்பில் கால்ஷிய ஸத்து இருக்கிறது. இத்தனையிருந்தாலும் அது ஸாத்விகம் இல்லை. அதனால்தான் பிரம்மச்சாரி, ஸந்நியாஸி இருவருக்கும் அது கூடாது என்று வைத்திருக்கிறது. லோக வியவஹாரங்களைக் கவனிக்க வேண்டிய க்ருஹஸ்தர்களுக்கு ராஜஸ குணமும் இருக்கலாமென்றே தாம்பூல தாரணம் அநுமதித்திருக்கிறது. அதற்காக ராஜஸ குணம் மட்டுமே இருக்கும்படியாக ஓயாமல் தாம்பூல சர்வணம் பண்ணக்கூடாது. – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்
It is not wrong for Gruhasthas, especially Sumangalis (married women) to chew betel leaves in limited quantity. Giving Thamboolam (betel leaf and betel nut) is considered auspicious. Betel leaves are offered during puja. It is a sign of prosperity. Chewing of betel leaves [with a small quantity of betel nuts and a pinch of white lime] helps in digestion and cleans the blood. Lime contains calcium. Though it has all these good features it is not ‘Saatvik’. That is the reason chewing of paan is prohibited for Brahmacharis and Sannyasis. Gruhasthas have to engage in worldly affairs. So they need to have Raajasa guna and are therefore permitted to consume it. But the consumption should be limited to ensure it does not promote an overdose of Rajasa Guna. –Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal
Categories: Deivathin Kural, Golden Quotes
Leave a Reply