Jaya Jaya Sankara Hara Hara Sankara – Starting today we will see an interesting story on how Ambal became Kamakshi. It is pretty lengthy so posting in parts.
What does Kamakshi and Manmatha have in common? Why did Ambal create Manmathan and when did she took his bow and arrows? Sri Periyava explains.
Many Jaya Jaya Sankara to our sathsang seva volunteer who wish to remain anonymous for the translation. Rama Rama
காமாக்ஷியின் சரிதை (Part 1)
காஞ்சிபுரத்தில் பரம கருணாமூர்த்தியான அம்பாள் எப்படியிருக்கிறாள்? கரும்பு வில்லும் (இக்ஷுசாபம்) மலரம்பும் (புஷ்பபாணம்) வைத்திருக்கிறாள். இந்த இரண்டும் இன்னொருத்தருக்கும் உண்டு. மன்மதன் என்கிற காமன்தான் அது. காமன் காமாக்ஷி இருவருக்கும் கரும்பு வில், புஷ்ப பாணம் ஆகியன காமன் (Common) – பொது. மன்மதன் கரும்புவில்லை வைத்துக் கொண்டிருக்கிறான். அதற்கு நாண் தேன் வண்டுகள். வளைந்த கரும்பு வில்லின் ஒரு கோடியிலிருந்து மறுகோடி வரையில் குறுக்காக வண்டுகள் நாண் மாதிரி வரிசையாகச் சேர்ந்திருக்கின்றன. இந்தக் கரும்பு வில்லில் ஐந்து மலர் அம்புகளைத் தொடுத்துத்தான் சமஸ்த ஜீவப் பிரபஞ்சத்தையும் மன்மதன் ஆட்டி வைக்கிறான். உலகத்தில் உள்ள தித்திப்பு பக்ஷணங்கள் அத்தனையும் வெல்லம், சர்க்கரையில் செய்ததுதான். வெல்லம், சர்க்கரைக்கு ஆதாரம். கரும்பு தித்திப்புச்சுவை மன்மதனுக்கு வில். சுகந்தத்துக்கும் மென்மைக்கும் ரூப ஸெளந்தர்யத்துக்கும் புஷ்பங்கள் பெயர் போனவை. இப்படிப்பட்ட புஷ்பங்களில் ஐந்து அவனுக்குப் பாணங்களாக இருக்கின்றன. காதுக்கு சுகமான ரீங்காரம் வண்டிடமிருந்து வருகிறது. இப்படியாக தன் வில், அம்பு, நாண் இவற்றால் நம் பஞ்சேந்திரியங்களுக்கான அத்தனை விதமான அழகுகளையும் காட்டி, லோகத்தை காமத்தில் கட்டிப் போடுகிறான் என்று அர்த்தம். அம்பாள்தான் அவனுக்கு இப்படி இரும்பு வில்லுக்கும் பாணத்துக்கும் பதிலாகக் கரும்புவில்லையும் புஷ்ப பாணங்களையும் தந்து, எல்லா உயிரினங்களையும் கவர்ந்து இழுத்து ஆட்டி வைக்கிற சக்தியை அநுக்கிரகிக்கிறாள். சிருஷ்டி லீலை நடக்க வேண்டும் என்பதற்காகக் காமனுக்கு இந்த அதிகாரம் தந்திருக்கிறாள்.
ஆனால் ஜீவப் பிரபஞ்சம் முழுவதும் எப்போதும் இந்திரிய சுகங்கள் என்கிற துக்கத்திலேயே சிக்கிக் கொண்டு கிடப்பதையும் அம்பாள் விரும்பவில்லை. லோக ரீதியாக வாழ்க்கை நடத்துகிறவர்களும் காமத்தினால் தர்மத்தை விட்டு விடக்கூடாது; அர்த்த காமங்களையும் (பொருள் ஈட்டுதலையும்) ஆசைகளை அநுபவிப்பதையும்) கூட தர்மத்துடனேயே இணைத்து ஒழுங்கோடு வாழ வேண்டும். மனசும் இந்திரியமும் போன போக்கில் விட்டுவிடாமல் அவற்றை தர்மத்தில் கட்டுப்படுத்த வேண்டும். லோக விவகாரத்தை முழுதும் விடாமலே இப்படி கொஞ்சம் கட்டுப்பாட்டுடன் இருப்பது முதல் நிலை. அப்புறம் மனசு, இந்திரியம் இவை கொஞ்சம்கூடச் சலனமே இல்லாமல் இருக்கிற ஞான நிலை சித்திக்கும். அந்த நிலை வந்துவிட்டால் அப்புறம் ஜன்மமே இல்லை. சிருஷ்டி லீலைக்கு சகாயம் செய்கிற மன்மதனுக்கு இங்கு வேலையே இல்லை. மன்மதனுக்கு காமத்தை உண்டாக்குகிற சக்தியைத் தந்த அம்பாளேதான், காம விகாரத்தைக் கட்டுப்படுத்த தர்மத்தையும் முடிவாக அவளுடைய சிருஷ்டி லீலையிலிருந்து விடுபடுகிற ஞானநிலையான மோக்ஷத்தையும் ஏற்படுத்தியிருக்கிறாள்.
காமத்துக்காகவே ஏற்பட்ட மன்மதனுக்கு அவள் தந்த கரும்பு வில்லையும், மலர் அம்பையும் ஒரு சமயம் அவளே அவனிடமிருந்து எடுத்துக் கொள்ளும்படியாகி விட்டது. பரம காருண்யத்தால் அவள் அப்படிச் செய்தாள். வெளி நினைப்பே இல்லாத பிரம்ம ஸ்வரூபம் லோகத்திடம் கருணை கொண்டு கடாக்ஷிக்க வேண்டும். லோகத்துக்குத் தர்மத்தையும் ஞானத்தையும் அநுக்கிரகிக்க வேண்டும் என்றே, அம்பாள் காமனுக்குத் தந்த தனுஸையும் பாணங்களையும் எடுத்துக் கொண்டு காமாக்ஷியானாள்.
