Jaya Jaya Sankara Hara Hara Sankara – “I have no mind and no burden” – A supreme secret told very casually by Sri Periyava to one of his devotees. In Deivathin Kural Sri Periyava often stresses on the importance of getting rid off the mind to attain Adwaitha Mukthi. The significance of paropakaram (helping others) which removes our Paapam has also been subtly highlighted in this episode.
Many Jaya Jaya Sankara to Shri B. Narayanan mama for the great compiling, translation, and drawing.
ஸ்ரீ ரா.கணபதி கண்ட மஹாபெரியவா—Series 3–Chapter 4
இந்த மானுடநேய மாகருணையில் அடியார் துயரைத் தனதேயாகத் தாங்கி அவர் ‘கண்ணநீர் சோர நின்ற’ நெகிழ்ச்சி மிகு நிகழ்ச்சிகள் பார்க்கலாம்.
1957 நவராத்ரியின்போது சென்னைக்கு வருகை புரிந்து நெடிய பல மாதங்கள் ஸமஸ்கிருதக் கல்லூரியில் முகாமிட்டிருந்தபோது ஒரு மாலை வேளை.
புத்ர சோகத்தில் தவித்த ஒரு தாய் பெரியவாளிடம் ஆறுதல் நாடிக் கண்ணீர் வடித்துப் பிரார்த்தித்தாள். தன்னுடைய சோகம் ஆறுவதற்கு மட்டுமல்ல, தன்னைச் சோகத்தில் ஆழ்த்திச் சென்றுவிட்ட புத்திரனின் ஆவி ஆறுவதற்கே முக்கியமாகப் பிரார்த்தித்தாள். ஏனென்றால் அவன் இயற்கை மரணம் அடையவில்லை. கல்லூரியில் படித்துவந்த கட்டிளங்காளை மின்சார ரயில் விபத்தில் அபம்ருத்யுவாக மாண்டு போயிருந்தான். இவ்வாறு உயிரழப்பவர்கள் அமைதி காணாமல் ஆவியாக அலை அலை என்று அலைவதாக நம்பிக்கை இருக்கிறதல்லவா? அந்த எண்ணத்தின் மேல்தான் செல்வ மகனின் ஆவிக்குச் சாந்தி வேண்டி ஸ்ரீசரணரிடம் அத் தாய் அழுது வேண்டினாள்.
“அந்த சாந்தி, இந்த ஹோமம் என்று ஒவ்வொருத்தர் ஒவ்வொன்று சொல்கிறார்கள். ஆஸ்தி, பாஸ்தி எல்லாம் விற்று அத்தனையும் பண்ணவும் தயார்தான். ஆனாலும் வாஸ்தவமாகவே இந்தர் பரிஹாரமெல்லாம் அவனைச் சேருமா, சாந்தி பண்ணுமா, அப்படி அவன் சாந்தியானாலும் ஆகிவிட்டான் என்று எனக்கு நிச்சயமாகி நிம்மதி தருமா என்று தெரியவில்லை. பெரியவா வாயினாலே என்ன வருகிறதோ அதுதான் நிஜமான பரிஹாரம் என்று மட்டும் நிச்சயமான நம்பிக்கை இருக்கிறது. அவன் பேயாகத் திரியாமல் பெரியவாதான் காப்பாற்றிக் கொடுக்கணும்” என்று தேம்பல்களுக்கிடையே சிக்கிச் சிக்கித் தெரிவித்தாள் அன்புத்தாய்.
‘பரிவே உருவாய்’ என்று ஒரு சொற்றொடர் அடிக்கடிச் சொல்கிறோமே, அது சொற்றொடராக மட்டுமில்லாமல் உயிருதாரணமாக இருப்பது ஆபூர்வமே. அப்பேர்ப்பட்டதோர் அபூர்வ மூர்த்தியாக அப்போது ஸ்ரீசரணர் சமைந்திருந்தார்.
அவரிடமிருந்து என்ன திருவாக்கு வரப்போகிறதென்று பெண்மணி ஆர்வமாக இருந்தாள்.
அருள் சுரக்கும் திருநயனத்தை மூடி உட்பார்வையைத் திறந்து கொண்டார் தயாமுனி.
ஒரு யுகத்தைத் தன்னுள் இறுக்கிக்கொண்ட ஒரு நிமிடம் சென்றது.
திரு நயனம் திறந்தது. திரு வாயும் திறந்து கனிவு சொட்டச் சொட்ட முனிவர் பேசினார்.
