True Story!

Thanks Sudhan for FB share….

Muruga

ஒர் உண்மைக்கதை

ஒரு இளைஞன்…………. அவன் பெயர் கடைசியில்.

அது சுதந்திரத்திற்கு முன்பிருந்த இந்தியா காந்தி நேரு படேல் போன்றவர்களைச் சுற்றி இந்திய அரசியல் சுழன்று கொண்டிருந்த நேரம்.

அந்தக் காலத்தில் சென்னையிலேயே அதிக மருத்துவ வசதிகள் கிடையாது. மற்ற ஊர்களைப் பற்றி சொல்லவே வேண்டாம்

ஒரு சிறுவன் அவனது காலில் புண் ஏற்பட்டது. சின்னப் புண் தானே என்று அந்தப் பையனும் கண்டு கொள்ளவில்லை

நாள் பட்ட அந்தக் காயம் உள்ளூர புரையோடிப் போனதால் அவனுக்கு உள்ளே குத்து வலி ஏற்பட்டது

வலி தாங்கமுடியாது தவித்த அவனை அவனது பெற்றோர் டாக்டரிடம் காண்பித்தனர்

அந்த உள்ளூர் டாக்டர் அவர்களை கண்டபடி திட்டி இப்படியா விட்டு வைப்பது? உடனே பட்டணம் போய் காண்பியுங்கள் என்றார்.

பையனைச் சோதித்த டாக்டர் உதட்டைப் பிதுக்கினார். உள்ளே செப்டிக் ஆகி விட்டது. உடனே காலை எடுக்க வேண்டும். இல்லையேல் உயிருக்கே ஆபத்தாகி விடும் என எச்சரித்தனர்

காலை எடுப்பதற்கு நீங்கள் எந்த மருத்துவ மனைக்குப் போனாலும் குறைந்தது 5000 ரூபாய் ஆகும்
இந்த மருத்துவ மனை என்றால் 3000 ஆகும். நீங்கள் எனக்குத் தெரிந்தவர் என்பதால் நான் என்னுடைய ஃபீஸைக் கூட குறைத்துக் கொள்கிறேன் மருத்துவமனை செலவுகளுக்காக மட்டும் 1500 ரூபாய் கட்டி விடுங்கள். சிகிச்சையைத் தொடரலாம் என்றார்..

அந்த நாட்களில் அரசாங்க அதிகாரிகளின் மாத சம்பளமே 15 ரூபாய் தான். 1500 ரூபாய் என்று கேட்டதும் அதிர்ந்து போனான் பையன்.

ஒரு காலை வெட்டி எடுக்க ஒரு மருத்துவருக்கு 1500 ரூபாய் கொடுக்க வேண்டுமென்றால்
அந்த காலைக் கொடுத்த கடவுளுக்கு நம்மால் அதற்குப் பிறகு என்ன தர முடியும்? இந்தக் கால் தேயும் வரை அவன் ஆலயத்தை சுற்றுவோம்.

இவ்வாறு நினைத்தவன் தன் சொந்த ஊரிலுள்ள முருகன் கோயிலுக்கு சென்றான்

108 மற்றும் 1008 என்ற கணக்கெல்லாம் இல்லை. காலை மாலை என தினமும் கணக்கு வழக்கின்றி கோயிலை சுற்றிக் கொண்டே இருந்தான்.

சில மாதங்களில் யாராலும் நம்ப முடியாத அற்புதமாக, ஏன் அந்த டாக்டரே அதிசயப்படும் வகையில் தானே ஆற ஆரம்பித்த புண் இருந்த இடம் தெரியாமல் ஓடி மறைந்தது

இனி என் வாழ் நாள் முழுதும் முருகன் புகழ் பாடுவதிலேயே கழியும்.அதுவே என் தொழில். அதுவே என் மூச்சு என்று ஊர் ஊராக பிரசங்கம் செய்யத் தொடங்கினான் அந்தப் பையன்.

அந்தப் பையன் தன் உடல் தளரும் வரை ஓர் அரை நூற்றாண்டிற்கு மேல் நின்றபடியே முருகன் புகழ் பாடிய “திரு முருக கிருபானந்த வாரியார்” என அழைக்கப்பட்ட வாரியார் ஸ்வாமிகள்.

variyar_puja_300



Categories: Devotee Experiences

1 reply

  1. Translate into English please

Leave a Reply

%d bloggers like this: