Periyava Golden Quotes-851


ஒரு பதார்த்தத்தைத் தள்ளுவதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று, அதிலே ஜீவஹிம்ஸை இருக்கக் கூடாது. இரண்டு, அது நம் சித்தத்தைக் கெடுக்கப்படாது. பாலைக் கறப்பதால் நாம் பசுவுக்கு ஹிம்ஸை பண்ணவில்லை. ஈஸ்வர ஸ்ருஷ்டியிலேயே, தான் ஈனுகிற குழந்தைகளுக்கு வேண்டிய அளவு பால் கொடுக்க மட்டுமில்லாமல் உபரியாகவும் மற்றவர்களுக்குக் கொடுக்கிற அளவுக்குப் பசுவுக்கே பால் சுரக்கிறது. அதன் பால் முழுவதையும் கன்றுக்குட்டியே குடித்தால் வயிறு முட்டிச் செத்துப் போய்விடும். யஜ்ஞாதிகளுக்காகவும் புஷ்டி வேண்டிய மற்ற ஜனங்களுக்காகவும் சேர்த்துத்தான் அது இத்தனை பாலைக் கொடுக்கும்படியாக பகவான் அதைப் படைத்திருக்கிறான். பால் தருவதால் நமக்கும் பசு தாய். அதனால்தான் “கோமாதா” என்பது. அச்வமாதா, கஜமாதா என்பதில்லை. அன்னையின் க்ஷீரத்தைச் சாப்பிடுவது மாம்ஸ போஜனமாகாது. கன்றுக்கு வயிறு நிரம்ப ஊட்டுக் கொடுத்தபின், பசு கஷ்டமில்லாமல் சுரப்பு விடுகிற வரையில் எஞ்சியுள்ள பாலைக் கறந்து நாம் எடுத்துக் கொள்வதில் தப்பேயில்லை. இதிலே பசுவுக்கு ஹிம்ஸை இல்லை. கறக்காவிட்டால்தான் பால் கட்டிக் கொண்டு மடி கனத்துக் கத்தும். இரண்டாவதாகச் சொன்ன சித்த விகாரம் க்ஷீரத்தால் உண்டாவதில்லை. பாலையும் அதிலிருந்து உண்டாகிற மற்ற பதார்த்தங்களையும் ஸாத்விகம் என்றே சொல்லியிருக்கிறது. சொல்லியிருப்பது மட்டுமில்லை. பரம ஸாத்விகர்கள் பல பேர் இவற்றைச் சேர்த்துக் கொண்டவர்களாகவே இருக்கிறார்கள். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்

There are two reasons to exclude a food item. One, it should not be obtained through violence (jeeva himsa). Two, it should not corrupt the mind. We are not harming a Cow by milking it. In the creation of Eshwara only the Cow has milk not only for its calf but also in surplus for our consumption. If a calf drinks all the milk from the cow, it will die because of overfeeding. Bhagawan has blessed the Cow with surplus milk so that its products can be used in Yajnas and for consumption by people. Since Cow gives us milk it is also our Mother. That is the reason we call her as ‘Gho Mata’. We do not call a Horse or an Elephant as ‘Ashwa Mata’or ‘Gaja Mata’.  Consuming Mother’s milk cannot be compared to consumption of meat. If we allow the calf to consume its full feed and subsequently milk the cow for our requirement, there is nothing wrong. There is no himsa (harm) to the Cow here. It will be in pain only if not milked. Consumption of milk does not lead to corruption of mind either. Milk and all its byproducts are Saatvik foods. Not only are they considered Saatvik foods, many renowned Saatvik people have included them in their diet. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal



Categories: Deivathin Kural, Golden Quotes

Tags:

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading