பால் சேர வேண்டியவர்களுக்குச் சேரவிடாதது தான் தப்பு. எத்தனையோ ஏழைக் குழந்தைகள், துர்பலர்கள், நோயாளிகள் பாலுக்குப் பரிதவிக்கிறார்கள். அவர்களுக்கு கிடைக்க வேண்டிய பாலைக் காபி விஷமாக்கி மற்றவர்கள் மூன்று நாலு வேளை சாப்பிடுகிறார்கள். இதுதான் தப்பு. காபியால், குடிப்பவர்களுக்குச் சித்தவிகாரம் ஏற்படுவதோடு நியாயமாகப் பால் தேவைப்படுகிறவர்களுக்கு அதை இல்லாமல் செய்வது ஜீவ ஹிம்ஸையுமாகிறது. காபியை நிறுத்தவிட்டு அந்தப் பாலை ஏழைக் குழந்தைகளுக்கோ, பலஹீனமருக்கோ விநியோகம் பண்ணுவதென்று வைத்துக் கொண்டால் பெரிய புண்யமாகும். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்
Preventing the milk from reaching people who need it is wrong. Many poor children, weak people and patients are in need of milk. The milk that should be reaching these people is made into coffee and consumed three or four times a day. This is wrong. Coffee not only corrupts the mind but also harms others (Jeeva Himsa) by keeping milk away from the needy. It will be a great punnya if one stops drinking coffee and gives that milk to poor children and the sick. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal
Categories: Deivathin Kural, Golden Quotes
Leave a Reply