அது பரமேசுவரன் தக்ஷிணாமூர்த்தியாக அமர்ந்துவிட்ட சந்தர்ப்பம். ஒரே ஞானமயமான மூர்த்தியாக, பரம சாந்த ஸ்வரூபமாக, நிச்சலனமாக உட்கார்ந்துவிட்டார் தக்ஷிணாமூர்த்தி. எல்லாம் ஒன்றாகியிருக்கிற அத்வைத வடிவமாக அவர் இருக்கிறார். ஆனால் அவர் இப்படி ஞான ஸ்வரூபமாய் பரதத்துவமாய் இருந்தால் ஜீவராசிகள் என்ன ஆவது? ஜீவராசிகளைக் கை தூக்கி விடுவது யார்? இந்த ஞான ஸ்வரூபி கருணைக் கடலாகி, எல்லோரையும் கடாக்ஷிக்க வேண்டும் என்று ஜகன்மாதா திருவுள்ளம் கொண்டாள். இவள் தன் கடாக்ஷத்தாலேயே ஸர்வ லோகத்தையும் ரக்ஷித்து விடலாம்தான். ஆனாலும் ஜனங்களுக்கு உத்தம ஸதியின் லக்ஷணத்தைத் தானே நடத்திக் காட்ட நினைத்து, ஈசுவரனுக்கும் பெருமை கொடுக்க உத்தேசித்தாள். அவள் வேறு, அவர் வேறு அல்ல, ஒன்றேதான். அதாவது தன்னுடைய ஞானத்திலேயே காருண்யமும் பொங்கியிருக்க வேண்டும் என்று எண்ணினாள். அப்போது சந்தர்ப்பமும், அவள் கரும்புவில், மலர்ப்பாணம் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு காமேசுவரியாவதற்கு அநுகூலமாக ஆயிற்று.
___________________________________________________________________________________________________________________________
The Story of Kamakshi (Part 1)
What does the compassionate Ambal look like in Kanchipuram? She has a bow made of sugarcane and arrows made of flowers. These two are held by one more person. Manmatha, also known as Kama, has them. Kama and Kamakshi have in common the bow made of sugarcane and arrows of flowers. The string for the sugarcane bow held by Manmatha are the honey bees. From one bent end of the bow to the other are present the honey bees like a string. Manmatha shoots the arrows of flowers from this bow and rules the lives of all living things. In this world, all sweet dishes are made either of jaggery or sugar. Jaggery is the base for sugar. The sweet sugarcane (pertains to sense of taste) is Manmatha’s bow. Flowers are famous for their fragrance (smell), beauty (sight), and softness (touch). Five such flowers serve as arrows for him. The buzzing of the bees is pleasant to the ears (hearing). Through his bow, the string and arrows, he appeals to all our five senses and binds the world in endless desires. Instead of the regular bow and arrow, Ambal has given him the sugarcane bow and flowers as arrows. She has blessed him with the power to instill desire in all life forms. She has granted him this power to ensure that life on earth continues.
But She does not wish that humans are forever trapped in the sorrow of sensual pleasures. Even those leading a worldly life should not succumb to desires or deviate from the dharmic way of life. Earning a living (Artha) and enjoying life (Kama) should be done in accordance with dharma. The mind and the senses should not be allowed to go wayward and should be channelized by following dharma. Having this control without giving up on worldly pursuits is the first step. Later one will attain the state of gnana where the mind and the senses remain steady. Once that state is attained, there is no rebirth. Thereafter Manmatha has no work at all. Ambal who gave Manmatha the power to generate desire, also created dharma to control these desires, culminating in the state of gnana and moksha, thereby relieving the Atma from the cycle of birth and death.
There was a time when She herself had to take away the sugarcane bow and the arrows from Manmatha. She did it only out of abundant compassion. She wanted the Brahma Swaroopam, immersed in meditation, to bless the outside world with dharma and gnana. To achieve this, she took away the bow and arrow from Manmatha and appeared as Kamakshi.
That was the time when Parameshwara had gone into the meditative state as Dakshinamurthy. He took up a peaceful, unmoving posture, submerged in knowledge. As Dakshinamurthy, He was Adwaita, the only one. If He were to remain in this state, what would happen to the living forms? Who will give a helping hand to the living to elevate themselves? Jaganmata (Kamakshi) decided that His compassion should flow and bless the world. She could, of course, have protected this world with Her compassion alone. But Her intention was to follow the attributes of an ideal wife and at the same time bring credit to Eswara. He is not different from Her; they are one. She wanted to combine Her gnana with compassion. The circumstances too were conducive for Her to take up the sugarcane bow along with the arrows and become Kameshwari.
Categories: Deivathin Kural
Ennathirku Appartpattavar Avathara Purushar
Kamatchyin Kathai kathaithanthai kadavule
Kamadhenuvaha Kuraitheerthai Kadavule
Kai Koopiyavarin Kalangarai Vilakke
Kanapathium Kandanum Kapaliyum
Kamatchiyumaha Kalanthu Ninrai Karpagame
Kooravarthayillai Kalangininrene Kaaladiyil
Kaikooppi ninrene
Kaasikku Pogavendam nin Kaaladipatrinaale
Karma vinaigalum karainthu pohum kaladiyile
Kaalathai kadanthu nirkum kaliyin kankanda deivame
Karpanaikku ettavillai ninathu karunai
Kai koopininrene kamakodiye
Karaitbu odidum sagala viyathigalum
Ka Venkataraman
I am so happy that this story has come up