Jaya Jaya Sankara Hara Hara Sankara – Do we know that the Sannithyam (power) of every Ambal temple all over has come from Kanchipuram Kanchi Kamakshi Amman temple. Sri Periyava explains the power of Kanchi Kamakshi in this section.
Many Jaya Jaya Sankara to our sathsang seva volunteer who wish to remain anonymous for the translation. Rama Rama
காமாக்ஷியின் சரிதை (Part 5)
பிலாகாச ரூபிணியான அம்பிகை காமனின் கரும்பு வில்லையும், மலர் பாணங்களையும் தானே தாங்கிக் காமாக்ஷியாக அமர்ந்திருக்கிறாள். ராஜராஜேஸ்வரியான அவளை வேண்டினால் தன் காரியம் நடக்கும் என்று தெரிந்து கொண்ட மன்மதன் காஞ்சிபுரத்திற்கு வந்து தபஸ் செய்தான்.
கருணாமூர்த்தியான அம்பாள் அவனுக்குப் பிரஸன்னமானாள்.
“அம்மா! என்னை பஸ்மம் செய்த அதே பரமேசுவரன் பிற்பாடு உன்னிடம் பிரேமை கொண்டான். காமத்துக்கு அதிகாரியாக என்னை நீதான் நியமித்தாய். அதனால் எவர் பிரேமை கொண்டாலும் அது என் அதிகார எல்லையைச் சார்ந்தது” என்று Jurisdiction பேசினான் மன்மதன்.
“அம்மா, பரமேசுவரன் உன்னை விவாகம் செய்து கொண்டது என் வெற்றிதான். ஆனால் அவர் என்னைச் சாம்பலாகச் சுட்டெரித்ததுதான் லோகப் பிரசித்தமாயிருக்கிறதே ஒழிய, நான் அவரை ஜயித்தது எங்குமே பிரகடனமாகவில்லை. எல்லோருக்கும் மாதாவாக இருக்கிற நீதானம்மா, இந்தக் குழந்தையிடமும் கருணை கொண்டு, என்னை ஜயசாலி என்று பிரகடனப்படுத்த வேண்டும்” என்று காமாக்ஷியைப் பிரார்த்தித்தான் மன்மதன்.
கருணை நிறைந்த அம்பிகை அக்குழந்தைக்கு மனமிரங்கினாள்.
உடனே கைலாஸத்திலும், மற்றும் ஸகல க்ஷேத்திர சிவாலயங்களில் உள்ள அம்பாள் சந்நிதிகளிலும் இருக்கிற தன்னுடைய சக்தியையெல்லாம் ஆகர்ஷித்து, இந்த பிலாகாசத்துக்குள் அடைத்துக் கொண்டு விட்டாள். கைலாஸத்தில் பார்வதியின் ஜீவசக்தியைக் காணவில்லை. அப்படியே பூலோகத்தில் எல்லா சிவன் கோயில்களிலும் உள்ள அம்பாள் மூர்த்திகளும் ஜீவகளை இழந்துவிட்டன. கைலாஸத்திலும், மற்ற க்ஷேத்திரங்களிலும் எழுந்தருளியிருக்கிற பரமேசுவரன் தம்முடைய பிரிய பத்தினியை இழந்து தவிக்க ஆரம்பித்து விட்டார். அவருக்கு மன்மதனின் ஆசையும் அம்பாளின் லீலையும் தெரியாதா? அவன் ஆசைப்பட்டபடிதான் இருக்கட்டுமே என்று அவரும் தவித்தது போல் நடித்தார். முன்பு தாம் எரித்த மன்மதனுக்கு விட்டுக் கொடுத்து விளையாடினார்; க்ஷேத்திரந்தோறும் இப்படி சிவன் தவிப்பதையும் கைலாஸத்திலும் அவர் பரிதவிப்பதையும் பார்த்த பிரம்மா காமாக்ஷியிடம் ஈஸ்வரனுக்காகப் பரிந்து தூது பேசினார்.