“சாந்தி, ஹோமம் ஒண்ணும் வேண்டாம். கிராமத்துல இப்பப் பண்ணை வேலை நடந்துண்டு இருக்கோன்னோ? அங்கே இருந்து கவனிச்சுக்க மனுஷாளும் இருக்காளோன்னோ? அதனால, வெயில்ல வேர்க்க விறுவிறுக்க ஒழச்சுக் கொட்ற குடியான ஜனங்களுக்கு ஹிதமா நீர்மோர் நெறயக் கொடுக்கறதுக்கு ஏற்பாடு பண்ணு. தவிச்சுண்டிருக்கிற கொழந்தைக்கு அதுவே சாந்தி பண்ணிடும். நல்ல கதிக்கும் அனுப்பிச்சுடும். நீயும் நிம்மதியா இரு.”
எத்தனை எளிமையாகப் பரம வேதனைக்கும் சோதனைக்கும் மாற்று மருந்து சொல்லிவிட்டார்?
சாஸ்திரீயச் சடங்குகளான சாந்தி, ஹோமம் ஆகியவற்றின் சக்தியையும் அவசியத்தையும் வெகுவாக வலியுறுத்துபவரே ஸ்ரீசரணர். பரிஹாரம் தேடிவரும் அடியார் பலருக்கு அவற்றை அவர் விதித்திருப்பதும் உண்டு. ஆனால் இந்தப் பிள்ளை, அம்பாள் விஷயத்தில் குறிப்பாக என்ன கண்டாரோ, சடங்குகள் வேண்டாம் என்றே சொல்லி, தீன ஜனங்களுக்கு உபகரிப்பதை விதித்தார்.
ஸஞ்சீவி பர்வதமே பெற்றுவிட்ட உணர்வோடு பெண்மணி திருவடியில் விழுந்தாள். குலுங்கக் குலுங்க அழுதவாறு நமஸ்கரித்த நிலையிலேயே இருந்தாள். அது என்ன அழுகை என்று யார் இலக்கணம் கூற முடியும்?
அப்போதுதான் அது நடந்தது. ஸ்ரீசரணர்களின் கண்களிலிருந்தும் மாலை மாலையாகக் கண்ணீர் வழிந்தது!
அவளுடைய புத்ர சோக தாபம், அந்தப் புத்திரனுடைய ஆவியின் தாபம் ஆகியவற்றைத் தணித்துக் குளிர்விக்க அக் கண்ணீரே போதுமானதாயிருந்திருக்கும்! ‘சாந்தியும் ஹோமமும் வேண்டாம், நீர்மோர் உபசாரம் போதும்’ என்றாரே, அந்த நீர்மோருக்குக்கூட அவசியமில்லாமல் செய்திருக்கும், நீராளமாக அவர் உருகிப் பெருக்கிய பாஷ்ப அம்ருதம்!
The tears of saints more sweet by far
Than all the songs of sinners are
என்றான் கவி ஹெர்ரிக். அந்தக் கவியின் மத மரபுப்படி மக்கட்குலம் முழுதுமே sinners ஆகிய பாவியர்தான். இப் பாவியரனைவரின் பாட்டுக்கள் அனைத்தையும்விடப் பாவன அடியார்களின் கண்ணீர் பன்மடங்கு மதுரமானது என்கிறான். நமது பாவன புருஷரின் கண்ணீரோ தாபத்தையும், அந்தத் தாபத்துக்கு வித்தான பாபத்தையும் கழுவியே விட்ட கங்கையாகும்.
நமஸ்கரித்த பெண்மணி எழுந்திருந்தபோது அழுகை அடியோடு நின்று அவள் ஏற்கனவே வடித்த கண்ணீரின் சில முத்துக்கள்தான் முகத்தில் இருந்தன. குழாயை இறுக்கி மூடுவதுபோல அதன் பின் அவள் கண்ணீர் வடிக்க முடியாமல் அருளாளர் கருணை மந்திரம் போட்டுவிட்டார் !
அந்த ‘மந்திரம்’ அவள் அழ வேண்டிய அழுகையெல்லாம் இறுக்கி அவர் கண்களுக்கே இடம் மாற்றி விட்டது !
எழுந்திருந்தவள் தன் தெய்வத்தின் திருமுகத்தில் உலராத சில நீர் முத்துக்களைக் கண்டாள். பதைத்துப் போய்ச் சொன்னாள்:
“என் பாரமெல்லாம் பறந்து போயிடுத்து. ஆனா பெரியவா மனஸைக் கஷ்டப்படுத்திட்டேன் போல இருக்கே…..”
இடை மறித்து இன்முறுவலுடன் பேசினார் அருளாளர். ”அதை நெனைச்சு புது பாரத்தை ஏத்திக்காதே! பெரியவாளுக்கு மனஸும் இல்லே, கஷ்டமும் இல்லே”.