‘பரமேசுவரன் மன்மதாவஸ்தைக்கு ஆளாகித் தவிப்பது இப்போது ஜகப் பிரசித்தியாகிவிட்டது. மன்மதன் வேண்டியதும் இதுதான். அதற்காகவே இப்படி என்னுடைய சகல கலைகளையும் இங்கேயே ஆகர்ஷித்துக் கொண்டேன்’ என்று அம்பாள் பிரம்மாவுக்குக் கூறி, மறுபடியும் ஜீவகலையை கைலாசத்துக்கும் மற்ற சகல க்ஷேத்ரங்களுக்கும் அனுப்பி வைத்தாள். அவற்றில் அம்பிகையின் சாந்நித்தியம் உண்டாயிற்று. பரமேசுவரனும் தாபசமனமாகி திருப்தி அடைந்தார்.
இது “காமாக்ஷி விலாஸ”த்தில் காணப்படும் விருத்தாந்தம். இந்தப் புராண வரலாற்றுக்குச் சரித்திர ரீதியிலும் கல்வெட்டுகளில் நிரூபணம் (proof) இருக்கிறது.
அநேக சிவஸ்தலங்களில் உள்ள அம்பாள் சந்நிதிகளுக்குக் ‘காமகோட்டம்’ என்ற பெயர் இருப்பதாக அந்தந்த சந்நிதிகளில் உள்ள கல்வெட்டுகளிலிருந்து தெரிகிறது. சோழர் காலத்திலிருந்து பல அரசர்கள் இந்த சந்நிதிகளுக்குத் திருப்பணி செய்ததை சிலர் சாஸனமாகப் பொறித்து வைத்திருக்கிறார்கள். அவிநாசி, விஜயமங்கலம், திருவொற்றியூர், திருக்காட்டுப்பள்ளி, வல்லம், திருப்பழனம், கோயிலாடி மாதிரி பல க்ஷேத்திரங்களில் உள்ள அம்பாள் சந்நிதிக் கல்வெட்டுகளில், அந்தந்த அம்பாளைப் பற்றிச் சொல்லும்போது, “திருக்காமக் கொட்டத்து நாச்சியார்”, “திருக்காமக் கொட்டமுடைய அழகமர் மங்கையார்”, “திருக்காமக் கொட்டமுடைய அகிலநாயகியார்” என்றெல்லாம் குறிப்பிட்டிருக்கிறது. அந்தக் காலத்தில் குறிலைக் குறிக்கும் ஒற்றைக் கொம்பு, நெடிலைக் குறிக்கும் இரட்டைக் கொம்பு என்ற வித்தியாசமே கிடையாது. இதனால்தான் ‘காம கோட்டம்’ ‘காம கொட்டம்’ என்று இருக்கிறது. சிதம்பரத்திலும் இப்படி ஒரு தமிழ் கல்வெட்டு இருக்கிறது. அதோடு ஸம்ஸ்கிருதத்திலும், “காமகோஷ்ட ஸ்திதாயா;” என்று அங்குள்ள சிவ காமேசுவரியைச் சொல்லும் சாஸனம் இருக்கிறது.
எல்லா சக்தி கோட்டங்களிலும் இருந்த ஜீவகளை காஞ்சிபுரத்திற்கு இழுக்கப்பட்டு மறுபடியும் அங்கிருந்து அந்தந்த க்ஷேத்திரத்திற்கு அனுப்பப்பட்டதாகப் புராணம் சொல்லுகிறதல்லவா? அதாவது இப்போது நாம் எந்த ஒரு க்ஷேத்திரத்து அம்பாள் சந்நிதியிலும் அநுபவிக்கிற சாந்நித்தியமானது ஒரு காலத்தில் காஞ்சி காமாக்ஷியின் சந்நிதிக்கு இழுக்கப்பட்டு, பிறகு அங்கிருந்தே இந்த க்ஷேத்திரத்திற்குத் திருப்பி அனுப்பப்பட்டதாகும். இப்படிக் காமக்கோட்டத்திலிருந்தே எல்லா ஸ்தலங்களுக்கும் ஜீவகளை வந்ததால்தான், இதர ஸ்தலங்களிலுள்ள அம்பாள் சந்நிதிகளையும் “காமகோட்டம்” என்றே குறிப்பிடுகிற வழக்கம் வந்திருக்க வேண்டும்.