பிரஸாதத் தட்டை நகர்த்தி, எந்த வார்த்தைக்கும் இல்லாத லளிதப் பரிவோடு ஆசி கூறி அனுப்பும் திருநோக்கையும், தலையாட்டலையும், கையசைப்பையும் அருளினார்.
கருமேகம் மூடி வந்தவள் இளநிலா ஒளியோடு திரும்பினாள்.
“பெரியவாளுக்கு மனஸும் இல்லே, கஷ்டமும் இல்லே” என்று ஏதோ பேச்சுவாக்கில் சொன்னதுபோல அவர் சொல்லிப் போனதற்குள்தான் எப்பேர்ப்பட்ட ஆழ்ந்த உண்மை உள்ளது
____________________________________________________________________________________________________________________________
Maha Periyava As Shri Ra.Ganapathy Saw Him-Series 3-Part 4
Let us look at some of those incidents when, out of His humane compassion, He took on Himself the miseries of the devotees, and shed tears.
It was an evening In 1957, during NavarAthri, when He had come to Chennai and stayed there for many months.
A mother who was languishing at the death of her son came to Him and stood praying, her eyes pouring out tears. She prayed, not only for her grief to abate, but chiefly for her son’s spirit which plunged her into a sea of agony, to get released . Because, the young boy did not have a natural death, but died in an accident in the electric train when he was studying in the college. There was a belief that those who have unnatural deaths like this, would be wandering as ghosts without peace. Because of this only, she came there, crying, to pray for her son’s ‘Shanti’.
“Each one is asking me to perform this Homam and that ‘Santhi’. I am ready to perform them by selling off my properties. But I am not certain If all these will put his spirit at peace and if so, how to ascertain that he is really at peace with himself? But I have complete belief that whatever Periava says will be the true restitution. Periava only should save his spirit from wandering as a ghost.”—The loving mother said in between sobs.
We utter the phrase “love personified’ very often; mostly, the phrase would be mere words and it is very rare that those words would come alive. On that occasion, Sree Saranar was sitting there frozen, as the true epitome of such love and compassion.
The mother was standing there anxiously, as to what Periava was going to say.
The Sage, closed His external eyes, and opened His internal.
One minute which looked like one ‘Yugam’ passed by.
The eyes opened, so also His mouth; He spoke as love and compassion poured out of His mouth.
“Neither any Santhi and nor any Homam need be performed. Farm work is now going on in the village, is it not? There are also people who look after that work, is it not? Make arrangements to give plenty of buttermilk to those peasants who toil under the hot sun. That itself will pacify the languishing child, and send him to bliss. May you also be at peace.”
What a simple solution He has given for a most painful grief !
Sree Saranar usually reiterates the power and the necessity of performing the rituals such as ‘Santi’ and ‘Homam’. He had also specified such rituals to some of the devotees who had come for such atonement. But, we do not know what He found in this situation pertaining to the mother and the son; He had said ‘No’ to such rituals and just prescribed a simple solution of quenching the thirst of the poor peasants.
The lady fell at His feet as if she had received the ‘Sanjeevini mountain’.
She remained there in that position for a long time, sobbing heavily.
That was when it happened ! Tears flowed down Sree Saranar’s eyes also ! Those tears would have been sufficient to wipe out the grief of the mother and of the son. Even what He specified—-‘Neither Santi nor Homam is needed; it is enough if you give the poor peasants plenty of butter milk.—would not have been necessary. The nectar of tears that He shed would have been sufficient.
Poet Herrick wrote,
“The tears of saints sweet by far Than all the songs of sinners are.”
As per the philosophy of the poet’s religion, the whole mankind are sinners. The poet says that the tears of the saints are much sweeter than the songs of these sinners. Our Saint’s tears , sacred as the water of the river Ganga washed off the grief along with the sin which caused that grief.
When the lady got up at last, she had stopped crying and only a few drops of tears remained on her cheeks. The Sage blessed her with the ‘MantrA of Compassion’ after which she could not cry any more, like closing the tap tightly.
That ‘MantrA’ stopped her totally from crying and transferred it to His eyes.
After getting up, she noticed a few drops of tears on her God’s cheeks, which have not dried up. Panting, she said, “All my burden has flown away. But I have upset Periava’s mind”.
Periava intervened and said, “Do not burden yourself again thinking about it. Periava has no mind and no burden”.
He moved the ‘PrasAda plate’ towards her and blessed her with His compassionate look, nodded His head, and waved His hand.
The lady who came with a dark clouded face returned with a bright one.
What a deep meaning lies in those words, “Periava has no mind and no burden” uttered as if in a casual manner!
TO BE CONTINUED………
Categories: Devotee Experiences
How true the Saint of Kanchi says about Himself,
I have no mind and no burden
Avyaja Karuna Murthi