____________________________________________________________________________________________________________________
The Story of Kamakshi (Part 5)
Ambikai, the Bilakasa Roopini is present there as Kamakshi with Manmatha’s sugarcane bow and flower arrows in Her hands. Manmatha understood he would be able to get his wish fulfilled if he woshipped Her – also known as Rajarajeshwari. He came to Kanchipuram and performed penance.
The compassionate Ambal appeared in front of him.
“Mother! Parameshwara burnt me down. But later, He Himself developed affection for you. You had appointed me to instill passion in the minds of living beings. If someone were to fall in love, it should come under my jurisdiction” he pleaded.
He further implored: “Parameshwara’s marriage to you is a victory to me. The world is aware that He burnt me down. But the fact that I could finally influence Him is not known at all. You, Mother, should take pity on me and declare my victory”.
The sympathetic Mother agreed to the child’s request.
She immediately attracted all Her powers from the Siva temple at all Kshethrams (divine places) including Kailasam and concentrated them into the Bilakasam. In Kailasam, Parvati’s divine life force disappeared. So was the case with all the Ambal figures present in all the Siva temples in this world. Parameshwara, present in Kailasam and all the other Siva temples, experienced the pangs of separation because of the absence of His dear wife. Was He not aware of Manmatha’s wish and Ambal’s drama? He decided to concede to Manmatha’s wish, acted as if He was in sorrow and played along. When Brahma saw Siva’s yearning in Kailasam and all the Siva temples, he decided to act as a messenger on behalf of Siva and came to Kamakshi.
Ambal said to Brahma: ‘The world now knows that Parameshwara is suffering from pangs of separation. This was Manmatha’s wish too. I attracted my divine force from everywhere and concentrated it here only to satisfy him’. She then sent back the divine force to Kailasam and all other Siva temples. Ambika’s form in all these places got back their force. Parameshwara was also satisfied.
This history is narrated in ‘Kamakshi Vilasam’. Engravings on stone are available as proof of this.
Ambal Sannidhis in most of the Shiva temples happen to possess the name “KamakOttam”, which becomes evident from the inscriptions found in the respective Sannidhis. The renovation and maintenance works of these Sannidhis, being carried out by many kings right from the Chozha period, have been recorded by few as “Sasanam”. While speaking of the respective Goddesses of places like Avinashi, Vijayamangalam, Thiruvotriyur, Thirukkattuppalli, Vallam, Thiruppazhanam, Koyiladi and so on, it has been mentioned as “Thirukkamakottathu Nachiyar”, “Thirukkamakottamudaiya Azhagamar Mangaiyar”, “Thirukkamakkottamudaiya Akilanayagiyar” and the like. In olden days there were no different alphabets for short syllables (Kuril) and long (Nedil) syllables. That was how “KamakOttam” has become “Kamakottam”. There is a similar stone engraving in Chidambaram too. More so, there is a “Sasanam” in Sanskrit, referring to the “Shivakameswari” residing here as “Kamakoshta Sthithaayaaha” (कामकोटि स्थितायाः).
Don’t the Puranas hold that the Divine life-source of all Shakthi KOttams got attracted to Kanchipuram and then was sent back to the respective Kshetrams? That is, the divine vibrations that we tend to experience in the Ambal Sannidhi of any Kshetram is nothing but something which had once been pulled to Kanchipuram and then sent back to that particular Kshetram. Thus the habit of referring to the Ambal Sannidhis of so many places as “Kamakottam” must have come into being — only because of the Divine source having come from “Kamakottam” Itself.
Categories: Deivathin Kural
Leave a Reply